வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Chengalpattu District ADMK News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Chengalpattu District ADMK News. Show all posts
Showing posts with label Chengalpattu District ADMK News. Show all posts

Friday, December 24, 2021

அச்சிறுபாக்கத்தில் அனுசரிக்கப்பட்ட டாக்டர் எம்.ஜி.ஆர்-ன் 34 வது ஆண்டு நினைவஞ்சலி..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34வது ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. 


அச்சரபாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பி.சுப்பிரமணியன் தலைமையில் அச்சரபாக்கம் நகர கழக செயலாளர் ஏ.இ.முருகதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அச்சிறுபாக்கம் பஜார் வீதியில் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி திருவுருவ சிலைக்கு மலர்தூவி மாலை அனிவித்தனர்.  

பின்பு, சில நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தபட்டது.
இந்த நிகழ்வில் அ.தி.மு.க-வின் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

அ.தி.மு.க செய்திகள் 


முந்தைய அ.தி.மு.க செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, September 27, 2020

எல்.எண்டத்தூரில் நடைபெற்ற இணையவழி தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி | DMK Online Membership Card Function at L.Endathur | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் எல்.எண்டத்தூரில் 100-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் இணையவழி உறுப்பினராக தி.மு.க-வில் இணைந்தனர்.


காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்டடோர் 24.09.2020 அன்று தி.மு.க-வில் இணையவழி உறுப்பினராக இணைந்தனர். 


அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தம்பு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் சிவபெருமான் உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் வேதாச்சலம், அசோகன், தீணன், சீனிவாசன், லெனின், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கலியுக கண்ணதாசன், பிரபாகரன், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் டி.ஆர்.நாராயணன், எல்.எண்டத்தூர் ஊராட்சி செயலாளர் பாண்டுரங்கன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


புதியதாக தி.மு.க-வில் இணைந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் “எல்லோரும் நம்முடன்” என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட், தொப்பி, இணையவழி உறுப்பினர் சேர்க்கைக்கான அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டு கட்சியின் நெறிமுறைகள் குறித்த அறிவுரைகளை மாவட்ட செயலாளரும், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினரும் வழங்கினர்.


தி.மு.க-வில் புதியதாக இணைந்த உறுப்பினர்கள் கழக முன்னோடிகளுடன் இணைந்து தமிழகத்தின் அடுத்த ஆட்சி தி.மு.க ஆட்சிதான் எனவும், அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் எனவும் சபதத்தினை எடுத்து அதற்கான அனைத்து களப்பணிகளையும் சிறப்பாக மேற்கொள்வோம் என கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Sunday, May 17, 2020

1000 குடும்பங்களுக்கு 6 லட்ச ரூபாய் மதிப்பில் திருக்கழுக்குன்றம் அருகே அ.தி.மு.க வழங்கிய கொரோணா நிவாரணம் | ADMK Giving Corona Relief at Periyakattupakkam Thirukazhukundram | Vil Ambu News


கொரோணா நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வேலையின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
அது போல் காஞ்சி மத்திய மாவட்டம்  (செங்கல்பட்டு மாவட்டம்), திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகாட்டுப் பாக்கம், அமிஞ்சிகரை, வீராபுரம், ரெட்டிபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு  ஒன்றிய அதிமுக அவைத் தலைவரும், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான  ரகுராமன் ரெட்டியார் ஏற்பாட்டில் காஞ்சி மத்திய மாவட்ட  செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் என கொரோனா நிவாரண பொருட்களை நேற்று வழங்கினார். 
மேலும், ஏழை எளியோருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்டவர்கள் தமிழக அரசுக்கும், காஞ்சி மத்திய மாவட்ட செயலாளருக்கும், ஒன்றிய அவைத் தலைவருக்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். 
இதில் மத்திய  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், மத்திய மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்வந்த்ராவ், மஞ்சுளா ரவிக்குமார், மத்திய மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர். பிரவீன் குமார், திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் விஜயரங்கன்,  நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், சந்திரபாபு, வள்ளிபுரம் ரவிக்குமார், ஹரிதாஸ், துரை, செந்தில்குமார், மணிகன்டன், அர்ஜுணன் உள்பட பலர் உடனிருந்தனர்

Friday, May 15, 2020

மாமல்லபுரத்தில் அதிமுக மத்திய மாவட்ட வர்த்தக பரிவு சார்பாக ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு | ADMK Giving Corona Relief at Mahabalipuram Circle

செங்கல்பட்டு மாவட்டம்,  மாமல்லபுரத்தில் அதிமுக காஞ்சி மத்திய மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மாமல்லபுரம் ஜி. ராகவன் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு  இலவச உணவு (பார்சல் முறையில்) வழங்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது

கொரோனா நோய் தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததில் இருந்து மாமல்லபுரம் பேரூராட்சி பகுதி முழுவதும் துவங்கி அருகிலுள்ள வடகடம்பாடி, மணமை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வந்த நிலையில், இலவச உணவு திட்டத்தினை (பார்சல் மட்டும்காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் துவக்கி வைத்தும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட மகளீரணி செயலாளருமான மரகதம் குமரவேல் வழங்கியதை தொடர்ந்து இதுநாள் வரை சமூக இடைவெளியுடன் பொது மக்கள் உணவை வாங்கி சென்றனர்

இந்த நிகழ்வில் நகர செயலாளர் மாமல்லபுரம் கணேசன், நிர்வாகி உமாபதி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.