வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தமிழகத்தில் மட்டும் கர்ணன் படம் இத்தனை கோடி வசூலா…? | Karnan Movie Income in Tamil Nadu | Vil Ambu News | Tamil Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, April 18, 2021

தமிழகத்தில் மட்டும் கர்ணன் படம் இத்தனை கோடி வசூலா…? | Karnan Movie Income in Tamil Nadu | Vil Ambu News | Tamil Latest News

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 47 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பிரியங்கா, சந்திரமௌலி, கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூலும் செய்துவருகிறது.

இந்த நிலையில் வெளியான நாளில் இருந்து தற்போது வரை தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அந்த வகையில், இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை தமிழகத்தில் மட்டும் 47 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் திரையரங்குகளில் 50 % பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


No comments:

Post a Comment