வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [விபத்து] இடிந்து விழுந்தது குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 27, 2021

[விபத்து] இடிந்து விழுந்தது குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு..!

 சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த கட்டிடமானது சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது என கூறப்படும் நிலையில் காலையிலிருந்து சிறு அதிர்ச்சி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் வெளியேறி வந்துள்ளனர். பின்னர் சுமார் 10.50 மணியளவில் இந்த கட்டிடமானது 3வது தளத்திலிருந்து சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என கூறப்படும் நிலையில் தீயனைப்பு துறையினரின் மீட்பு பணிகளுக்கு பின்னர் தான் முழு நிலவரம் தெரியவரும் என தெரிகிறது.

இந்த செய்தியை அறிந்த ஊரக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பார்வையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகாலமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக இடிந்துவிழுந்த குடியிருப்பில் வசித்து வந்த குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் மாற்று இடம் வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியால் கூட விபத்துகள் நிகழ வாய்ப்பிருக்கலாம் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் கூறுகையில் 6 பிளாக்குகளில் இருந்து வெளியேறிய மக்கள் மாற்று இடத்திற்கு செல்வதற்கு அட்வான்ஸ் தொகை வழங்கி வாடகைக்கு தங்கவைக்கப்படுவார்கள் எனவும், பின்னர் மாற்று இடம் குறித்து ஏற்பாடுகளை தமிழக முதல்வர் ஆலோசனையுடன் செய்யப்படும் எனவும் கூறினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட வாய்ப்புள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் சங்கர் தெரிவித்துள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சென்னை மாவட்ட செய்திகள் 


முந்தைய சென்னை மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment