வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கத்தை அடுத்த வெங்கடேசபுரத்தில் இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 26, 2021

அச்சிறுபாக்கத்தை அடுத்த வெங்கடேசபுரத்தில் இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் மற்றும் அச்சிறுப்பாக்கம் சந்தை பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் இல்லம் தேடிகல்வி கலை நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் அச்சிறுபாக்கம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கி.சிவராமகிருஷ்ணன், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜ பாரதி , வட்டார குழு உறுப்பினர்  கல்வியாளர்  சீனுவாசன், மாநில ஆலோசகர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இல்லம் தேடி கல்வி குறித்து கலைக்குழுவினர் கலைநிகழ்ச்சியில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்தும் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு எந்த விதத்திலாவது உதவி செய்வது குறித்து விளக்கம் அளித்தனர்.

மேலும் கிராமத்தில் உள்ள கிராம சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை அரசு பள்ளிக்கு செய்ய வேண்டும் என கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அரசு பள்ளியில் தரமான கல்வி நடத்துவது குறித்து பாடல் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அச்சிறுப்பாக்கம் அரிமா சங்க உறுப்பினர்கள் லயன் வி.டி.ஆர்.வி.எழிலரசன், பொறியாளர் லயன் அ.கண்ணன், லயன் ரா.முருகன், சரவணன், அச்சிறுப்பாக்கம் பேரூர் செயலாளர் எஸ்.உசேன், மாவட்ட பிரதிநிதி கே.சித்தார்த்தன் மற்றும் கஜேந்திரன், ஆனந்தகண்ணன், பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர் .

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment