வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-06-09
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, June 20, 2019

இதுதான் கடைசி நொடி.. தாய்க்கும் தெரியாது.. அந்த மகளுக்கும் தெரியாது.. குறிப்பு உள்ளே

"இதுதான் கடைசி நொடி.." என்ற அந்த தாய்க்கும் தெரியாது, அவரது மகளுக்கும் தெரியாது. மகள் கண்முன்னே லாரி மோதி தாய் இறந்ததை பார்த்து கதறினாள் மகள்..

 இது சம்பந்தமான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அனைவரையும் உறைய வைத்து வருகிறது. சேலம் அருகே தாரமங்கலத்தை சேர்ந்தவர் கிறிஸ்டி அகல்யா ராணி. அங்குள்ள ஆசிரியர் காலனியில் வசித்து வருகிறார். 
இவரது கணவர் எபனேசர் ஜெய்சன் திருநெல்வேலியில் அல்வா கடை வைத்துள்ளார். தனது 12 வயது மகளுடன் வசித்து வருகிறார். தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மகள் 7-ம் வகுப்பு படிக்கிறாள். 

நேற்று மாலை கிறிஸ்டி தன் மகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். தாரமங்கலம் பிரதான சாலையில் இருவரும் நடந்து வந்தனர்.


கிறிஸ்டி 
 அந்த சமயம், வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி, கிறிஸ்டி மீது மோதியதில் அவர் நிலை தடுமாறி விழுந்து விட்டார். ஆனால் அந்த லாரியானது, கிறிஸ்டி மீது ஏறி இறங்கியது. இதில் லாரியின் சக்கரங்களுக்கு நடுவே மிக கொடூரமாக டீச்சர் சிக்கி கொண்டார்.

துடிதுடித்தார்
இந்த கொடுமை அனைத்துமே மகள் கன்முன்னாடியே நடந்து. 12 வயது குழந்தை அலறி துடித்து அலறினாள். மகள் வெடித்து கதற, அங்கேயே துடிதுடித்து தாய் உயிரிழந்தார். ஆனால் அந்த லாரி டிரைவரோ, விபத்தை ஏற்படுத்தியதுடன், வண்டியை நிற்காமல் வேகமாக ஓட்டி சென்றுவிட்டார்.


விசாரணை 
இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அந்த பகுதியில் இயங்கிவரும் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதன்படி சம்பந்தப்பட்ட லாரியை பிடித்துவிட்டனர். சட்டவிரோதமாக லாரியில் செம்மண் அள்ளிக் கொண்டு போயுள்ளார் டிரைவர் கிருஷ்ணன்.


வீடியோ வைரல் 
 அவரை போலீசார் வலை வீசி தேடி வருவதுடன், விபத்து நடந்த வீடியோவையும் தற்போது வெளியிட்டுள்ளனர். மகளின் கண்முன்னே தாய் இறந்த இந்த வீடியோ காட்சி பார்ப்போர் மனதை பதைபதைக்க செய்து வருகிறது.


தக்கலை ஆசிரியரின் முரட்டுத்தனம்.. அடி வாங்கிய மாணவன் படுகாயம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆசிரியர் அடித்ததில் மாணன் படுகாயம் காயமடைந்த மாணவன் தக்கலை அரசு மருத்துவ மனையில் சிகிட்சைக்காக அனுமதி ஆசிரியரிடம் இரணியல் போலீசார் விசாரணை.

 கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியை சேர்ந்த ஜெஸ்டின்ஜோஸ்-சகாய அனிதா தம்பதியரின் மகன் 17-வயதான ஜெறின் ஜோசப் வட்டம் பகுதியில் உள்ள விக்டரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பாடப்பிரிவில் பயின்று வருகிறார்.


கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறந்து ஒருசில வாரங்கள் ஆன நிலையில் தற்போதே மாணவர்களுக்கு அதிக அளவில் வீட்டு பாடங்களும் முக்கிய கேள்விகளுக்கான விடைகளையும் அளித்து அவைகளை மனப்பாடம் செய்து தினமும் வகுப்பறையில் ஒப்புவிக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், முறையாக ஒப்புவிக்காத மாணவர்கள் இரவு படிப்புக்காக பள்ளியிலேயே தங்க வைத்து ஒப்புவித்த பின் வீட்டிற்கு அனுப்புவதும் வழக்கமாக இருந்து வருகிறது. 
 இவ்வாறு ஒவ்வொரு பாடப்பிரிவு ஆசிரியர்களும் இதேப்போல் பாட சுமைகளை அளிக்கும் நிலையில் மாணவர்கள் மனப்பாடம் செய்வது சாத்தியமில்லாத நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற ஜெறின்ஜோசப்பிடம் மாலை வகுப்பறைக்கு வந்த இயற்பியல் ஆசிரியர் சுமிதா தான் அளித்த வீட்டு பாடத்தை ஒப்புவிக்க கூறியுள்ளார். 

ஆனால் ஒப்பிவிக்க தெரியாமல் ஜெறின்ஜோஸப் இருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை சுமிதா அவரை சரமாரியாக கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார் இதில் மாணவனுக்கு இடது கை மணிக்கட்டு முழங்கை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

 ஆனால் பள்ளி நிர்வாகம் அதை பொருட்படுத்தாமல் பள்ளிலேயே தங்க வைத்து இரவு எட்டு மணிவரை தாங்களே வைத்தியம் செய்துள்ளனர். ஆனால் மாணவனுக்கு வலி அதிகரிக்கவே பெற்றோரை அழைத்து ஒப்படைத்தனரதர்.


அவர்கள் மகனை சிகிட்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் இரணியல் போலீசார் ஆசிரியை சுமிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுவரை தோன்றிடாத "ஸ்ட்ராபெர்ரி மூன்" நிலவை பார்க்கத் தவறிவிடாதீர்கள்! எப்போது தெரியுமா?

நம்மில் பலரும் இரவு வானில் முழு நிலவைக் கண்டால், ஐயோ எத்தனை அழகு என்று முழு நிலவைக் கண்டு சொக்கிப்போய் இருப்போம். இன்னும் சிலர் முடிந்தவரை நம் மொபைல் போனில் ஜூம் செய்து, நிலவைப் படம்பிடித்து வாட்ஸாப் மற்றும் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் கூட போட்டியிருப்போம்.


அடுத்த இரண்டு நாட்களுக்கு ஸ்ட்ராபெர்ரி மூன் ஸ்ட்ராபெர்ரி மூன் பற்றிய பதிவுகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு நீங்கள் உங்கள் வாட்ஸாப் மற்றும் பேஸ்புக் ஸ்டேட்டஸில் பதிவிடலாம்.

 இதுவரை உங்கள் வாழ்வில் கண்டிடாத புது நிற நிலவை இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பார்க்க இயலும் என்று நாசா தற்பொழுது அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

ஹனி மூன் அல்லது ஸ்ட்ராபெர்ரி மூன் 
 ஸ்ட்ராபெர்ரி மூன் என்று அழைக்கப்படும் இந்த நிலவிற்கு 'ஹனி மூன்' அல்லது 'மீட் மூன்' என்று வேறு சில பேர்களும் இருக்கிறது.


ஸ்ட்ராபெர்ரி மூன் என்று இந்த நிலவிற்கு பெயரிட காரணம் அதன் நிறம் தான். ஸ்ட்ராபெர்ரி பழத்தை போல் அடுத்த இரண்டு நாட்களுக்கு நிலவு சிவப்பாய் பிரகாசிக்குமாம்.

பிங்க் நிறத்திலும் நிலவு 
இன்று இரவு முதல் துவங்கி ஜூன் 21 ஆம் தேதி வரை இந்த ஸ்ட்ராபெர்ரி மூன் வானில் தெரியும் என்று நாசா அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு நிலவு சிவப்பாக இருக்கும், சில இடங்களில் பிங்க் நிறத்திலும் நிலவு காணப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.


நிலவு ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் இருக்கக் காரணம் என்ன? 
 கட்டுப்பாடற்ற வளிமண்டல விளைவுகளினாலும், பூமியின் அடிவானின் மிக அருகாமையில் நிலவு நெருங்கி வரும் காரணத்தினாலும் நிலவு ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் ஒளிர்கிறது என்று காரணமாகச் சொல்லப்படுகிறது.

இந்த ஸ்ட்ராபெர்ரி நிலவை, சென்ற ஆண்டில் தெரிந்த பிளட் மூன் நிலவுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் நாசா கூறியுள்ளது. அது வேறு வகை நிலவு, இது வேறு வகை நிலவு என்பது குறிப்பிடத்தக்கது.


அழகிய ஸ்ட்ராபெர்ரி நிலவை தவறவிடாதீர்கள்
அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் நிலவு சிவப்பாய் ஒளிரும் என்றும், மற்ற சில இடங்களில் பிங்க் நிறத்தில் ஒளிரும் என்றும், இதற்குக் கரணம் அங்குள்ள வளிமண்டல விளைவுதான் என்றும் நாசா தெரிவித்துள்ளது.


இரவு வானில் தோன்றும் இந்த அழகிய ஸ்ட்ராபெர்ரி நிலவைப் பார்ப்பதற்குத் தவறிவிடாதீர்கள்.


வெண்மையாய் தெரிவதற்கும் வாய்ப்புள்ளது 
 பல இடங்களில் நிலவு உதயம் ஆகும் பொழுதும் மறையும் பொழுதும் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் தெரிவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதென்றும். சில இடங்களில் நடு வானில் நிலவு இருக்கும் பொழுது வெண்மையாய் தான் காணப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.


பெண்ணாக பிறந்ததால் ஆத்திரம்:பச்சிளம் குழந்தை கழுத்தை நெரித்து கொலைவெறிச்செயலில் ஈடுபட்ட தந்தை கைது

சிக்கமகளூரு

பெண்ணாக பிறந்ததால் ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பெண் குழந்தை

சிக்கமகளூரு அருகே புச்சனஹள்ளியை சேர்ந்தவர் மஞ்சு. இவரது மனைவி சுசித்ரா. இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சுசித்ரா கர்ப்பம் அடைந்தார்.

இந்நிலையில் மஞ்சு தனது மனைவி சுசித்ரா மற்றும் குடும்பத்தினரிடம் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று கூறி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுசித்ராவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

கழுத்தை நெரித்து கொலை

தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்த மஞ்சுவுக்கு, பெண் குழந்தை பிறந்தது ஏமாற்றத்தை அளித்தது. இதனால் அவர் தனது வீட்டில் உள்ள யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.


 இந்த நிலையில் மஞ்சு, ஒரு ஜோதிடரிடம் சென்று ஜோசியம் பார்த்து உள்ளார். அப்போது பெண் குழந்தையால் வீட்டிற்கு கெடுதல் நடக்க போகிறது என்று மஞ்சுவிடம், ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு குழந்தையை கொல்ல முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை தொட்டிலில் தூங்கி கொண்டு இருந்தது. அப்போது வீட்டில் இருந்த மஞ்சு, குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார்.

 இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுசித்ரா கதறி அழுதார். அவரின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் மஞ்சு தப்பி ஓடிவிட்டார்.

கைது- பரபரப்பு

இதுபற்றி அறிந்த சிக்கமகளூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது பெண்ணாக பிறந்ததால் குழந்தையை மஞ்சு கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது.


 இதுகுறித்து சுசித்ரா அளித்த புகாரின்பேரில் சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மஞ்சுவை போலீசார் கைது செய்தனர்.


பெண்ணாக பிறந்ததால் குழந்தையை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் சிக்கமகளூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பொறுக்கி போலீஸ் | ரவுடி போலீஸ் | சின்னசேலம் SI | Sinnasalem rowdy SI Shanmugam

இவரை பணிநீக்கம் செய்யும்வரை ஷேர் செய்யுங்கள்
Click to watch videoWednesday, June 19, 2019

8 வயது குழந்தையை.. 65 வயது தாத்தாவின் அட்டகாசம்.. 7 வருடம் ஜெயில்!

8 வயசு பெண் குழந்தையை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று நாசம் செய்த 65 வயசு தாத்தாவுக்கு 7 வருஷ ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.
திருப்பூர் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் அனீபா. வயசு 65. சென்ற வருடம் வீட்டு பக்கத்தில் 8 வயசு பெண் குழந்தை விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது தன் வீட்டு மாடிக்கு சிறுமியை அழைத்து சென்ற அனீபா, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

 இதை அந்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் பார்த்துவிட்டு, நடந்த சம்பவம் குறித்து அந்தச் சிறுமியின் பாட்டியிடம் சென்று சொல்லியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அச்சிறுமியை அழைத்து பாட்டி விசாரித்தபோதுதான், தாத்தா விஷயம் வெளியே தெரிந்தது.


 இது சம்பந்தமாக அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் தந்தனர். இதையடுத்து முதியவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.இது சம்பந்தமான விசாரணை திருப்பூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இதில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

 அனீபாவிற்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் 7 வருட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டிக் டாக்- ஆசையில் கைதான இளைஞர்: காரணத்தை கேட்டால் சிரிப்பீர்கள்.!

இந்தியாவில் அதிகளவு மக்கள் இந்த டிக்டாக் செயலியை அதிகளவு பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும், இந்த செயலி மூலம் நாட்டில் பல்வேறு புதிய பிரச்சனைகள் வந்துகொண்டே தான் இருக்கிறது.
முனனர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இந்த செயலி, தற்போது தடை நீக்கம் காரணமாக மீண்டும் தலை தூக்கியுள்ளது.

ஐபோன் எக்ஸ்எஸ் 
 அதன்படி டிக்டாக் மோகம் காரணமாக புதுடெல்லியில் 20-வயது இளைஞர் ஒருவர் தற்போது சிறையில் தள்ளப்பட்டிருக்கறார்.

 கடந்த புதன்கிழமை சப்ரா என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார், அது என்னவென்றால் நான் எனது ஐபோன் எக்ஸ்எஸ் போனை விற்பனைக்காக ஒ.எல்.எக்ஸ் இணையத்தில் பதிவேற்றி இருந்தேன்.

ஜதின் நாகர் 
 இதை பார்த்துவிட்டு ஜதின் நாகர் என்பவர் என்னைத் தொடர்புகொண்டு ஐபோனை வாங்க விருப்பம் தெரிவித்தார், விலை ரூ.80,000 என முடிவு செய்துகொண்டோம்.


பின்பு மாலை 6மணி அளவில் போனை கொடுக்க நாங்கள் ப்ரீத் விஹார் சிக்னல் அருகே சந்தித்துக்கொண்டோம். அப்போது எதிர்பாராத நேரத்தில் எனது போனை எடுத்துச் சென்றுவிட்டார் எனக் கூறி புகார் அளித்தார்.

போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்
அதன்பின்பு போலீஸார் கடந்த சனிக்கிழமை ஜதின் நாகர்-ஐ கைது செய்து அவரிடம் இருந்த போனை கைப்பற்றினர், பின்பு விசாரணையில் தெரியவந்தது என்னவென்றால், பொதுவாக போனை திருடுபவர்கள் அடுத்த நிமிடமே விற்று விடுவார்கள் அல்ல போனை அனைத்து விடுவார்கள்.

 ஆனால் இதை செயயாமல் அவர் வைத்திருந்ததற்கான காரணத்தை கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம்
 உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம் புத்த நகரை சேர்ந்த ஜதின் நாகர் டிக்டாக் செயலியில் வீடியோக்களை ஏற்றி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார், ஆனால் தன்னிடம் நல்ல போன் இல்லாத காரணத்தால் தரமான வீடியோக்களை பண்ண முடியாமல் இருந்திருக்கிறார்.

எந்த கிரிமினல் வழக்கும் இல்லை ஐபோன் இருந்தால் அதன் வீடியோ மிக அருமையாகவும் தெளிவாகவும் இருக்கும் என்று கருதி அவரிடம் போனை திருடியிருக்கிறார்.
 மேலும் இவர் ஒரு தனியார் உணவு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார், குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ள இவர் மீது இதுவரை எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என்பதே உண்மை.
ஆக்ஸிஜன் கட்.. மயங்கி பலியான பயணிகள்.. MH 370 விமானத்தை கடலுக்குள் மூழ்கடித்த பைலட்..

239 பயணிகளுடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்ஹெச் 370 விமானம் என்ன கதியானது என்பது பற்றி, தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 கடலில் விமானத்தை செலுத்தும் முன்பாக பயணிகள் அனைவரையும், விமானி கொலை செய்திருப்பதாக வெளியாகியுள்ள அந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 2014ம் ஆண்டு, மார்ச் 8ம் தேதி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீன தலைநகர் பீஜிங்கிற்கு, புறப்பட்ட எம்ஹெச் 370 என்ற போயிங் ரக விமானம், எங்கே சென்றது என தெரியாமலேயே மாயமாகிவிட்டது.

முழு தகவல் 
 5 வருடங்களை தாண்டியும்கூட, மலேசிய விமானத்திற்கு என்ன ஆனது என்பது தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது, சர்வதேச விமானப் போக்குவரத்து சமூகம். 

 உலகின் மிகப்பெரிய விமான மர்மம் வழக்காக இது பார்க்கப்படுகிறது. மாயமான மலேசிய விமானம், எங்கே விழுந்தது, அதில் இருந்த பயணிகள் நிலை என்ன ஆனது என்பது குறித்தெல்லாம் இதுவரை உறுதியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

அவ்வப்போது விசாரணை மற்றும் யூகங்கள் அடிப்படையில்தான் சில தகவல்கள் வெளியாகியபடி உள்ளன. தற்போது, புதிதாக ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இது அந்த விமானத்தின் பைலட் பற்றியது.

விமானி காரணம் 
 மலேசிய விமானத்தை இயக்கிய பைலட், ஜஹாரி அகமது ஷா (53), இந்த மொத்த சம்பவத்திற்கு சூத்திரதாரி என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

ஜஹாரி அகமது ஷாவின் நண்பர்களிடம், விமானத்துறை சார்ந்த நிபுணத்துவ எழுத்தாளர் வில்லியம் லாங்க்கவீஷ் உரையாடி சில தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளார். அந்த தகவல்கள் அதிர்ச்சி ரகம்.

கள்ளத் தொடர்புகள் 
 ஆம்.. ஜஹாரி அகமது ஷாவுக்கும், விமான பணிப் பெண்கள் சிலருக்கும் கள்ளத் தொடர்புகள் இருந்துள்ளன. இதனால், அவரது மனைவிக்கும், அவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. 

ஒரு கட்டத்தில், ஜஹாரி அகமது ஷாவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதன்பிறகு, தனிமை அறையிலேயே அதிக காலத்தை கழிப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார், ஜஹாரி அகமது ஷா. மன ரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதெல்லாம் சகஜம் 
 இதுகுறித்து, ஜஹாரி அகமது ஷாவின் சக பைலட் ஒருவர் கூறுகையில், "ஜஹாரி அகமது ஷா திருமண பந்தம் சரியானதாக அமையவில்லை. கடந்த காலங்களில், விமான பணிப்பெண்கள் பலருடன் அவர் படுக்கையை பகிர்ந்துள்ளார். 

அதனால் என்ன? நாங்கள் எல்லோருமே செய்வதுதான் இது. பல உலக நாடுகளுக்கும் இந்த இளம் பெண்களை பக்கத்தில் வைத்துக் கொண்டேதானே பறக்கிறோம். இது ஜஹாரி அகமது ஷாவின் மனைவிக்கும் தெரியும்" என்றார்.

பைலட்டுக்கு மன அழுத்தம் 
 இதுபற்றி வில்லியம் லாங்க்கவீஷ் தான் எழுதியுள்ள கட்டுரையில், கூறுகையில், மலேசிய விமானம் மாயமானது குறித்து விசாரிக்கும், அதிகாரிகள் மற்றும், உளவுத்துறை சமூகத்தினருக்கு, பைலட்டின் மனநிலை குறித்து வலுவான சந்தேகங்கள் உள்ளன. அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி என்கிறார்.

ஆக்ஸிஜன் இணைப்பு 
 விமானம் 40000 அடி உயரத்தில் பறந்தபோது, கேபினுக்குள் செல்லும், ஆக்ஸிஜன் இணைப்பை பைலட், ஜஹாரி அகமது ஷா துண்டித்துள்ளார். இதையடுத்து, ஆக்ஸிஜன் முகமூடியை பயணிகள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

 ஆனால், அவை 15 நிமிடங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கக் கூடியது. எனவே, பயணிகள் அனைவரும் ஆக்ஸிஜன் இன்றி, அடுத்தடுத்து உயிரிழந்திருக்கிறார்கள். இதன்பிறகு, இந்தியப் பெருங் கடலுக்குள் விமானத்தை செலுத்தி, ஜஹாரி அகமது ஷா தற்கொலை செய்திருக்க கூடும் என்கிறது புதிய ஆய்வு முடிவுகள். 


புதிது கிடையாது
 இவ்வாறு பைலட்கள், தற்கொலை செய்வதற்காக, பயணிகளையும் சேர்த்து கொல்வது இது புதிது இல்லை. 1999ம் ஆண்டு அக்டோபர் மாதம், எகிப்து ஏர் விமானத்தின் பைலட், மாசசூசெட்ஸ் பகுதியில், விமானத்தை மோதச் செய்தார். 

2015ல், பிரெஞ்சு நாட்டின் ஆல்ப்ஸ் மலையில், ஜெர்மன்விங்ஸ் விமானம் நொறுங்கி விழுந்த சம்பவத்திலும், பைலட்டின் தற்கொலை முயற்சிதான் காரணமாகச் சொல்லப்பட்டது.

மனைவியுடன் சண்டை
 ஏம்ப்பா.. பொண்டாட்டி கூட சண்டை போட்டு தற்கொலை செய்வதே தப்பு. இவரு என்னடான்னா, 239 பயணிகளையும் கொன்று, தனது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார்.

 இனிமேல், பைலட்டுகள் வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார்களா என்பதை உளவுத்துறையை வைத்து கண்காணித்து உறுதி செய்தபிறகே, விமானத்திற்குள் காலெடுத்து வைக்கச் சொல்லனும் போல இருக்குதே!


கல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்

கர்ப்பிணி என்று கூட பார்க்காமல், மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்பட்டி அருகேயுள்ள கிராமம் இ.சத்திரப்பட்டி. இங்கு வசித்து வந்த கொத்தனார் மாரியப்பனுக்கு கடந்த பிப்ரவரி மாதம்தான் கல்யாணமானது. மனைவி பெயர் சண்முகப்பிரியா. இப்போது இவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.

நேற்று காலை மாரியப்பன் வீட்டு கதவு ரொம்ப நேரமாகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரி அக்கம் பக்க நபர்களின் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். 
 அப்போது, மாரியப்பன், சண்முகப்பிரியா ரெண்டு பேருமே ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் தந்தனர்.

 போலீசார் விரைந்து வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, மாரியப்பன் அரை மயக்கத்தில் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார்.

ஆனால், சண்முகப்பிரியா இறந்த நிலையில்தான் கிடந்தார். உடனடியாக போலீசார் மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

அரை மயக்கத்தில் இருந்த மாரியப்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கண் விழித்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது சொன்னதாவது.

"என் மனைவி என்னை அடிக்கடி வேலைக்கு போ..ன்னு சொல்லிட்டே இருப்பாள். இப்பவும் அப்படித்தான் பிரச்சனை பண்ணினாள். அதனால், பழ வெட்டுற கத்தியால், அவளை குத்திவிட்டேன். 

இப்படி செய்துட்டதை நினைச்சு அழுதேன்.. அதுக்கப்புறம்தான் நானும் தற்கொலை செய்துக்கலாம்னு, என் கழுத்து, கைகளில் குத்தி கொண்டேன். ஆனால் மயங்கி விழுந்துட்டேன்" என்றார். போலீசார் இதுகுறித்த விசாரணையில் இறங்கி உள்ளனர்.


வைரல் டீச்சர் | Viral Teacher | Today Trending

Click to watch below video.....


Tuesday, June 18, 2019

அதிகாலையில் ஏலியன் நடந்து செல்லும் காட்சி- சிசிடிவி கேமராவில் பதிவு.!

ஏலியன்கள் இருக்கின்றார்களா இல்லையா என்று பல்வேறு ஆய்வுகள் நடந்துகின்றது. இருந்த போதிலும் பல்வேறு நாடுகளிலும் ஏலியன்கள் உலாவுதாக தகவல்கள் ஆங்காங்க பரவலாக மக்களிடம் காணப்படுகின்றது.

ஸ்டீப்பன் ஹாங்கிஸ் உள்ளிட்ட ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் ஏலியன்கள் இருப்பது உறுதி அவர்கள் மனிதர்கள் இனத்தின் ஊடாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்று கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

பூமியில் அவ்வபோது ஒரு சில இடங்களில் ஏலியன் வந்து மனித இனத்தின் மீதும் தாக்குதல் நடந்தாகவும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவில் வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிகளை கண்ட போது, அதிகாலையில் ஏலியன் போன்ற உருவம் நடந்து சென்றது பதிவாகியிருந்தது. இதை சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகின்றது.

ஸ்டீப்பன் ஹாங்கிங்ஸ் முன்பு எச்சரிக்கை:
ஏலியன்கள் பூமிக்கு படையெடுப்பார்கள், மேலும் அவர்கள் மனித இனத்தோடும் தொடர்பு கொள்ளலாம். ஆனால் அவர்கள் பூமியை ஆட்சி செய்யும் நினைப்போடும் அவர்கள் வரலாம். அவர்கள் தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்குவதால், மனிதர்களை அடிமைப்படுத்த முயற்சிப்பார்கள்.

 மேலும், ஒரு வேளை மனித இனத்தையும் அழிக்க முயற்சி செய்யலாம் என்றும் ஸ்டீப்பன் ஹாங்கிங்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உறவினர்களை பார்க்க வருகின்றனர்: 
 மனித-ஏலியனுக்கு பிறந்தவர்கள் ஏலியன்களுக்கு உறவினர்களாக இருக்கின்றனர். இவர்களின் சமிக்ஞையால் ஏலியன்கள் பூமிக்கு இவர்கள் பார்த்துக் கொண்டும் நலம் விசாரித்து செல்லப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஒரு சில பெண்களின் கணவன் மார்கள் ஏலியன்களாக இருப்பதால், இணை சேர்க்கைக்காகவும் அவர்கள் வந்து சென்றுள்ளனர்.

இலங்கை தமிழர்கள் ஏலியன்கள் தாக்குதல்: 
 இந்த நிலையில், இலங்கையின் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் நேற்றைய தினம் குள்ள மனிதர்களினால் தாக்கப்பட்டதாக சிலர் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 மாத்தறை - தொட்டமுன பகுதியில் நேற்றிரவு சில குள்ள மனிதர்கள் தம்மீது தாக்குதல் நடத்தியதாக மாத்தறை போலிஸ் நிலையத்தில் முறைபாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை நடத்திய போதிலும், தமக்கு எந்தவிதமான ஆதாரங்களையும் திரட்டிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

மாறுபட்ட உடல் அமைப்பு:
நாசா ஏம்ஸ் ஆராய்ச்சி மைய கம்ப்யூட்டர் விஞ்ஞானியான பேராசியரியர் சில்வானோ பி கொலொம்பனோ பூமிக்கு ஏலியன்கள் வந்துவிட்டன. இதை நாம் அறியாமல் இருக்கின்றோம் என்று ஆய்வு கட்டுரையில் கூறியுள்ளார். மாறுபட்ட உடல் அமைப்புடனும் கார்பன் உடல் உறுப்புகளோடு ஏலியன்கள் பூமியில் இருப்பதால் அவர்களை மனிதர்களால் எளிதில் அடையாளம் காண முடிவதில்லை என்றும் விஞ்ஞானி சில்வானோ தெரிவித்துள்ளார்.

ஏரியா 51: 
 ஏலியன்கள் குறித்து ரகசியமாக ஆய்வு செய்து வரும் அமெரிக்கா தனது முழுகட்டுப்பாட்டில் ஏரியா 51ல் வைத்துள்ளது. அங்கு யாரையும் ஏரியா 51ல் நடமாட விடுவதில்லை. அமெரிக்கா இதற்காக பிரத்யேகமாக பாதுகாப்பு படையை வைத்துள்ளது. அங்கு நடக்கும் ஏலியன்கள் குறித்த ஆய்வு அமெரிக்காவின் அதிபர்களுக்கு மட்டும் தெரியும். அப்படியே தெரிந்தாலும் அவர்கள் இதுகுறித்து வெளியே யாருக்கும் தெரிவிப்பது கிடையாது.


அமெரிக்காவில் அதிகாலை:  
அமெரிக்காவில் உள்ள குடியிருப்பு பகுதியில் பொறுத்தியிருந்த சிசிடிவியில் ஏலியன் போன்ற உருவம் நடந்து செல்வது பதிவாகியிருந்தது. இதை கண்ட வீட்டினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த பெண் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

Read more at: https://tamil.gizbot.com/news/alien-w
ஏலியன்கள் இருக்கின்றார்களா இல்லையா என்று பல்வேறு ஆய்வுகள் நடந்துகின்றது. இருந்த போதிலும் பல்வேறு நாடுகளிலும் ஏலியன்கள் உலாவுதாக தகவல்கள் ஆங்காங்க பரவலாக மக்களிடம் காணப்படுகின்றது.

ஸ்டீப்பன் ஹாங்கிஸ் உள்ளிட்ட ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் ஏலியன்கள் இருப்பது உறுதி அவர்கள் மனிதர்கள் இனத்தின் ஊடாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்று கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

பூமியில் அவ்வபோது ஒரு சில இடங்களில் ஏலியன் வந்து மனித இனத்தின் மீதும் தாக்குதல் நடந்தாகவும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவில் வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிகளை கண்ட போது, அதிகாலையில் ஏலியன் போன்ற உருவம் நடந்து சென்றது பதிவாகியிருந்தது. இதை சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகின்றது.

ஸ்டீப்பன் ஹாங்கிங்ஸ் முன்பு எச்சரிக்கை:
ஏலியன்கள் பூமிக்கு படையெடுப்பார்கள், மேலும் அவர்கள் மனித இனத்தோடும் தொடர்பு கொள்ளலாம். ஆனால் அவர்கள் பூமியை ஆட்சி செய்யும் நினைப்போடும் அவர்கள் வரலாம். அவர்கள் தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்குவதால், மனிதர்களை அடிமைப்படுத்த முயற்சிப்பார்கள்.

 மேலும், ஒரு வேளை மனித இனத்தையும் அழிக்க முயற்சி செய்யலாம் என்றும் ஸ்டீப்பன் ஹாங்கிங்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உறவினர்களை பார்க்க வருகின்றனர்: 
 மனித-ஏலியனுக்கு பிறந்தவர்கள் ஏலியன்களுக்கு உறவினர்களாக இருக்கின்றனர். இவர்களின் சமிக்ஞையால் ஏலியன்கள் பூமிக்கு இவர்கள் பார்த்துக் கொண்டும் நலம் விசாரித்து செல்லப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஒரு சில பெண்களின் கணவன் மார்கள் ஏலியன்களாக இருப்பதால், இணை சேர்க்கைக்காகவும் அவர்கள் வந்து சென்றுள்ளனர்.

இலங்கை தமிழர்கள் ஏலியன்கள் தாக்குதல்: 
 இந்த நிலையில், இலங்கையின் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் நேற்றைய தினம் குள்ள மனிதர்களினால் தாக்கப்பட்டதாக சிலர் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 மாத்தறை - தொட்டமுன பகுதியில் நேற்றிரவு சில குள்ள மனிதர்கள் தம்மீது தாக்குதல் நடத்தியதாக மாத்தறை போலிஸ் நிலையத்தில் முறைபாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை நடத்திய போதிலும், தமக்கு எந்தவிதமான ஆதாரங்களையும் திரட்டிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

மாறுபட்ட உடல் அமைப்பு:
நாசா ஏம்ஸ் ஆராய்ச்சி மைய கம்ப்யூட்டர் விஞ்ஞானியான பேராசியரியர் சில்வானோ பி கொலொம்பனோ பூமிக்கு ஏலியன்கள் வந்துவிட்டன. இதை நாம் அறியாமல் இருக்கின்றோம் என்று ஆய்வு கட்டுரையில் கூறியுள்ளார். மாறுபட்ட உடல் அமைப்புடனும் கார்பன் உடல் உறுப்புகளோடு ஏலியன்கள் பூமியில் இருப்பதால் அவர்களை மனிதர்களால் எளிதில் அடையாளம் காண முடிவதில்லை என்றும் விஞ்ஞானி சில்வானோ தெரிவித்துள்ளார்.

ஏரியா 51: 
 ஏலியன்கள் குறித்து ரகசியமாக ஆய்வு செய்து வரும் அமெரிக்கா தனது முழுகட்டுப்பாட்டில் ஏரியா 51ல் வைத்துள்ளது. அங்கு யாரையும் ஏரியா 51ல் நடமாட விடுவதில்லை. அமெரிக்கா இதற்காக பிரத்யேகமாக பாதுகாப்பு படையை வைத்துள்ளது. அங்கு நடக்கும் ஏலியன்கள் குறித்த ஆய்வு அமெரிக்காவின் அதிபர்களுக்கு மட்டும் தெரியும். அப்படியே தெரிந்தாலும் அவர்கள் இதுகுறித்து வெளியே யாருக்கும் தெரிவிப்பது கிடையாது.


அமெரிக்காவில் அதிகாலை:  
அமெரிக்காவில் உள்ள குடியிருப்பு பகுதியில் பொறுத்தியிருந்த சிசிடிவியில் ஏலியன் போன்ற உருவம் நடந்து செல்வது பதிவாகியிருந்தது. இதை கண்ட வீட்டினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த பெண் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

8 மாத பச்சைக் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூர தந்தை.. என்ன செய்யலாம் இவரை?

பெண்களுக்கு பாதுகாப்பற்ற உலகமாக மாறி வருகிறது. ஆங்காங்கே பலாத்கார சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பச்சிளம் பிள்ளைகள் முதல் மரணிக்கும் பெண்கள் வரை பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள். 
கடந்த ஆண்டு டெல்லியில் 8 மாத பெண்குழந்தையை உறவுக்காரன் ஒருவனே பலாத்காரம் செய்தான். அந்த கொடூர சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது பெற்ற தந்தையே தனது 8 மாத பெண் குழந்தையை பலாத்கார செய்து கொன்று புதைத்திருக்கிறான்.

 நியூயார்க்கில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கலியுகம் எப்படி இருக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஜீவநதிகள் கூட வரண்டு விடும். கணவன், மனைவி ஆகியோருக்கு ஒருவர் மீது மற்றவர்க்கான அக்கறை குறைந்து விடும்.
v
வயது முதிர்ந்தவர்களை யாரும் கவனிக்க மாட்டார்கள். பெற்றோர்களை பிள்ளைகள் காப்பாற்ற மாட்டார்கள் சுமையாக கருதுவார்கள். பச்சிளம் பெண் பிள்ளைகளுக்குக் கூட பாதுகாப்பு இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

கொடூர தகப்பன் 
 நியூயார்க் நகர போலீசார், சில தினங்களுக்கு மூன்பு காடி பிரான்சிஸ்கோவிக் என்ற 25 வயது இளைஞனை கைது செய்தனர். அவன்மீதான குற்றச்சாட்டை கேட்டு நீதிபதியே அதிர்ந்து போனார். 8 மாத பச்சிளம் பெண் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்று புதைத்தான் என்பதுதான்.

குழந்தையின் மரணம்
கொல்லப்பட்ட அந்த குழந்தையின் பெயர் ரூபி. பிஞ்சு குழந்தைக்கு பேச்சு கூட சரியாக வராது, அப்பா அம்மா என்ற உச்சரிப்பை தவிர எதுவும் அறியாது. அந்த குழந்தை போய் சீரழித்து கொன்று அருகில் இருந்த மயானத்தில் உள்ள கிணற்றில் வீசி விட்டான் அந்த கல்நெஞ்சக்கார தகப்பன்.

மிதந்த சடலம் 
 இந்த சம்பவம் நியூயார்க் நகர பேப்பரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகளை கொன்ற குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் தியோகா கவுண்டியில் இருந்த மோட்டலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான் அவனை அள்ளிக்கொண்டு வந்தது போலீஸ். கிணற்றில் மிதந்து கொண்டிருந்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

குற்றவாளிக்கு கடும் தண்டனை
தியோகா டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவன்மீது பலாத்காரம், கொலை வழக்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நீதிபதி எந்த கேள்வியுமே கேட்காமல் அவனுக்கு ஆயுள் தண்டனை தர வாய்ப்பு உள்ளது.

 ஜாமீனில் வெளிவரக்கூட முடியாத அளவிற்கு வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த கொடூரனுக்கு ஆதரவாக இரண்டு வக்கீல்கள் ஆஜராகியுள்ளனர் என்பதுதான் கொடூரத்தின் உச்சம்.

ரூபிக்கு அஞ்சலி
 உயிரிழந்த குழந்தை ரூபி பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயானத்தில் மிகப்பெரிய அளவில் அஞ்சலி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அனைவரும் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 பச்சிளம் பிள்ளை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நியூயார்க் நகரத்தையே உலுக்கியுள்ளது. கருடபுராணத்தின் படி இந்த மாதிரி ஆட்களை எல்லாம் கும்பிபாகம் அந்தகூபம் செய்தால் கூட மனது ஆறாது.


Monday, June 17, 2019

20 வயசுதாங்க ஆகுது.. போலி ஆசாமியை நம்பி என் மகளை இழந்துட்டேனே.. கதறும் கோவை தந்தை

"மாதவிடாய் பிரச்சனைக்குதான் மகளை கூட்டிட்டு போனேன்.. இப்படி போலி ஆசாமியை நம்பி மகளையே இழந்துட்டேனே" என்று மாணவியின் தந்தை ஒருவர் கதறி கதறி அழுதது அனைவரையும் கலங்க செய்தது.

 கோவை புதூர் நேதாஜி நகரைச் சேர்ந்த தம்பதி கணேசன் - மல்லிகா. இவர்களது மகள்தான் சத்யப்பிரியா. வயசு 20 ஆகிறது. சத்யப்பிரியா கோவை ஆர்ட்ஸ் காலேஜில் 3-ம் வருட பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்து வருகிறார். இவருக்கு கொஞ்ச நாளாகவே மாதவிடாய் பிரச்னை இருந்திருக்கிறது.


சித்த வைத்தியம் 
இதனால் அவஸ்தைப்பட்டு வந்த சத்யப்பிரியாவை, எத்தனையோ டாக்டர்களிடம் அழைத்து சென்றும், குணமாகவில்லை. அதனால், சொந்தக்காரர்கள் சொன்னபடி, செல்வபுரம் மனோன்மணி சித்த வைத்திய சாலைக்கு மகளை கடந்த ஜனவரி மாதம் அழைத்து சென்றனர். 

 அந்த வைத்தியர் பெயர் குருநாதன். என்ன ஆச்சோ தெரியவில்லை... தவறான வைத்தியத்தால் சத்யப்பிரியா இன்று காலை இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.


குருநாதர் 
இதை பற்றி அவரது பெற்றோர் சொல்லும்போது, "வைத்தியர்கிட்ட போன ஒரு மாசத்திலேயே மகளுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்து. கொஞ்ச நாளில் முகமெல்லாம் வீங்கிடுச்சு. இதை போய் குருநாதர்கிட்ட கேட்டதுக்கு, எதுவும் பிரச்சனை இல்லைன்னு சொல்லி திரும்பவும் அதே மருந்தைதான் தந்தார்.


உறுப்புகள் பாதிப்பு
போன ஏப்ரல் 22-ம் தேதி உடம்பு ரொம்ப மோசமாயிடுச்சு. அதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தோம். மே 1-ம் தேதி சித்த வைத்தியர் குருநாதன் மீது செல்வபுரம் ஸ்டேஷனில் புகார் தந்தோம். இதுவரைக்கும் ஒரு நடவடிக்கையும் இல்லை. அவர் தந்த தப்பான மருந்தால்தான், என் மகளின் சிறுநீரகம், நுரையீரல் பாதிக்கப்பட்டுவிட்டது.


சாலை மறியல் 
 மாதவிடாய் பிரச்சனைக்காக போய், கடைசியில் என் பொண்ணை இழந்துட்டேன்.. இதுக்கு காரணமான குருநாதனை கைது செய்ய வேண்டும்" என்று கதறினர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி, சத்யப்பிரியாவின் உறவினர்களும் சேர்ந்து, அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.


உறுதி அளித்தனர்
விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குருநாதரிடம் விசாரணை நடத்தியிருப்பதாகவும், சத்யபிரியாவுக்கு அவர் அளித்த மருந்துகளை ஆய்வுக்கு அனுப்பி இருப்பதாகவும் சொன்னார்கள்.

 மேலும், ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவர் மீதும், மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர்தான் சத்யபிரியாவின் உடலை வாங்கினர்.