வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: புதுபட்டினத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மாமல்லபுரம் ஏ எஸ் பி. அரிசி வழங்கி,கொரோனா நிவாரணம் | Mahabalipuram ASP Giving Corona Relief to Sanitary Workers
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 29, 2020

புதுபட்டினத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மாமல்லபுரம் ஏ எஸ் பி. அரிசி வழங்கி,கொரோனா நிவாரணம் | Mahabalipuram ASP Giving Corona Relief to Sanitary Workers

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சியில் 50 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊராட்சி பகுதியின் கிராமங்களில் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இவர்களுக்கு, புதுபட்டினம் ஆர்.எம்.ஐ  நகர் பகுதியை  சேர்ந்த தன்னார்வலர் சிவகுமார்  சோபியா தம்பதியர்  இணைந்து தலா 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில், மாமல்லபுரம் ஏ.எஸ்.பி. சுந்தரவதனம், கனரா வங்கி முதன்மை மேலாளர் ஜெயேந்திரன், காவல் ஆய்வாளர் ஜோசப்செல்வராஜ், ஊராட்சி செயலாளர் நீலகண்டன், கல்பாக்கம் எலெக்ட்ரிக் ஒப்பந்ததாரர் சங்க தலைவர்  இரவி, சமூக ஆர்வலர்கள்  முரளி, கண்ணன்  உள்ளிட்டோர் பங்கேற்று மேற்கண்ட பகுதி தூய்மை பணியாளர்களுக்கு அரசி பைகளை வழங்கினர். 
மேலும், தூய்மை  பணியாளர்கள் பணிகளின் போதும், பணி முடித்து வீடு திரும்பியதும் தங்களை எவ்வாறு தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏ.எஸ்.பி. அறிவுரைகளை வழங்கினார்.

No comments:

Post a Comment