வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்: 'தமிழக அரசு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்' - டாக்டர். அன்புமணி ராமதாஸ்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 20, 2021

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்: 'தமிழக அரசு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்' - டாக்டர். அன்புமணி ராமதாஸ்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கம், நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்.


இவர் அதே பகுதியில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

தற்போது அவரது மனைவி கர்ப்பமுற்ற நிலையில் அவருக்கு கடந்த 13-ஆம் தேதி பிரசவம் நாள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேதியில் அவருக்கு பிரசவ வலி வராத நிலையில், கடந்த 18-ஆம் தேதி மாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து லோகநாதன் யூ-டியூபை பார்த்து அதன்படி பிரசவம் பார்த்தபோது இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரது மனைவி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். எனவே, அவரை அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர். லோகநாதன்.
அங்கு அவரது மனைவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். தற்போது இங்கு லோகநாதனின் மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் குழந்தை இறப்பு குறித்து லோகநாதனிடம் நெமிலி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ், இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்


இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், 'அரக்கோணம் மாவட்டம் பனப்பாக்கத்தில் இளம்பெண்ணுக்கு அவரது கணவர் யூ-ட்யூப் பார்த்து பிரசவம் பார்த்ததாகவும், அதில் குழந்தை இறந்ததுடன், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் வெளியான செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.

மகப்பேறு என்பது மிகவும் சிக்கலான, சிறிய தவறு நடந்தாலும் தாய்க்கும், சேய்க்கும் உயிரிழப்பை ஏற்படுத்தி விடக் கூடிய விஷயமாகும். யூ-ட்யூபை பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல. மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது.

நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. 108 தொலைபேசியில் அழைத்தால் அவசர ஊர்தியில் வீட்டுக்கே வந்து பெண்ணை அழைத்துச் சென்று மகப்பேறு பார்த்து மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து விடும் வசதியை நான் மத்திய அமைச்சராக இருந்த போதே ஏற்படுத்தியுள்ளேன்.

மருத்துவமனையில் மகப்பேறு பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கு வேறு பல உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவமனையில் மருத்துவர்களால் செய்யப்படும் மகப்பேறு தான் பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும்.

யூ-ட்யூப் மூலம் மகப்பேறு பார்ப்பது ஒரு சாகசம் என்பது போன்ற விஷமப் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் செய்யப்படுகிறது. அவற்றை மக்கள் நம்பக் கூடாது. இது தொடர்பாக தமிழ்நாடு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment