வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பள்ளிக்கரணை ரேடியல் சாலை விபத்தில் ஒருவர் பலி | A Person Died in Radial Road Accident at Pallikaranai | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 12, 2021

பள்ளிக்கரணை ரேடியல் சாலை விபத்தில் ஒருவர் பலி | A Person Died in Radial Road Accident at Pallikaranai | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். 


விழுப்புரம் மாவட்டம், வளத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால்(33). இவர்  பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். மேடவாக்கத்தில் நண்பர்களுடன் தங்கி, ராஜிவ் காந்தி சாலையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று இருசக்கர வாகனத்தில், துரைப்பாக்கம் நோக்கி ரேடியல் சாலையில் சென்றார். அப்போது, பின்புறம் வந்த தண்ணீர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஒரு கார் மீது மோதியது.


இதில், கார் முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. அந்த வாகனம் கோபால் ஓட்டிச் சென்ற வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கோபால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகன ஓட்டியான பள்ளிக்கரணையைச் சேர்ந்த கணேசன், 34, என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இது குறித்து, மவுன்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான திருவாரூர் மாவட்டம், வடபாதி மங்களத்தைச் சேர்ந்த பூவரசன், 25, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment