வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: டான்ஸ் பயில வந்த சிறுமிகளை மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்த மாஸ்டர்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 27, 2021

டான்ஸ் பயில வந்த சிறுமிகளை மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்த மாஸ்டர்..!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் தபெளி பகுதியில் உள்ள அர்பன் டான்ஸ் அகாடமி அப்பகுதியிலேயே பிரபல நடனப் பள்ளியாகும். கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த நடனப் பள்ளியில் ஆர்யன் சோனி என்பவர் டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார். இவரிடம் சிறுமிகள், பெண்கள் என ஏராளமானோர் நடனம் பயின்று வருகின்றனர்.


இந்நிலையில் இங்கு நடனம் பயின்றுவந்த 14 வயது சிறுமியின் தாயாரின் வங்கிக் கணக்கில் இருந்து திடீரென 19,000 ரூபாய் பணம் மாயமானது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது நடனம் பயில வந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த டான்ஸ் மாஸ்டர் அதை வீடியோ எடுத்து சிறுமியை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. அந்த சிறுமி அப்படித்தான் தாயின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மாஸ்டருக்கு கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி மாஸ்டர் ஆர்யன் கானின் மொபைலில் 14 சிறுமிகள் மற்றும் பல பெண்களின் ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் இருந்துள்ளன. இதையடுத்து அவரின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அங்கு நடனம் பயில்பவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 சிறுமிகளை ஆர்யன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

அதிலும் ஒரு மாணவி மாஸ்டர் தினமும் தன்னை மிரட்டி நடன பள்ளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது மாஸ்டரை கைது செய்த போலீசார் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment