வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எலப்பாக்கத்தில் சிறப்பாக நடைபெற்ற குருபெயர்ச்சி விழா | Elapakkam Balamurugan Temple Gurupeyarchi 2021 | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 13, 2021

எலப்பாக்கத்தில் சிறப்பாக நடைபெற்ற குருபெயர்ச்சி விழா | Elapakkam Balamurugan Temple Gurupeyarchi 2021 | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த எலப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீசின்மயவிநாயகர் ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் குருபெயர்ச்சிவிழா சிறப்பாக நடைபெற்றது.

இத்திருத்தலத்தில் தெற்கு திசைநோக்கி அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீகுருபகவான் சன்னதிக்கும், நவகிரகங்களில் உள்ள குருபகவானுக்கும் மாலை 05.30 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், குருபெயர்ச்சி விழாவையொட்டி 06.00 மணியளவில் பரிகார ஹோமம் செய்யப்பட்டது.


அதன்பின் 06.21 மணியளவில் குருபகவான் மகர ராசியில்இருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து குருபகவானுக்கு மஹா தீப ஆராதனைகளும் பரிகார அர்ச்சனைகளும். பரிகாரபூஜைகளும் 07.00 மணிவரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குருவருள் பெற்றனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வீடியோ

No comments:

Post a Comment