வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [காட்டாங்கொளத்தூர்] பொங்கல் பரிசில் அ.தி.மு.க., விளம்பரம்? | ADMK Ads in Pongal Price in Kattankolathur
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, January 04, 2020

[காட்டாங்கொளத்தூர்] பொங்கல் பரிசில் அ.தி.மு.க., விளம்பரம்? | ADMK Ads in Pongal Price in Kattankolathur

அரசின் பொங்கல் பரிசு பையில், அ.தி.மு.க., விளம்பரம் இடம் பெறுவதாக, காட்டாங்கொளத்துார் ஒன்றிய தி.மு.க.,வினர், மாவட்ட கலெக்டரிடம், நேற்று புகார் மனு அளித்தனர்.
மனு விபரம்:தமிழக அரசு சார்பில், ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாயுடன், பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.


இந்நிலையில், பொங்கல் பரிசு பைகளில், அரசு முத்திரைக்கு பதிலாக, அ.தி.மு.க.,வினர் படங்கள் அச்சிட்டு, வினியோகம் செய்வதற்கு, அக்கட்சியினர் தயார் நிலையில், பைகளை வைத்துள்ளனர்.


இது போன்ற பைகள், காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் மற்றும் நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் அதிகம் உள்ளன.இதை தடுத்து, பொங்கல் பரிசுகளை, அரசு முத்திரையிட்ட பைகளில் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment