வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Madurantakam Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Madurantakam Latest News. Show all posts
Showing posts with label Madurantakam Latest News. Show all posts

Friday, September 08, 2023

மதுராந்தகம் அருகே கார் வேன் மோதல்.! காரில் வந்த நான்கு பேர் சம்பவ இடத்தில் பலி.!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள செய்யூர் செல்லும் சாலையில் எல்.என்.புரம் என்ற இடத்தில் செய்யூரில் இருந்து மதுராந்தகம் நோக்கி வந்த வேனும் மதுராந்தகத்திலிருந்து செய்யூர் நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் சம்பவ இடத்தில் பலி. ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலி.


மொத்தம் நான்கு பேர் இந்த விபத்தில் பலி ஆகியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆண்கள். விபத்து குறித்து  செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடந்தி வருகின்றனர்.

விபத்தில் பலியானவர்கள்.!





📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, November 21, 2021

பின்னப்பூண்டி திரௌபதியம்மன் ஆலயம் | சொக்கப்பனை கொளுத்துதல் 2021 | Pinnapoondi Sokkapanai 2021 | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரௌபதியம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீப திருநாளன்று ஆண்டுதோறும் சொக்கப்பனை கொளுத்தும் விழா நடைபெறும். அதுபோன்று இந்த ஆண்டும் (2021) சொக்கப்பனை கொளுத்தும் விழா சிறப்பாக நடைபெற்றது.

Saturday, November 13, 2021

எல்.எண்டத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடியின மக்களுக்கு தன்னார்வலர் வழங்கிய இரவு உணவு | Night Food Provided to L. Endathur Flood Affected Trible People | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எல்.எண்டத்தூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் அரசு கட்டிடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழ்கொடுங்காலூர் ஶ்ரீசாய் ஏஜென்சீஸ் பெட்ரோல் பங்கு உரிமையாளர் டாக்டர்.எல். இராசேந்திரன் இரவு உணவு வழங்கினார்.


மேலும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள இருளர் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை தேவைகளையும் விரைவில் பூர்த்தி செய்து தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.  





Tuesday, April 27, 2021

[விவசாயி பலி] வைக்கோல் சுற்றும் இயந்திரத்துடன் கூடிய டிராக்டர் ஏறி மதுராந்தகம் அருகே விவசாயி உடல் நசுங்கி பலி | Madurantakam Anaikattu Poonjikadu Farmer Died due to Tractor Accident | Vil Ambu News | Tamil Latest News

செங்கல்பட்டு மாவட்டம், அணைக்கட்டு பகுதியை அடுத்த புஞ்சிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன்  அவர்களின் மகன் சண்முகம் (42) வயலில் இயந்திரத்தின் மூலம் வைக்கோல் சுற்றும்  பணிகளை மேற்கொண்டுவந்தார். 


அப்போது, எதிர்பாராத விதமாக வைக்கோல் சுற்றிக் கொண்டிருந்த டிராக்டர் சண்முகத்தின் மீதி ஏறியதால் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அவர் பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அணைக்கட்டு காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம்  அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து அணைக்கட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Wednesday, March 17, 2021

எல்.எண்டத்தூரில் சிறப்பாக நடைபெற்ற தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் | ம.தி.மு.க கட்சியைச் சேர்ந்த மல்லை சத்யா போட்டி | Mallai Sathiya DMK Candidate | Madurantakam AC | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக கூட்டணி கட்சியான ம.தி.மு.க-வைச் சேர்ந்த மல்லை சத்யா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். 

இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டமானது மதுராந்தகம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நேற்று (16.03.2021) நடைபெற்றது. இதனையடுத்து மதுராந்தகம் தொகுதி, அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பாக எல்.எண்டத்தூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தினை அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.தம்பு சிறப்பாக செய்திருந்தார்.


எல்.எண்டத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்களிடமும் வேட்பாளர் மல்லை சத்யா வாக்குகளை சேகரித்தார்.


இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் துணை அமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணிகளின் அமைப்பாளர்கள் என ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வேட்பாளரை வாழ்த்தினர். பின்னர் அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் வேட்பாளர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், கடந்த பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கிடைத்த மகத்தான வெற்றியைப் போல இந்த சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி 234 தொகுதிகளிலும் கிடைக்கும் எனவும், பொதுமக்கள் இந்த வரவேற்பும், கழக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் வரவேற்புகளும் வெற்றிக்கான பலம் வாய்ந்த தீணியாக அமைந்துள்ளதாகவும் மல்லை சத்யா உரையாடினார். 

இந்த கூட்டத்தில் ம.தி.மு.க கட்சியின் மாவட்ட செயலாளரும் கலந்துகொண்டு சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Wednesday, October 14, 2020

நில ஆக்கிரமிப்பை மீட்டெடுத்த மதுராந்தகம் எம்.எல்.ஏ புகழேந்தி | Land Issue in Janakipuram at Madurantakam Taluk | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஜானகிபுரம் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே 98 செண்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த இருவர் இது எங்கள் முன்னோர்களின் சொத்துதான் எனக்கூறி பல இலட்சத்திற்கு பேரம் பேசி பணம் பெற்று நிலத்தை விற்பனை முயற்சி செய்துள்ளனர். 

இதனை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இந்த சட்டத்திற்கு புறம்பான செயலை தட்டிக் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எதையும் கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் ஆக்கிரமிப்பு பணிகளில் கவனம் செலுத்தியதால் இளைஞர்கள் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளனர்.


பின்னர், “இந்த இடம் அரசுக்கு சொந்தமான நிலம், இதனை யாரும் உரிமை கோர முடியாது” என்ற பதாகைகளை வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இருமுறை வைத்தும் அந்த பதாகைகளை ஆக்கிரமிப்பாளர்கள் பிடிங்கி எறிந்துள்ளனர்.

எனவே, அப்பகுதி இளைஞர்கள் இந்த விவகாரம் குறித்து கடந்த 02.10.2020 அன்று மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து கிராம இளைஞர்களிடம் தெளிவாக கேட்டறிந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ, கிராம இளைஞர்களை 06.10.2020 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸிடம் புகார் மனுவை அளித்தார். பின்னர், மதுராந்தகம் எம்.எல்.ஏ. சு.புகழேந்தி முயற்சியில் செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவின்பேரில் அந்த இடம் மீட்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த இடம் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்காமல் இருப்பதுற்கு சமுதாய நலக்கூடம் கட்டித்தரக் கோரி 13.10.2020 அன்று மாலை மதுராந்தகம் எம்.எல்.ஏ-வின் வீட்டிற்கே சென்று ஜானகிபுரம் கிராம இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட எம்.எல்.ஏ இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைப்பதாக உறுதியளித்தார்.

இந்த செயல்களுக்காக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர். நெல்லிக்குப்பம் சு.புகழேந்திக்கு ஜானகிபுரம் கிராம இளைஞர்கள் தங்களின் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.


Wednesday, December 25, 2019

மதுராந்தகத்தில் "தூணை பிளந்து காட்சியளிக்கும் ஶ்ரீஉக்கிரநரசிம்மர்" – தமிழகத்திலேயே இங்குதான் அருள்பாலிக்கிறார் | Madurantakam Soorakottai Lakshmi Narasimmar

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள சூரக்கோட்டை ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயிலில் ஶ்ரீஅனுமந் ஜெயந்தி நாளையொட்டி 108 பால்குட உற்சவ பெருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. 
இந்த விழாவில் கோயில் நிறுவனர் வேணுதாஸ் சுவாமிகள் தலைமையில் 25.12.2019 காலை 10 மணிக்கு பிரசித்தி பெற்ற மதுராந்தகம் ஶ்ரீஏரிகாத்தராமர் கோயில் குளத்தின் கரையிலிருந்து 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். 
 
பின்னர், ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு 108 பால்குட அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம், மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றன.  பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. 
இந்த கோயிலின் சிறப்பு என்னவெனில் "தூணை பிளந்து காட்சி தரும் 43 அடி உயர ஶ்ரீஉக்கிரநரசிம்மர் தமிழ்நாட்டிலேயே இங்குதான் அருள்பாலிக்கிறார்". அவருக்கு எதிரே 21 அடி உயரத்தில் ஶ்ரீஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். 
மேலும், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த ஆனைக்குன்னம் ஶ்ரீசஞ்சீவிராயர் திருகோவிலிலும் அனுமந் ஜெயந்தி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.