வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: PMK Anbumani Ramadass
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label PMK Anbumani Ramadass. Show all posts
Showing posts with label PMK Anbumani Ramadass. Show all posts

Monday, December 20, 2021

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்: 'தமிழக அரசு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்' - டாக்டர். அன்புமணி ராமதாஸ்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கம், நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்.


இவர் அதே பகுதியில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

தற்போது அவரது மனைவி கர்ப்பமுற்ற நிலையில் அவருக்கு கடந்த 13-ஆம் தேதி பிரசவம் நாள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேதியில் அவருக்கு பிரசவ வலி வராத நிலையில், கடந்த 18-ஆம் தேதி மாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து லோகநாதன் யூ-டியூபை பார்த்து அதன்படி பிரசவம் பார்த்தபோது இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரது மனைவி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். எனவே, அவரை அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர். லோகநாதன்.
அங்கு அவரது மனைவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். தற்போது இங்கு லோகநாதனின் மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் குழந்தை இறப்பு குறித்து லோகநாதனிடம் நெமிலி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ், இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்


இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், 'அரக்கோணம் மாவட்டம் பனப்பாக்கத்தில் இளம்பெண்ணுக்கு அவரது கணவர் யூ-ட்யூப் பார்த்து பிரசவம் பார்த்ததாகவும், அதில் குழந்தை இறந்ததுடன், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் வெளியான செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.

மகப்பேறு என்பது மிகவும் சிக்கலான, சிறிய தவறு நடந்தாலும் தாய்க்கும், சேய்க்கும் உயிரிழப்பை ஏற்படுத்தி விடக் கூடிய விஷயமாகும். யூ-ட்யூபை பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல. மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது.

நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. 108 தொலைபேசியில் அழைத்தால் அவசர ஊர்தியில் வீட்டுக்கே வந்து பெண்ணை அழைத்துச் சென்று மகப்பேறு பார்த்து மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து விடும் வசதியை நான் மத்திய அமைச்சராக இருந்த போதே ஏற்படுத்தியுள்ளேன்.

மருத்துவமனையில் மகப்பேறு பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கு வேறு பல உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவமனையில் மருத்துவர்களால் செய்யப்படும் மகப்பேறு தான் பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும்.

யூ-ட்யூப் மூலம் மகப்பேறு பார்ப்பது ஒரு சாகசம் என்பது போன்ற விஷமப் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் செய்யப்படுகிறது. அவற்றை மக்கள் நம்பக் கூடாது. இது தொடர்பாக தமிழ்நாடு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Thursday, December 09, 2021

மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்! - டாக்டர். அன்புமணி இராமதாஸ் | Dr. Anbumani Ramadoss Talk about Electricity Bill Price | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தமிழக அரசுக்கு இருந்தால் அதை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.


பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பை ஈடு கட்டுவதற்காக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு  தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால், அது ஏற்கனவே பெரும் துயரத்தில் இருக்கும் மக்களுக்கு கூடுதல் துயரத்தை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதிக்குள் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதாகவும், அதன்படி மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கான நடைமுறைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கக்கூடும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் உண்மைத் தன்மையை தமிழக அரசு தான் தெரிவிக்க வேண்டும். 


ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அப்போதைய நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நேரம் வந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த இரு தகவல்களையும் வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுமோ? என்ற ஐயமும், கவலையும் எழுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். சாதாரணமான தொழிலாளர்கள் முதல் அமைப்பு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் வரை பலரும் வேலை இழந்துள்ளனர். பெரும்பான்மையான பணியாளர்களின் மாத ஊதியம் குறைக்கப்பட்டு  உள்ளன. ஊதிய உயர்வு என்ற பேச்சுக்கே கடந்த இரு ஆண்டுகளாக வாய்ப்புகள் இல்லை. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு கூட தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. 


அண்மையில் பெய்த மழை அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்களை அடியோடு துடைத்து விட்டது.

தமிழ்நாட்டில் தொடர்மழை ஓய்ந்து விட்டாலும் அதன் பாதிப்புகள் இன்னும் விலகவில்லை. காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. அதனால் வாழ முடியாத சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப் பட்டால், அதுவும் தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தேசித்துள்ளவாறு, 20% உயர்த்தப்பட்டால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகி விடும். அதை அரசு தவிர்க்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் ஒன்றரை லட்சம் கோடிக்கும் அதிக இழப்பில் இயங்குவதும், அதற்கு இணையான கடன் சுமை இருப்பதும் உண்மை தான். ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கு தேவை நிர்வாக சீர்திருத்தங்கள் தானே, மின்சாரக் கட்டண உயர்வு அல்ல. நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது ஓட்டை வாளியில் தண்ணீர் பிடிப்பதற்கு சமமான செயலாகவே இருக்கும். அதனால் எந்த பயனும் ஏற்படாது.

தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2014-15 ஆம் ஆண்டில் ரூ.12,750 கோடி இழப்பை சந்தித்தது. 2014-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மின்சார வாரியத்தின் இழப்பு 2015-16 ஆம் ஆண்டில் ரூ.5750 கோடியாகவும், 2016-17 ஆம் ஆண்டில் ரூ.4350 கோடியாகவும் குறைந்தது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து மின்வாரியத்தின் இழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அதற்குக் காரணம் மின்சார வாரியத்தில் நடைபெற்ற முறைகேடுகளும், அதிக தொகைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதும் தான் என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

எனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொந்த மின்னுற்பத்தியை அதிகரிப்பது, தனியாரிடமிருந்து  மின்சாரம் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, மத்திய நிறுவனங்களிடமிருந்து அதிக அளவில்  மின்சாரத்தை குறைந்த கட்டணத்தில் வாங்குவது தான் இன்றைய சூழலில் மின்வாரியத்தை லாபத்தில் இயக்கச் செய்வதற்கான சரியான நடவடிக்கைகளாக இருக்கும். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடனுக்காக ஆண்டுக்காக ரூ.16,000 கோடி வட்டி கட்டப்படுகிறது. அதை தவிர்த்தாலே மின்வாரியத்தின்  இழப்பை கணிசமாக குறைத்து விட முடியும். இவற்றையெல்லாம் செய்யாமல் மின்சாரக் கட்டணத்தை   உயர்த்தினால் மக்களின் துயரங்கள் தான் அதிகரிக்குமே தவிர, மின்வாரியத்தின் துயரங்கள் தீராது. 

மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதில் திமுக அரசுக்கும் உடன்பாடு இருக்காது என்றே கருதுகிறேன். அதனால், தான் ஆண்டுக்கு ரூ.6,000 வரை பயன் கிடைக்கும் வகையில், மாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்; மின்சாரக் கட்டணத்துடன் ரூ.50 வரை நிலைக் கட்டணம் வசூலிக்கும் முறை கைவிடப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதனால், மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தமிழக அரசுக்கு இருந்தால்   அதை கைவிட வேண்டும். இது குறித்த நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Tuesday, November 16, 2021

சூர்யாவை பா.மா.க-வினர் விமர்சிக்க கூடாது - அவர் சாதி சார்பற்றவர் | அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கடிதம் | Southern Cinima Industry Writing Letter to Anbumani Ramadass about Jaibhim Movie and Actor Surya Issues | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

நடிகர்
சூர்யா ஜாதி, மத சார்பற்றவர், அவரை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாமக எம்பி அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கடிதம் எழுதி உள்ளது. ஜெய் பீம் படம் தொடர்பான சர்ச்சைகள் காரணமாக நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். படத்தில் குறிப்பிட்ட ஜாதியை குறிப்பது போல காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி பாமகவினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறையில் நடிகர் சூர்யாவின் வேல் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம் செய்தனர். அதோடு மயிலாடுதுறைக்கு சூர்யா வரும்போது அவரை தாக்கும் நபர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பாமக மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

வழக்கு

இன்னொரு பக்கம் ஜெய் பீம் பட விவகாரத்தில் வன்னியர்களை அவமதிக்கும் காட்சிகளை நீக்கி 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வன்னியர் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் மன்னிப்பு கேட்காவிட்டால், ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகாவுக்கு வன்னியர் சங்கம் சார்ப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

ஆதரவு

இந்த நிலையில் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை களமிறங்கி உள்ளது. அதன்படி ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் இருக்கும் ஒரு காட்சியை அகற்றும்படி நீங்கள் கோரிக்கை வைத்து இருந்தீர்கள். தங்கள் கட்சியின் முத்திரை அது என்று கூறி நீக்கும்படி கோரிக்கை வைத்தீர்கள். இதன் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஜெய் பீம்

உங்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் உறுப்பினராக இருக்கும் சூர்யா அந்த காட்சியை நீக்கினார். ஆனால் இந்த காட்சி வைக்கப்பட்டதற்கும், அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டதற்கு எந்த விதத்திலும் நடிகர் சூர்யாவிற்கு தொடர்பு இல்லை. அதேபோல் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 

உணர்வு

ஆனால் பாமக கட்சியினர் தொடர்ந்த இதை முன்னிட்டு சூர்யாவை விமர்சனம் செய்து வருகிறார்கள். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சூர்யா அரசியல், ஜாதி, இனம், மதம் போன்ற எந்த சார்பும் இன்று செயல்படுபவர். எந்த சார்பும் இன்றி ஏழை மக்களுக்கு உதவ கூடியவர். 

மாணவர்கள்

பல விளிம்புநிலை மாணவர்களுக்கு கலங்கரை விளக்கமாக சூர்யா செயல்பட்டு வருகிறார். அவர்களின் வாழ்க்கையில் கல்வி ஒளி ஏற்றி வருகிறார். சமூக பணியாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்று மிகவும் வருத்தத்துடன் கேட்டுக்கொள்கிறோம், என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.