பெருந்துறை: கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியின் தலையை அறுத்து உடலை பைக்கில் வைத்துக்கொண்டு கணவன் ஊர்வலமாக வந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (28). இவர், முனியப்பன் கேஸ் லாரிகளுக்கு சிலிண்டர் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரை சேர்ந்தவர்.
இவரது மனைவி நிவேதா (19). இவர் தனியார் டிப்பார்மெண்ட் ஷோரூமில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு கடந்த 7 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று இரவு முனியப்பன் வேலைக்கு சென்று விட்டு, வேலை குறைவாக இருந்ததால் இரவு 10 மணிக்கே வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் நிவேதா, வேறொரு வாலிபரோடு உல்லாசமாக இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இதன்காரணமாக நிவேதாவிற்கும் முனியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது முனியப்பன், ‘நிவேதாவிடம் உனது தாய் வீட்டில் விட்டு விடுகிறேன் வா’ என்று கூறி தனது பைக்கில் அழைத்து வந்துள்ளார். பவானி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எருக்காட்டுவலசு பகுதியில் வந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது முனியப்பன், தான் வைத்திருந்த கத்தியால் நிவேதாவை கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் தலையை தனியே எடுத்து பைக்கின் முன்புறம் வைத்துவிட்டு, உடலை எடுத்து பெட்ரோல் டேங்கின் மீது தன் பக்கமாக திருப்பி உட்கார வைத்து பைக்கில் ஊர்வலமாக சென்றுள்ளார்.
அப்போது வேகமாக வந்து பைக்கை திருப்பியபோது அப்பகுதியில் உள்ள வீட்டு சுவரின் மீது மோதி விழுந்துள்ளார்.இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவல்படி பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முனியப்பனை கைது செய்தனர். நிவேதா உடலை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மனைவியின் தலையை அறுத்து உடலை பைக்கில் வைத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment