வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நீங்க இப்படி செய்வீங்கன்னு எதிர்பார்க்கலை...? Unfortunate News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, January 03, 2020

நீங்க இப்படி செய்வீங்கன்னு எதிர்பார்க்கலை...? Unfortunate News

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி என்ற வாசகத்துடன் முருகேசன் என்பவர் வித்தியாசமான போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கேதுவார்பட்டியில் வார்டு உறுப்பினராக போட்டியிட்ட முருகேசன் டெபாசிட்டை இழந்தார். 

இந்நிலையில் தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி கூறி வித்தியாசமான முறையில் அவர் போஸ்டர் அடித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.வித்தியாச போஸ்டர் 
மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கேதுவார்பட்டியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு முருகேசன் என்பவர் போட்டியிட்டு இருந்தார். ஆனால் நேற்று வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் டெபாசிட்டை இழந்து தோல்வியடைந்தார்.
விரக்தி 
இதனால் விரக்தியடைந்த முருகேசன், நீங்க இப்படி செய்வீங்கன்னு, கனவில் கூட எதிர்பார்க்கவில்லை என்றும், தோற்கடித்த மக்களுக்கு நன்றி எனவும் கூறி போஸ்டர் ரெடி செய்துள்ளார். இந்த போஸ்டரை டிஜிட்டல் வடிவிலும் சமூக வலைதளங்களில் அவர் உலவ விட்டுள்ளார்.லந்து 
மதுரைக்கும் போஸ்டருக்கும் அப்படி என்னதான் நெருக்கமோ தெரியவில்லை, எப்போதும் மதுரை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் அடிக்கும் போஸ்டர்களும், பேனர்களும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையிலேயே இருக்கும். அந்தளவுக்கு அதில் வாசகங்கள் இடம் பெற்றிருக்கும்.உலக அளவில் 
உலகிலேயே தோற்கடிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட முதல் போஸ்டர் இது தான் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment