வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Child News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Child News. Show all posts
Showing posts with label Child News. Show all posts

Sunday, December 12, 2021

குழந்தை இல்லை என்பதற்காக சிறுமியை 4ஆவது திருமணம் செய்த கில்லாடி! | Child Marriage at Ariyalur | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் ஆன நிலையில் குழந்தை இல்லை என்பதற்காக நான்காவதாக 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.


நான்காவதாக சிறுமியை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் கர்ப்பமாகியுள்ளார். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ராதாகிருஷ்ணன், சிறுமியின் தாயார் பரமேஸ்வரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Wednesday, August 14, 2019

பச்சைக் குழந்தைம்மா.. வெறும் 1000 ரூபாய்தான்.. வாங்கிங்கய்யா..

தெலுங்கானா மாநிலம் வாராங்கல்லில் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியாததால் அதை ரூ 1000-த்துக்கு விற்பனை செய்ய முயன்ற தாயை போலீஸார் கைது செய்தனர். 
 
வாராங்கல்லில் ஜாங்கான் மாவட்டத்தில் பெம்பார்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜையா. இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. ராஜையா எந்த வேலைக்கும் செல்லாததால் கைக் குழந்தையை வைத்து குடும்பம் நடத்த முடியாமல் சுஜாதா கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சுஜாதாவுக்கும் ராஜையாவுக்கும் நேற்று தகராறு நடந்தது.

கூவி ஏலம் 
இதையடுத்து சுஜாதா கணவரிடம் கோபித்து கொண்டு வாராங்கல் பஸ் நிலையத்துக்கு வந்தார். குழந்தையை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து விடுவதாக கூவி கூவி ஏலமிட்டார்.

விசாரணை  
விசாரணை இதனால் சுஜாதாவின் ஊர்காரர்களும் ஜாங்கான் மாவட்டத்தினரும் அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

வாராங்கல்  
அப்போது தனது கணவர் சரியில்லாததால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. இதனால் குழந்தையை விற்க முயற்சித்தேன் என்றார். பின்னர் மேலும் விசாரணையில் நான் வாராங்கல் பஸ் நிலையத்திலிருந்து ஊருக்கு திரும்ப சிலரிடம் பணம் கேட்டேன்.


போலீஸ் கைது 

அதற்கு அவர்கள் குழந்தை கொடுத்துவிட்டு போ என்றனர் என சுஜாதா தெரிவித்தார். மேலும் குழந்தைக்கு 20 நாட்களுக்கு முன்பு சிகிச்சை அளித்த நிலையில் மருத்துவரை மீண்டும் சந்திக்க செல்வதாகவும் சுஜாதா தெரிவத்தார். இதுபோல் மாற்றி மாற்றி பேசுவதால் சுஜாதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

காப்பகத்தில் 
குழந்தைகள் நல குழுவிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. தாய் மனநிலை சரியில்லாதவர் போல் பேசுவதால் குழந்தையை அதற்கான காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Monday, August 05, 2019

லிப்ட் ஒன்றில் சிக்கி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட சகோதரனின் உயிரை காப்பாற்றிய சிறுமி

லிப்ட் ஒன்றில் சிக்கி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட சகோதரனின் உயிரை சிறுமி ஒருவர் காப்பாற்றி பாராட்டை பெற்று உள்ளார்.
 


 குடியிருப்பில் 3 சிறுவர்கள்  லிப்ட்டில் ஏறுகிறார்கள். அப்போது லிப்ட் நகர்ந்ததும் லிப்ட் கதவில் மாட்டிய கயிறு  ஐந்து வயது சிறுவன் கழுத்தில் மாட்டி மேலே தூக்கப்பட்டான். உடனடியாக சிறுவனின் சகோதரி வேகமாக செயல்பட்டு சிறுவனின் கழுத்தில் மாட்டிய கயிறை அகற்றினார். இதனால் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். இந்த சம்பவம் துருக்கியின் இஸ்தான்புல்லில் கடந்த புதன்கிழமை நடந்ததாக தி மிரர் தெரிவித்துள்ளது.

இந்த கடினமான நேரத்தில்  சகோதரி நிதானமாக  நிலைமையை கையாண்டதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
''அந்த பெண் மிக முக்கியமான சூழ்நிலையில்  மிக விரைவாக கையாண்டார்'' என்று வீடியோவுக்கு பதிலளித்த ஒருவர் கூறி உள்ளார். பதட்டமில்லாமல் நிலமையை கையாண்டது மிகவும் நல்லது  என மற்றொருவர் கூறி உள்ளார்.

