வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021 | Tamilnadu Housing Department Job Vacancies 2021 | Vil Ambu News | Tamil Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 21, 2021

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021 | Tamilnadu Housing Department Job Vacancies 2021 | Vil Ambu News | Tamil Latest News

டி.என்.ஹெச்.பி (TNHB) Tamil Nadu Housing Board நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.


தற்போதைய டி.என்.ஹெச்.பி வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 22 பிப்ரவரி 2021 அன்று இந்த அறிவிப்பை டி.என்.ஹெச்.பி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான டி.என்.ஹெச்.பி ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 15 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.


டி.என்.ஹெச்.பி யின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் ஓட்டுநர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://tnhb.tn.gov.in/ என்ற டி.என்.ஹெச்.பி யின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 02 பதவிகளுக்கான 15 காலியிடங்கள்

01.
டி.என்.ஹெச்.பி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான காலியிடங்கள்


டி.என்.ஹெச்.பி நிறுவனமானது சமீபத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 28.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.


வேலை அறிவிப்பு

விவரங்கள்

நிறுவனம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

பணி

அலுவலக உதவியாளர்

கல்வி தகுதி

8 ஆம் வகுப்பு

வேலைக்கான இடம்

தமிழ்நாடு முழுவதும்

மாத வருமானம்

ரூபாய் 15,700 முதல் 50,000 வரை/ மாத வருமானம்

மொத்த காலியிடங்கள்

10

வயது வரம்பு

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

இல்லை

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

22.02.2021

விண்ணப்பிக்க இறுதி தேதி

28.02.2021


02.டி.என்.ஹெச்.பி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான ஓட்டுநர் (Driver) பணிக்கான காலியிடங்கள்

டி.என்.ஹெச்.பி நிறுவனமானது சமீபத்தில் ஓட்டுநர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 28.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு

விவரங்கள்

நிறுவனம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

பணி

ஓட்டுநர்

கல்வி தகுதி

ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வேலைக்கான இடம்

தமிழ்நாடு முழுவதும்

மாத வருமானம்

ரூபாய் 19,500 முதல் 62,000 வரை/ மாத வருமானம்

மொத்த காலியிடங்கள்

05

வயது வரம்பு

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

இல்லை

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

22.02.2021

விண்ணப்பிக்க இறுதி தேதி

28.02.2021

தேர்வு முறை:

நேர்காணல் வழி தேர்வு செய்யப்படும்

வயது வரம்பு

பொது பிரிவினர்- 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர்- 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஆதி திராவிடர், பழங்குடியினர்- 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

வேலைக்கு தகுதியான நபர்கள் மற்றும் அரசு வேலை தேடுபவர்கள் டி.என்.ஹெச் பியின் அதிகாரபூர்வ வலைத்தளமான www.tnhb.tn.gov.in என்ற இணையத்தளத்தில் 22 பிப்ரவரி 2021 முதல் 28 பிப்ரவரி 2021 க்குள் விண்ணப்பிக்கலாம்.


பணிக்கான விதிமுறைகள்

  • விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  • தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி பணி நியமனம் செய்யப்படும் மற்றும் காலியிடங்கள் பகிர்மானம் அடிப்படையில் செய்யப்படும்.
  • முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் தவறான விவரங்கள் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • நேர்காணலின் அசல் சான்றிதழ்கள் நேர்காணல் அதிகாரியிடம் காண்பிக்கப்பட வேண்டும்.
  • விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபால் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
  • விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் வழங்கும் விவரங்களின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய பரிசீலனை செய்யப்படும். எனவே இணையதளத்தில் அல்லாது நேரில் காண்பிக்கும் மாறான விவரங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது.
 

No comments:

Post a Comment