வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சார்.. 2 நாள் லீவு கொடுங்க.. என் பொண்டாட்டியை கொல்லனும்..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, January 25, 2019

சார்.. 2 நாள் லீவு கொடுங்க.. என் பொண்டாட்டியை கொல்லனும்..

"சார்.. என் பொண்டாட்டியை கொலை செய்யணும்.. 2 நாள் லீவு வேணும்" என்று கேட்ட வங்கி மேலாளரின் கடிதத்தை கண்டு அதிகாரிகள் அதிர்ந்தே போய்விட்டனர்! 




மனைவியை கொலை செய்ய, இரண்டு நாட்கள் விடுப்பு கோரி, வங்கி மேலாளர் ஒருவர், தன் உயர் அதிகாரிகளுக்கும், மத்திய அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோருக்கும் கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

பீஹார் மாநிலம் பக்ஸரை சேர்ந்தவர் முன்னா பிரசாத். இவர் ஒரு கிராம வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவிக்கு உடம்பு சரியில்லாமல் உள்ளது. கிட்னி பிரச்சனை காரணமாக ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இனி லீவு கிடையாது  

மனைவி ஆஸ்பத்திரியில் உள்ளதால் அடிக்கடி லீவு போட்டுவிட்டு அவரை கவனிக்க வேண்டி வந்தது. இதனால் ஒரு வருஷத்தில் எவ்வளவு லீவு எடுக்க முடியுமோ எல்லா லீவையும் முன்னாபிரசாத் எடுத்துவிட்டார். ஆனாலும் மனைவி குணமாகவில்லை என்பதால், இன்னும் லீவு தேவைப்பட்டது. ஆனால் இதற்கு மேல் லீவு எடுக்க கூடாது என உயர் அதிகாரிகள் கண்டிப்புடன் சொல்லிவிட்டார்கள்.


கொலை செய்யணும் 

இதனால் என்ன செய்வதென்றே தெரியாத முன்னாபாய், தன் மேலதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், "சார்.. என் மனைவியை கொலை செய்ய வேண்டும், பிறகு அவருக்கு இறுதி சடங்குகள் செய்ய வேண்டும். அதனால் 2 நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும்" என்று கடிதம் எழுதினார்.


ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம்  

முன்னாபாய் அதோடு விடவில்லை. இந்த கடிதத்தின் நகலை பாட்னாவில் உள்ள வங்கியின் தலைமையகம், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரின் அலுவலகம், பிரதமர், ஜனாதிபதியின் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டார்.


உடனடி லீவு 

லட்டரை படித்து பார்த்த வங்கி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்ததுடன், நகல்களின் முகவரியை கண்டு இன்னும் நடுங்கியே போய்விட்டது. அதனால் உடனடியாக முன்னாபாய்க்கு லீவு தர அனுமதி அளித்தது.


என்ன பண்றதுன்னு தெரியல  

பிறகு "ஏன் இப்படி லீவு லட்டர் எழுதினீங்க" என்று கேட்டதற்கு, "என் மனைவி உடல்நிலை நாளுக்கு நாள் மோசமா போய்ட்டு இருக்கு. கூடஇருந்து கவனித்து கொள்ளவே முடியவில்லை. லீவும் தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அதனால்தான் இப்படி எழுத வேண்டியதா போச்சு" என்று வருத்தத்துடன் விளக்கம் தந்தார் முன்னாபாய்!!

No comments:

Post a Comment