வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆர்டர் போட்ட கோர்ட்..! மாஸ் காண்பித்த தலைமை செயலர் | டென்சன் ஆன நீதிபதிகள் | Chief Secretary Vs Court | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 09, 2021

ஆர்டர் போட்ட கோர்ட்..! மாஸ் காண்பித்த தலைமை செயலர் | டென்சன் ஆன நீதிபதிகள் | Chief Secretary Vs Court | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கு ஒன்றில், தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முதல்படியாக தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பளவு குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றை அரசு தரப்பிலிருந்து அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.


அந்த அறிக்கையில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் நீர்வள ஆதராங்களை பெருக்கி அதன்மூலம் தமிழகத்தின் நீர் தேவைகளை பூர்த்தி செய்யவும், நீர்நிலைகளை பாதுகாக்கவும் தமிழக அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்பணிப்பபோடு செயல்பட்டு வருவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுருந்தார்.


மேலும் அதில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக, மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் சேகரித்து, வருவாய்துறை செயலாளருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் நீர்நிலை ஆக்கிமிப்புகளை அகற்றவது மட்டுமல்லாமல், நீர்நிலைகளின் நீர் இருப்பின் அளவை முன்பிருந்தது போல் பேணவும் நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்படும் என்றும் நீர்நிலைகளை தூர்வாரி உரிய முறையில் பராமரித்து பழைய நிலைக்கே கொண்டு வந்து பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கபட்டது.


இந்த அறிக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு ,அறிக்கையில் நீதிமன்றம் கோரிய எந்த விபரமும் இல்லை என கடும் கண்டனம் தெரிவித்தனர். எங்கு நீர் நிலை உள்ளது என தெரிந்தால் தான் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய இயலும். எனவே தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நீர் நிலைகள் உள்ளன, அதன் சர்வே எண், அதன் பரப்பளவு உள்ளிட்ட விவரங்களைதான் அரசிடம் கேட்டோம் என்று கூறிய நீதிபதிகள், ஆனால் அவை சமர்ப்பிக்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். அந்தவகையில் இந்த அறிக்கை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தோல்வியை காட்டுகிறது என்றும் கூறினர். சம்பிரதயாத்துக்காக மட்டுமே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறி இவ்வழக்கில் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அனுமதித்த ஒரு அதிகாரி கூட, தண்டனையில் இருந்து தப்ப முடியாது என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், தமிழக மக்களின் நலனுக்காகத்தான் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கின்றது என்று தெரிவித்தனர். இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 16ஆம் தேதி தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment