வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இனி நம்ம ஊரூ ஏரி வேலையை போல் நகர்புத்திலும் வேலை | India's First Corporation Job Project in Tamilnadu | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 11, 2021

இனி நம்ம ஊரூ ஏரி வேலையை போல் நகர்புத்திலும் வேலை | India's First Corporation Job Project in Tamilnadu | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

 


சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து பேசினார். இதில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் நமக்கு நாமே திட்டமும், 100 கோடி ரூபாய் செலவில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டமும் துவக்கப்பட்டது. மேலும், 31 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களையும் வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். 

நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக கிராமப்புறத்தில் 100 நாள் திட்டம் செயல்படுவது போலவே, மாநில அரசு சார்பாக நகர்புறங்களிலும் சாதாரண பொதுமக்கள் பயன்பெற முடியும். நீர்நிலைகள், கால்வாய்கள், சாலை பராமரிப்பு என பல்வேறு நகர்புற பணிகள் இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். இந்த நகர்புற வேலைவாய்ப்பு திட்டமானது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment