வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Tips
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Tips. Show all posts
Showing posts with label Tips. Show all posts

Wednesday, May 15, 2019

உங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா?


உங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா? உடனடியாக கழிவறை அல்லது தரை என்று கூறுவீர்கள். ஆனால், இந்த விடை சரியல்ல. பாத்திரம் துலக்கும் பஞ்சு அல்லது துணிதான் உங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான பொருளாகும் என அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

பாத்திரங்களை சுத்தப்படுத்தும் துணிகள் பொதுவாக பல பாக்டீரியாக்களின் தாயகமாகி விடுகின்றன. இந்த துணிகள் வெதுவெதுப்பாகவும், ஈரப்பதமாகவும் இருப்பதால், கிருமிகள் வளர்வதற்கு சிறந்த சூழ்நிலை அவற்றில் உள்ளதே இதற்கு காரணமாகும். கழிவறை இருக்கையில் ஒரு சதுர அங்குல (6.5 சதுர சென்டிமீட்டர்) இடத்தில் 50 பாக்டீரியாக்களே இருக்கின்றன.
ஆனால், சமையலறை பஞ்சில் ஒரு சதுர அங்குல இடத்தில் 10 மில்லியன் மற்றும் பாத்திரம் கழுவும் துணியில் ஒரு மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன.


வேறு சொற்களில் கூறினால், உங்களுடைய சமையலறை பஞ்சு உங்கள் கழிவறையின் இருக்கையைவிட இரண்டு லட்சம் முறை அதிக அழுக்கானதாக இருக்கும். எனவே, உங்களுடைய பாத்திரம் கழுவும் துணிகள் அல்லது பஞ்சை நன்றாக உலரும் வகையில் வைத்து கொள்வது மிகவும் சிறந்தது. சமையலறை பஞ்சுகளை சுத்தம் செய்வது பற்றி “குட் ஹெஸ்கீப்பிங்” சஞ்சிகையும் சில குறிப்புக்களை வழங்கியுள்ளது.
இந்த பஞ்சையும், துணியையும் நுண்ணலை அடுப்பு அல்லது பாத்திரம் கழுவும் இயந்திரத்திலும் ஒட்டி வைத்து கிருமிகளை அழித்துவிடலாம்.


மேலும், இறைச்சிக்கு ஒன்றும், பிற பயன்பாட்டுக்கு வேறொன்றும் என தனித்தனியாக வைத்திருப்பதும் நன்றாக இருக்கும்.
மரத்தால் செய்யப்பட்ட வெட்டும் பலகைகள் சுத்தம் செய்வதற்கு எளிதானவை. மிக நன்றாக சுத்தம் செய்வதற்கு பாத்திரம் சுத்தம் செய்யும் வினிகரை அசிட்டிக் அமிலமாக பயன்படுத்துவது கிருமி அசுத்தத்தை போக்குவதற்கு சிறந்த வழியாகும்.

Monday, November 05, 2018

டிப்ஸ்


முப்பது வினாடிகள் இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக் கொண்டால், தொடர் விக்கல் நின்றுவிடும்.


* அரை ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டு உமிழ்நீர் ஊறும்படி மெதுவாகச் சுவையுங்கள். விக்கல் பறந்து போகும்.

* கொட்டாவி விடுவது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்தான். நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்.  கொட்டாவி போய் விடும்.
(தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!

* குளிக்கும் தண்ணீரில் ஒரு தக்காளிப்பழத்தை சாறெடுத்துக் கலந்து, பிறகு குளிக்கவும். உடல் துர்நாற்றம் நீங்கி, நாள் முழுக்க  புத்துணர்வுடன் திகழ்வீர்கள்.

* எலுமிச்சைச் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வெந்நீரில் சிறிது உப்புப்போட்டு வாயைக் கொப்பளித்து  வந்தாலும், வாய் துர்நாற்றம் நீங்கும்.


* கற்றாழைச் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது. அடர்த்தியாக நன்றாக வளரும். அத்துடன் தலையும்  குளிர்ச்சி ஆகும்.

* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால், நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts