வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சாலையை தோண்டிப் பார்ப்போமா? காண்ட்ராக்டரை நேரில் ரெய்டு விட்ட அமைச்சர்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 11, 2022

சாலையை தோண்டிப் பார்ப்போமா? காண்ட்ராக்டரை நேரில் ரெய்டு விட்ட அமைச்சர்..!

சாலையை தோண்டி பார்ப்போமா? மோசமாக இருந்தால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்ய வேண்டி இருக்கும் என எச்சரித்த அமைச்சர்.


கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டவர் மனோ தங்கராஜ். இவர் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் இயங்கி வருகிறார். கன்னியாகுமரி- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை இவரது பத்மநாபபுரம் தொகுதி வழியே பயணிக்கிறது.

இந்த சாலை பணிகள் மிக மோசமாக நடந்திருப்பதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து அமைச்சருக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அந்த சாலையில் பயணித்த அமைச்சர் மனோ தங்கராஜ் அங்கு பணியை கண்காணித்துக் கொண்டிருந்த காண்ட்ராக்டரை நேரில் சந்தித்தார். அப்போது பணியில் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து வரும் புகார்கள் குறித்து நேரில் கேட்டார்.

அப்போது சாலையை தோண்டி பார்ப்போமா? மோசமாக இருந்தால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்ய வேண்டி இருக்கும்’ என நேரடியாக கான்ட்ராக்டரிடம் எச்சரிக்கை செய்தார் அமைச்சர். இந்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பிறகு காண்ட்ராக்டர், ‘தரமான பணி நடைபெறும்’ என உறுதி கொடுத்ததை தொடர்ந்து அமைச்சர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.   

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கன்னியாகுமரி மாவட்ட செய்திகள் 


முந்தைய கன்னியாகுமரி மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment