வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பாக வழங்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீர் | Corona Relief given by Anmiga Makkal Thondu Eyakkam
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 21, 2020

ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பாக வழங்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீர் | Corona Relief given by Anmiga Makkal Thondu Eyakkam


கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவின் காரணமாக உணவின்றி தவிக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர்கள், ஊனமுற்றோர்கள் என அனைவருக்கும் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை அவர்களின் இடத்திற்கே சென்று தினந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 
மேலும், மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், இராமாபுரம், மதுராந்தகம், பாக்கம் , மாம்பாக்கம், கருங்குழி, படலாம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினர் என அனைவருக்கும் கோ..அன்பழகனின் ஆணைப்படி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் சார்பாக சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்டு பார்சல் செய்யப்பட்ட உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மதுரை மாவட்டத்தின் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம்  சார்பாகவும் இயலாதவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி யாரும் கண்டுக்கொள்ளப்படாமல் சாலையில் சுற்றித் திரியும் நாய்கள் போன்ற வாயில்லா ஜீவன்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.


 
 
 No comments:

Post a Comment