வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கள்ளக்காதல் மோகத்தால் கட்டிய கணவரை அடித்து கொன்று தண்ணீர் டிரம்முக்க்குள் அடைத்த மனைவி.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 26, 2021

கள்ளக்காதல் மோகத்தால் கட்டிய கணவரை அடித்து கொன்று தண்ணீர் டிரம்முக்க்குள் அடைத்த மனைவி.!

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சேதுபதி, பிரியா தம்பதி. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்களது வீட்டில் இருந்து அதிளவில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.


அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில், பிரியாவின் வீட்டில் தண்ணீர் ஊற்றி வைப்பதற்காக இருந்த பிளாஸ்டிக் பேரலில் இருந்து துர்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை திறந்து பார்த்தபோது, அதில், சேதுபதியின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பிரியா முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், "கூலி வேலை செய்து வரும் சேதுபதி வேலைநிமித்தமாக வெளியூர் சென்று வருவார். மேலும் தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது அருந்தி வந்ததுள்ளார். இந்த நிலையில், பிரியாவுக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் சதீஷ்குமார் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களது கள்ளத்தொடர்புக்கு சேதுபதி இடையூறாக இருப்பதால் அவரை கொலை செய்து பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்துள்ளனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்திவிட திட்டமிட்டிருந்தது" தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சேலம் மாவட்ட செய்திகள் 


முந்தைய சேலம் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment