வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-10-21
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, October 28, 2018

டெல்லியில் ஐஏஎஸ் படித்து வந்த தமிழக மாணவி திடீர் மரணம்டெல்லியில் தங்கி ஐஏஎஸ் படித்து வந்த தமிழக மாணவி திடீரென மரணடைந்துள்ளார். சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவருக்கு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என கனவு இருந்தது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சியில் சேர்ந்து ஸ்ரீமதி படித்து வந்தார்.


இந்நிலையில் அவர் தங்கியிருந்த விடுதியில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் போலீஸிடம் தகவல் அளித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதற்கான காரணத்தை டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


தினம் ஒரு நாலடியார் அர்த்தத்துடன் - Daily one Naaladiyar with meaning - 33 - 28/10/2018

தினம் ஒரு நாலடியார்பாடல் - 31.

வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்ததனைத்
தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்தொருவு வார்
.

அர்த்தம் :


அறிவில்லாதவன், முன் செய்த தீவினை இப்போது வந்து பயனைத் தந்து துன்புறுத்தும்போது பெருமூச்சு விட்டு மனம் வருந்துவான். அத்தீவினைப் பயனை நினைத்துப் பார்த்து, இது முற்பிறப்பின் பாவத்தால் நேர்ந்தது என்று உணர்ந்து அதனை ஏற்று அமைதியாக அனுபவிக்கும் அறிவுடையோர் பிறவித் துன்பத்தின் எல்லையைக் கடந்து நீங்குவர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


தினம் ஒரு திரிகடுகம் அர்த்தத்துடன் - Daily one Thirukadugam with meaning - 23 - 28/10/2018

தினம் ஒரு திரிகடுகம் :


திரிகடுகம் - 23:
தானம் கொடுக்கும் தகைமையும், மானத்தால்
குற்றம் கடிந்த ஒழுக்கமும், தெற்றெனப்
பல் பொருள் நீங்கிய சிந்தையும், - இம் மூன்றும்
நல் வினை ஆர்க்கும் கயிறு
.

அர்த்தம் :


தானம் கொடுத்தலும், பழிக்கு நாணும் நல்லொழுக்கமும், பல பொருள்களில் இருந்து நீங்கிய நல்ல சிந்தனையும், ஆகிய இம்மூன்றும் அறத்தின் பயனைத் தரும்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Postsதினம் ஒரு திருக்குறள் அர்த்தத்துடன் - Daily one Thirukkural with meaning -33 - 28/10/2018

தினம் ஒரு குறள் :


குறள் - 33:


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்
.

அர்த்தம் :


செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Saturday, October 27, 2018

தினம் ஒரு நாலடியார் அர்த்தத்துடன் - Daily one Naaladiyar with meaning - 32 - 27/10/2018

தினம் ஒரு நாலடியார்பாடல் - 31.

ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே - ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
சென்றன செய்வது உரை
.

அர்த்தம் :செல்வத்தை விரும்பி அதனைப் பெருக்கிப் பெருஞ்செல்அறத்தை மறந்து இறந்துபோவோம் நாம் என்று எண்ணாத அற்ப நெஞ்சே! வராவோம் என்றெண்ணி ஓயாமல் உழைத்து வாழ்கின்றாய். எனினும், உன் வாழ் நாட்கள் ஒழிந்தன! இனி நீ மறுமைக்காகச் செய்யப் போவதுதான் என்ன? சொல்!

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts