வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகத்தில் "தூணை பிளந்து காட்சியளிக்கும் ஶ்ரீஉக்கிரநரசிம்மர்" – தமிழகத்திலேயே இங்குதான் அருள்பாலிக்கிறார் | Madurantakam Soorakottai Lakshmi Narasimmar
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 25, 2019

மதுராந்தகத்தில் "தூணை பிளந்து காட்சியளிக்கும் ஶ்ரீஉக்கிரநரசிம்மர்" – தமிழகத்திலேயே இங்குதான் அருள்பாலிக்கிறார் | Madurantakam Soorakottai Lakshmi Narasimmar

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள சூரக்கோட்டை ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயிலில் ஶ்ரீஅனுமந் ஜெயந்தி நாளையொட்டி 108 பால்குட உற்சவ பெருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. 
இந்த விழாவில் கோயில் நிறுவனர் வேணுதாஸ் சுவாமிகள் தலைமையில் 25.12.2019 காலை 10 மணிக்கு பிரசித்தி பெற்ற மதுராந்தகம் ஶ்ரீஏரிகாத்தராமர் கோயில் குளத்தின் கரையிலிருந்து 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். 
 
பின்னர், ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு 108 பால்குட அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம், மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றன.  பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. 
இந்த கோயிலின் சிறப்பு என்னவெனில் "தூணை பிளந்து காட்சி தரும் 43 அடி உயர ஶ்ரீஉக்கிரநரசிம்மர் தமிழ்நாட்டிலேயே இங்குதான் அருள்பாலிக்கிறார்". அவருக்கு எதிரே 21 அடி உயரத்தில் ஶ்ரீஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். 
மேலும், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த ஆனைக்குன்னம் ஶ்ரீசஞ்சீவிராயர் திருகோவிலிலும் அனுமந் ஜெயந்தி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

No comments:

Post a Comment