உள்ளூர் தகவல்களின்படி, சிறுவன் உடல்நிலை தற்போது சரியில்லாமல் இருப்பதாகவும்,  குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Wednesday, November 14, 2018

12 வயசு மாமா.. 2 வயசு மருமகன்.. நைஸாக வந்த பெண்.. அடுத்து நடந்தது என்ன?



2 வயது மருமகனை கடத்த வந்த பெண், காப்பாற்றிய 12 வயசு மாமா

12 வயசு மாமாவின் வீர செயல்தான் இந்த செய்தி!! ஆம்.. இந்த மாமா 2 வயசு குழந்தையையே காப்பாற்றி இருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!! மகாராஷ்டிராவில் மும்ப்ரா என்ற இடம் உள்ளது. இங்கு வீடு ஒன்றில் ஒரு கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. வெளியில் பந்தல், உள்ளிட்ட அலங்காரங்கள், தோரணங்கள் என அந்த தெருவே கலர்ஃபுல்லாக இருந்தது. கல்யாணம் முடிந்து எல்லாரும் சாப்பிட்டனர். அப்போது வீட்டுக்கு வெளியில் 2 வயது ஆண் குழந்தையை வைத்து 2 பேர் விளையாடி கொண்டிருந்தனர். அதில் ஒருவர் அந்த குழந்தையின் அண்ணன், இன்னொருவர் மாமா. அண்ணனுக்கு வயது 10, மாமாவுக்கு வயது 12.

12 வயது மாமா 
3 பேரும் விளையாடி கொண்டிருந்தபோது, பெரியவர்கள் யாரும் அங்கே இல்லை. அந்த நேரம் பார்த்து ஒருபெண் அங்கு வந்து விளையாடுவதை பார்த்து கொண்டே இருந்தார். பிறகு 2 வயது ஆண் குழந்தை சற்று தூரமாக நடக்க ஆரம்பித்ததும், நைசாக குழந்தையிடம் பேசி கடத்த முயன்றார். இதை 12 வயது மாமா பார்த்துவிட்டார்.


தம்பிக்கு சாக்லட்
 அந்த பெண்ணிடம் ஓடிச்சென்ற மாமா, "குழந்தையை எங்க தூக்கிட்டு போறீங்க?" என்றகேட்டார். இப்படி ஒரு கேள்வியை அந்த பெண் எதிர்பார்க்கவில்லை. அதனால், "தம்பிக்கு சாக்லட் வாங்கி தர போகிறேன்" என்றார். இதைக் கேட்டதும் மாமாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. யார் சாக்லட் கொடுத்தாலும் வாங்க கூடாது என்று வீட்டில் பெற்றவர்கள் ஏற்கனவே சொன்னது ஞாபகத்துக்கு வந்துவிட்டது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

விரட்ட துவங்கினர்
அதனால் குழந்தையின் அண்ணனிடம் சென்று, சாக்லட் சமாச்சாரத்தை சொன்னார். உடனே அண்ணனும் அந்த பெண்ணை விரட்டி வந்து "என் தம்பியை எங்க தூக்கிட்டு போறீங்க?" என்று மாமா கேட்ட கேள்வியை கேட்டார். இதனால் உஷாராகிவிட்ட அந்த பெண், குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினார். இதை பார்த்ததும் மாமாவும் அண்ணனும் அந்த பெண்ணை விரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.



2 வயது தம்பி மீட்பு 
இதில், கடைசி வரை அண்ணன் அந்த பெண்மணியை விடவே இல்லை. கிட்டத்தட்ட 8 நிமிடம் துரத்தி ஓடியிருக்கிறார். பின்னர் ஓட முடியவில்லையோ, அல்லது என்ன காரணமோ தெரியவில்லை, அந்த பெண் குழந்தையை விட்டுவிட்டு அந்த பெண் ஓடிவிட்டார். பிறகு அண்ணன் தன் தம்பியை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

சாக்லட் பெண்  
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதை வைத்து அந்த சாக்லட் பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். குழந்தை அண்ணன் மீட்டாலும், அதற்கு முக்கிய காரணமாக இருந்த நம்ம மாமாவுக்கு குடும்பத்தினர் நிறைய முத்தங்களை தந்தார்கள்!!

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts