வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம்.. 'தமிழ்நாட்டின் உறுதி...!' - ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 05, 2022

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம்.. 'தமிழ்நாட்டின் உறுதி...!' - ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்.!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் மரபு மாறாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்.


கொரோனா நோயாளிகள் 33,117 நபர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்.

சமீபத்தில் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில், சிறந்த முதலமைச்சராக நமது முதலமைச்சர் தேர்வாகியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே இப்பெயரை முதலமைச்சர் பெற்றிருப்பது பெருமைக்குரியது என ஆர்.என். ரவி புகழாரம்.

நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது; இருமொழிக் கொள்கையை அரசு தொடர்ந்து கடைபிடிக்கும்

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, கொள்கைகள் வகுத்து தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

தெற்காசியாவில் அதிக முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக, தமிழ்நாடு அரசு திகழ்கிறது.

ஒமிக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில்தான்..! இலங்கை சிறையில் உள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

GST வருவாய் இழப்பை ஈடுகட்ட ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேகதாது அணை கட்ட கர்நாடகாவை ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது. வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ஒன்றிய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

ஜனவரி 12ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும். அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4 மாதங்களில் 61% அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தலைமை செயலக செய்திகள் 


தலைமை செயலக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment