வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இனி அச்சிறுபாக்கம், ஒரத்தி காவல் எல்லைகளுக்குள் தேவையற்று சுற்றுபவர்களின் உரிமம் ரத்து மற்றும் வாகனம் பறிக்கப்படும் | Acharapakkam Inspector Warning their Police Limit People
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 09, 2020

இனி அச்சிறுபாக்கம், ஒரத்தி காவல் எல்லைகளுக்குள் தேவையற்று சுற்றுபவர்களின் உரிமம் ரத்து மற்றும் வாகனம் பறிக்கப்படும் | Acharapakkam Inspector Warning their Police Limit People


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் மற்றும் ஒரத்தி காவல் எல்லைகளுக்குள் தேவையற்று இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வலம் வருபவர்களின் வாகனம் பறிக்கப்படும் எனவும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் திட்டவட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிரை பாதுகாத்து வைரஸ் பரவாமல் இருக்க வரும் ஏப்ரல் 14-ம் தேதிவரை இந்திய அரசாங்கம் 144 தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது. 
இந்நிலையில் பொதுமக்கள் சிலர் அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்வதாகக் கூறி தேவையில்லாமல் ஊற்சுற்றி வருகின்றனர். எனவே, இப்படி சுற்றுபவர்களின் வாகனம் பறிக்கப்படுவது மட்டுமின்றி அப்படி சுற்றுபவரின் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்படும் என எச்சரிகை விடுத்துள்ளார்.
அப்படி தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டால் அந்த நபர் எதிர்காலத்தில் பாஸ்போர்ட் மற்றும் விசா பெறுவதற்கு தடைவிதிக்கப்பட்ட நபராக கருதப்படுவார். மேலும் எதிர்காலத்தில் அரசு பணியில் சேர தகுதியில்லாத நபராக கருதப்படுவார். எனவே, அப்படி ஒரு சூழலை பொதுமக்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டாம் என ஆட்டோ மூலமும் பிரச்சராம் மேற்கொண்டு வருகிறார் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன். 
மேலும், இதுநாள் வரை அச்சிறுபாக்கம் மற்றும் ஒரத்தி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 90 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment