Pages
உத்திர பிரதேச மாநிலத்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவரை மர்ம நபர்கள் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டோலி மாவட்டத்தில் உள்ள யுனானி மருத்துவ கல்லுாரியில் படிக்கும் 20 வயது மாணவி வீடு திரும்புவதற்காக பஸ் ஸ்டாப்பில் காத்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த 3 மர்ம நபர்கள் அந்தை பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர், ஒரு வீட்டில் அந்த பெண்ணை அடைத்து வைத்து, அவரை கட்டாயப்படுத்தி மது அருந்த செய்தனர். மது போதையில் அந்த பெண் மயங்கியதும், மூவரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர்.
இதன் பின்னர் அம்மூவரும் மது அருந்திவிட்டு மயக்கத்தில் தூங்கிவிட்டனர்.
அந்த பெண் கண் விழித்து பார்த்த போது, மூவரும் மயங்கி கிடந்ததால், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அந்த பெண் இந்த கொடூர நிகழ்வு குறித்து அளித்த புகாரை வைத்து வழக்கு பதிவு செய்து போலீஸார் ஒருவனை கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment