வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் ஜோடி கலப்பு திருமணம்: 2 குடும்பங்கள் கிராமத்தை விட்டு தள்ளிவைப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, January 27, 2019

பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் ஜோடி கலப்பு திருமணம்: 2 குடும்பங்கள் கிராமத்தை விட்டு தள்ளிவைப்பு

மண்டியாவில் காதல் ஜோடி பெற்றோர்கள் சம்மதத்துடன் கலப்பு திருமணம் செய்ததால் 2 குடும்பங்கள் கிராமத்தை விட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.





மண்டியாவில் காதல் ஜோடி பெற்றோர்கள் சம்மதத்துடன் கலப்பு திருமணம் செய்ததால் 2 குடும்பங்கள் கிராமத்தை விட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


கலப்பு திருமணம்

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா கொல்லரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் பெங்களூருவில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த யசோதா என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் காதல் விவாகரம் இருவீட்டாருக்கும் தெரியவந்துள்ளது.
முதலில் இருவீட்டாரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடி கலப்பு திருமணம் செய்துகொண்டனர்.

கிராமத்தை விட்டு தள்ளிவைப்பு

குமார்-யசோதா ஜோடி பெற்றோர்கள் சம்மதத்துடன் கலப்பு திருமணம் செய்தாலும், இந்த திருமணத்துக்கு அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள், இரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த அபராதத்தை அவர்கள் கட்டியுள்ளனர். திருமணத்திற்கு பிறகு யசோதா, குமாருடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் யசோதா தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள், யசோதா கிராமத்துக்குள் வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் திரும்பி போக வேண்டும் என யசோதாவின் குடும்பத்தினருக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் குமார்-யசோதா ஜோடி கலப்பு திருமணம் செய்ததால், 2 பேரின் குடும்பங்களையும் கிராமத்தைவிட்டு தள்ளிவைத்துள்ளனர்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கர்நாடக மாநில பெண்கள் நலத்துறை தலைவி நாகலட்சுமி பாய், இதுகுறித்து மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக மண்டியா மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலராமேகவுடா, அந்த கிராமத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி னார். மேலும் வக்கீல் புட்டமாது என்பவரும் கிராமத்தின் பெரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதுகுறித்து யசோதாவின் பெற்றோர் கூறுகையில், கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள் தங்களை விலங்குகளை விட கேவலமாக நடத்துகிறார்கள். எங்கள் பக்கத்தில் வரவே அவர்கள் தயங்குகிறார்கள். இது எங்களுக்கு மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது என்றனர்.

கிரிமினல் வழக்கு

இதுகுறித்து ஹலகூர் போலீசார் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக மாநில பெண்கள் நலத்துறை தலைவி நாகலட்சுமி பாய் தெரிவித்துள் ளார்.

No comments:

Post a Comment