வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உயிர் போகும் நிலையிலும் சாமர்த்தியமாக பயணிகளின் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்! | Madurai Bus Driver Saved People at Emergency | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 09, 2021

உயிர் போகும் நிலையிலும் சாமர்த்தியமாக பயணிகளின் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்! | Madurai Bus Driver Saved People at Emergency | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

மதுரையில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட போதும், சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மதுரை பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை TN58 N2399 என்ற பதிவெண் கொண்ட அரசுப்பேருந்து 50 பயணிகளுடன் கொடைக்கானலுக்கு சென்றுக் கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ஆறுமுகம் இயக்கிக்கொண்டிருந்தார். பேருந்து மதுரை காளவாசலை கடந்து சென்றுக்கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.


வலியால் துடித்த ஓட்டுநர் ஆறுமுகம் சாலையில் எதிரே வந்த வாகனங்கள் மீது மோதாமல் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திய நிலையில் அவரது உயிர் அங்கேயே பிரிந்தது. இதன்காரணமாக பேருந்து விபத்தில் சிக்காமல் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment