வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: செல்போனால் வந்த சந்தேகம்.. இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. சென்னையில் பரபரப்பு.!! | Doubt in family due to Mobile Phone in Chennai | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 10, 2021

செல்போனால் வந்த சந்தேகம்.. இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. சென்னையில் பரபரப்பு.!! | Doubt in family due to Mobile Phone in Chennai | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை மாவட்டத்திலுள்ள புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசனுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த சபரிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதமாக தமிழரசனும், சபரிதாவும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சபரிதா செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனையடுத்து சபரிதாவின் நடத்தை மீது தமிழரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.


அப்போது கோபமடைந்த தமிழரசன் சபரிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான தமிழரசனை தீவிரமாக தேடி வருகின்றனர். இவர் மீது காட்டூர், மஞ்சூர் ஆகிய காவல் நிலையங்களில் அடிதடி, கொலை முயற்சி, கொலை போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment