வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பெருக்கரணை, மழுவங்கரணை பகுதி இருளர்களுக்கு மதுராந்தகம் கோட்டாட்சியர் முன்னிலையில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | Corona Relief Given by Madurantakam RDO

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, May 08, 2020

பெருக்கரணை, மழுவங்கரணை பகுதி இருளர்களுக்கு மதுராந்தகம் கோட்டாட்சியர் முன்னிலையில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | Corona Relief Given by Madurantakam RDO


செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டத்திற்குட்பட்ட மழுவங்கரணை மற்றும் பெருக்கரணை பகுதிகளில் வசிக்கும் இருளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் குடும்பங்கள் என சுமார் 30 குடும்பங்களுக்கு மதுராந்தகம் ராஜா டெக்ஸ்டைல்ஸ் சார்பாக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா முன்னிலையில் அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பின்றி அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும் கடும் சிரமப்பட்டுவரும் மழுவங்கரணைப் பகுதியைச் சேர்ந்த 12 குடும்பங்கள் மற்றும் பெருக்கரணை பகுதியைச் சேர்ந்த 18 குடும்பங்கள் என 30 இருளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

 

 

 

 

No comments:

Post a Comment