வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கத்தில் நடைபெற்ற விவசாய மின் இணைப்பு திருத்தம் செய்ய சிறப்பு முகாம்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 03, 2022

அச்சிறுபாக்கத்தில் நடைபெற்ற விவசாய மின் இணைப்பு திருத்தம் செய்ய சிறப்பு முகாம்.!

தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் கோட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் இரா.மணிமாறன் செங்கல்பட்டு அறிவுறுத்தலின்படி இன்று அச்சிறுபாக்கம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 01.04.2003 முதல் 31.03.2013 வரை வின்னபித்துள்ள விவசாய மின் இணைப்பிற்கு பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் பெயர் மாற்றம், சர்வே எண் உட்பிரிவு மாற்றம், சர்வே எண் மாற்றம் ஆகியவைகளை மாற்றம் செய்து கொடுக்க சிறப்பு முகாம் நடைபெற்றது. 


விவசாய மின் நுகர்வோர்கள் பலர் இதில்  கலந்துகொண்டனர். மேலும், பெயர் மாற்றத்திற்கு இறப்பு சான்று, வாரிசு சான்று, பங்குதாரர்களின் சம்மத கடிதம், கிராம நிர்வாக அலுவலரின் சான்று ஆகியவற்றை விவசாயிகள்  கொண்டு வந்தனர்.

சர்வே எண் உட்பிரிவு மாற்றத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சான்று, வரைபடம், சர்வே எண், மற்றும் கிணறு மாற்றத்திற்கு பழைய புதிய கிராம நிர்வாக அலுவலர் சான்று, வரைபடம் ஆகியவைகளை அலுவலகத்திற்கு கொண்டு வந்து தகவல் பெற்றுகொண்டனர். 

இதில் பெரும்பேர்கண்டிகை,  மின்னல் சித்தாமூர், தொழுப்பேடு, கடமலைபுத்தூர், நுகும்பல், சூனாம்பேடு, சிறுமைலூர் உள்ளிட்ட  அனைத்து பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதில் உதவி செயற்பொறியாளர்கள் மகேஸ்வரன் துரைராஜ் தனசேகர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் தேவநாதன் வணிக ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில், சாதாரண மின் திட்டத்தின் கீழ் செயல்படும் குறிப்புகளை விவசாயிகளுக்கு அச்சிறுப்பாக்கம் கோட்ட செயற்பொறியாளர் கு.கிறிஸ்டோபர் லியோராஜ் விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment