வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Tamilnadu secretariat News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Tamilnadu secretariat News. Show all posts
Showing posts with label Tamilnadu secretariat News. Show all posts

Saturday, January 15, 2022

75.31 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்பு – தமிழக அரசு

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 75 லட்சத்து 31 ஆயிரத்து 122 பேர் காத்திருப்பதாக மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த டிசம்பர் 31-ம் தேதிவரை, மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 75 லட்சத்து 31 ஆயிரத்து 122 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பதிவு செய்துள்ளவர்களில் ஆண்கள் 35 லட்சத்து 35 ஆயிரத்து 992 பேர். பெண்கள் 39 லட்சத்து 94 ஆயிரத்து 898 பேர் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 232 பேர். 

பதிவு செய்துள்ளவர்களில் வயது வாரியான விவரங்களை பொறுத்தவரை, 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 25 ஆயிரத்து 668 பேர். 19 முதல் 23 வயது வரையுள்ள பல்வேறு தரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 15 லட்சத்து 50 ஆயிரத்து 245 பேர். 

24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 28 லட்சத்து 30 ஆயிரத்து 275 பேர். 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 13 லட்சத்து 13 ஆயிரத்து 652 பேர். 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11 ஆயிரத்து 282 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதேபோல், பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 414 பேர் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலைவாய்ப்பு செய்திகள் 


முந்தைய வேலைவாய்ப்பு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, January 11, 2022

நானும் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது தவனை தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்)-னை செலுத்திக் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில் "நானும் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸினை எடுத்துக் கொண்டேன்" என்றார்.


அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம் என்ற கருத்தையும் மக்களிடையே பதிவு செய்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கொரோனா தொடர்பான செய்திகள் 


முந்தைய கொரோனா தொடர்பான செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Friday, January 07, 2022

மாற்றுத் திறனாளிகளின் சிறப்பு உதவித்தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், இல்லம் தேடி மருத்துவ திட்டம் மூலம் சுமார் 43 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார். "ஒவ்வொரு முறை மழை பாதிப்பு ஏற்படும்போதும் முதல் ஆளாய் களத்தில் இருப்பவர் தான் உங்கள் முதலமைச்சர் என கூறிய அவர், சென்னை பெருநகரில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்தார்.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் என்ற பொருளாதார இலக்கை தமிழ்நாடு அரசு எட்டும் எனவும் முதலமைச்சர் கூறினார்.

மேலும், திமுகவை சேர்ந்தவர்களே தவறு செய்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர், கோடிக்கணக்கான ஸ்டாலின்களின் எண்ணங்களை செயல்படுத்தும் அரசு இது எனவும் கூறினார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தலைமை செயலக செய்திகள் 


முந்தைய தலைமை செயலக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

"பாவத்தை அனுபவிப்பீர்கள்.." சட்டசபையில் சீறிய எடப்பாடி! "உங்களுக்கு ஆட்சி போச்சே.." ஸ்டாலின் பதிலடி.!

கடந்த காலங்களில் கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்ட திட்டங்களை நிறுத்தியதால்தான் அதிமுக ஆட்சியை இழந்து இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கடுமையான பதிலடியை கொடுத்தார்.


2022ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று ஆளுநர் ஆர். என். ரவி உரையுடன் தொடங்கியது. கொரோனா பரவலால் தலைமைச் செயலகத்தில் நடத்தாமல் இந்த முறையும் கலைவாணர் அரங்கிலேயே கூட்டம் நடைபெற்றது.

2 நாட்கள் சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும் என அறிவிக்கப்பட்டதால் இன்றும் கூட்டத் தொடர் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அம்மா இரு சக்கர வாகன மானியம் கிடைக்காமல் இருப்போர், அம்மா உணவகத்தில் நடக்கும் பணியாளர்கள் குறைப்பு, அம்மா மினி கிளீனிக்குகள் மூடல் குறித்த விவகாரங்களை பேரவையில் எழுப்பினார்.

அப்போது அவர் கூறுகையில் கடந்த அதிமுக ஆட்சியில் இரு சக்கர வாகனம் வாங்கியவர்களுக்கு இன்னமும் மானியம் போய் சேரவில்லை. அதற்கான ஏற்பாடுகளை இந்த அரசு செய்ய வேண்டும். அம்மா உணவகத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. 

இது கண்டனத்துக்குரியது என்றார்.
அப்போது குறுக்கிட்ட அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன், அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன? நீங்கள் கருணாநிதி பெயரிலான எத்தனை திட்டங்களை மூடினீர்கள்? என கேள்வி எழுப்பினார். அப்போது கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி, அம்மா உணவகத்தை மூடினால் அதற்கான பாவத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்றார்.

இதையடுத்து ஆவேசமடைந்த முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மூடியதால்தான் நீங்கள் ஆட்சியை இழந்தீர்கள் என்றார். இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அம்மா கிளினிக்குகள் அனைத்தும் மூடப்படும் என்ற அதிர்ச்சி தகவலை கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் ஒரு ஆண்டுக்கு தற்காலிகமாக அம்மா மினி கிளினீக் தொடங்கப்பட்டு வெறும் 1,800 மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். செவிலியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அம்மா மினி கிளினீக் திட்டம் முடிந்து விட்டது என்றார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தலைமை செயலக செய்திகள் 


முந்தைய தலைமை செயலக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்