வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அடேங்கப்பா…! ரூ.61.44 கோடி சொத்து மதிப்பு | அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து 5 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிப்பு | Minister Vijayabaskar | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, March 24, 2021

அடேங்கப்பா…! ரூ.61.44 கோடி சொத்து மதிப்பு | அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து 5 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிப்பு | Minister Vijayabaskar | Vil Ambu News

விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்ப சொத்து மதிப்பு 61,44,14,889 ரூபாய் என வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப்பத்திரத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் மதிப்பு ரூ.9.91 கோடி எனவும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும் வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ஆம் தேதியன்று தொடங்கியது. முதல்நாளில் .பன்னீர் செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 15ஆம் தேதியன்று எடப்பாடி பழனிச்சாமி, மு. ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.  

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆதரவாளர்களுடன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது வேட்புமனு தாக்கலில் சொத்து மதிப்பு, குற்ற பின்னணி ஆகியவற்றை அவர் குறிப்பிட்டிருந்தார்.

சொத்து விபரங்கள் விஜய பாஸ்கரின் பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.29 கோடியே 77 லட்சத்து 3 ஆயிரத்து 890 மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 94 லட்சத்து 7 ஆயிரத்து 984 என மொத்தம் ரூ.37 கோடியே 71 லட்சத்து 11 ஆயிரத்து 874 ஆகும். 

ரூ.61.44 கோடி மனைவி ரம்யா பெயரில் உள்ள அசையும் சொத்து மதிப்பு ரூ.6 கோடியே 95 லட்சத்து 5 ஆயிரத்து 800 மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூ.15 கோடியே 63 லட்சத்து 87 ஆயிரத்து 652 என மொத்தம் ரூ.22 கோடியே 58 லட்சத்து 93 ஆயிரத்து 452 ஆகும். மேலும், தனது 2 மகள்களின் பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 14 லட்சத்து 9 ஆயிரத்து 563 ஆகும் என இவர்களின் குடும்ப அசையும் மற்றும் அசையா சொத்தின் மொத்த மதிப்பு ரூ.61,44,14,889 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில் அதிகரிப்பு கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அசையும் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 52 லட்சத்து 81 ஆயிரத்து 94 ஆகவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 55 லட்சமாகவும் இருந்தது. மேலும், அவரது மனைவி ரம்யா பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 71 லட்சத்து 51 ஆயிரத்து 234 மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

குடும்ப சொத்து அதிகரிப்பு மேலும், இவர்களது 2 மகள்களின் பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் என அப்போது இவர்களது குடும்ப சொத்து மதிப்பு ரூ.9,08,77,328 ஆக இருந்தது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் இவர்களது குடும்ப சொத்து மதிப்பு ரூ.52 கோடியே 35 லட்சத்து 37 ஆயிரத்து 561 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடன் எவ்வளவு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டில் கடன் மதிப்பு ரூ.16.71 கோடி எனவும், 2021ஆம் ஆண்டில் கடன் மதிப்பு ரூ.9.91 கோடி எனவும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment