வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகத்தில் விபத்து - விவரம் உள்ளே | Madurantakam Bus Accident News 16.12.2019
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 16, 2019

மதுராந்தகத்தில் விபத்து - விவரம் உள்ளே | Madurantakam Bus Accident News 16.12.2019

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (NH-45) இன்று (16.12.2019) காலை சுமார் 10.30 மணியளவில் நடந்த விபத்தில் 1 பெண் பலி மற்றும் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.மதுராந்தகத்திலிருந்து உத்திரமேரூர் சென்ற அரசு பேருந்து மதுராந்தகம் பணிமனை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு பின்னர் இயக்கியபோது அதன் பின்புறமாக வந்த லாரி மோதியதில் அரசு பேருந்தின் பின்புறம் முற்றிலும் சேதமடைந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். 
அரசு பேருந்தின் பின்புறமாக லாரி மோதியதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சர்வீஸ் ரோட்டின் இரும்பு வேலியை இடித்து கொண்டு 10 அடி தூரம் தள்ளப்பட்டது. 
அந்த தருணத்தில் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளராக பணிபுரிந்துவரும் பானுமதி (வயது 32) என்பவர் அதே பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்ற போது அவர் இரும்பு வேலிக்கும் பேருந்திற்கும் இடையில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சம்பவம் குறித்து மதுராந்தகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:

Post a Comment