வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: முன்னோர்களின் ஆசி கொஞ்சம் கூட உங்களுக்கு இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா.?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 30, 2021

முன்னோர்களின் ஆசி கொஞ்சம் கூட உங்களுக்கு இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா.?

முன்னோர்களின் ஆசி என்பது ஒரு குடும்பத்திற்கு குலதெய்வ அருள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது ஆகும். குலதெய்வ அருள் முன்னோர்களின் அதாவது பித்ருக்களின் ஆசீர்வாதம் ஒருவருக்கு இருக்கப் பெற்றால் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் துணிவு இருக்கும். 


ஆனால் இந்த இரண்டில் ஒன்று இல்லை என்றாலும் உங்களுக்கு அங்கு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன் சுத்தமாக இல்லாமல் போய்விடுகிறது. இந்த வகையில் முன்னோர்களின் ஆசி இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன? என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

முன்னோர்கள் என்பது நம் குடும்பத்தை சார்ந்த இறந்து போன பித்ருக்கள் ஆவர். நம் முன்னோர்களுக்கு நிகரானவர்கள் தான் குலதெய்வமும். நம் குடும்பத்தை காக்கும் கடவுளாக விளங்கும் குலதெய்வத்தின் அருளைப் பெற்றுக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். அதே அளவிற்கு பித்ரு தோஷம் இல்லாமல், பித்ரு ஆசி பெறுவதும் மிகவும் முக்கியம். 

இதனை தவறாமல் கடைபிடித்து வருபவர்களுக்கு நிச்சயம் வாழ்வில் அடுத்தடுத்த முன்னேற்றம் ஏற்படுவதை கண்கூடாக உணர முடியும்.

பித்ருக்களின் ஆசி இல்லை என்றால் அந்த குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு பிள்ளைகளின் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். முன்னோர்களின் ஆசி இல்லை என்றால் உங்களுடைய பிள்ளைகளுக்கு திருமண வரன் அமைவது என்பது தள்ளிக் கொண்டே செல்லும்.


எவ்வளவு இடங்களில் வரன் பார்த்தும் திருமணம் கை கூடி வரவில்லையே! என்பவர்களுக்கு பித்ருக்களின் ஆசி இல்லை என்று கொள்ளலாம். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் 35, 40 வயதாகியும் திருமணம் கைகூடி வராது, இத்தகையவர்கள் ஜாதகத்தைப் பார்த்தால் பித்ரு தோஷம் நிச்சயம் இருக்கும். அப்படியே திருமணம் ஆகியிருந்தாலும் பிரிவு அல்லது விவாகரத்து உண்டாகும். கணவன்-மனைவிக்குள் தீராத கருத்து வேறுபாடு, பிள்ளைகளின் மண வாழ்க்கையில் பிரச்சனை இருப்பது போன்றவை முன்னோர்களின் ஆசி இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும்.

திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லை என்றாலும் குழந்தை பிறப்பில் பிரச்சனைகள் நடக்கும். அடுத்த சந்ததியினரை உருவாக்கும் குழந்தை பிறப்பு என்பதில் தொடர் தடைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு ஐந்து, பத்து வருடமாகியும் குழந்தை இல்லாமல் இருக்கும். எவ்வளவு கோவில், குளம் ஏறி இருந்தாலும் குழந்தை பிறப்பில் தடை இருந்தால் முன்னோர்களின் ஆசி சுத்தமாக இல்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

போதிய வருமானமின்மை, தொடர் கடன் பிரச்சனை, குடும்பத்தில் துர் மரணங்கள், சந்ததி விருத்தியின்மை, திருமண வாழ்வில் பிரச்சனைகள், மன உளைச்சல் போன்றவை முன்னோர்களின் ஆசி இல்லாமையை உணர்த்துகிறது. நீங்கள் செய்வது தவறு என்று அறிந்தும் ஒரு விஷயத்தில் இருந்து உங்களால் வெளியில் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தால் அதுவும் முன்னோர்களின் ஆசி இல்லாமையை உணர்த்துகிறது. எனவே பித்ரு தோஷத்தை நீக்கிக் கொள்வது இந்த பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுபட செய்யும்.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வாருங்கள். பித்ரு தர்ப்பணம் கொடுப்பதற்கு பதிலாக நீங்கள் வேறு எதைக் கொடுத்தாலும் அதில் பிரயோஜனமில்லை. ஒரு சிலர் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதற்கு பதிலாக, தர்மம் செய்வது உண்டு. தர்மம் என்பது வேறு, தர்ப்பணம் என்பது வேறு எனவே பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை தவறவிட்டால் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பது கடினம் ஆகிவிடும்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஆன்மீக செய்திகள் 


முந்தைய ஆன்மீக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment