வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Vandavasi ramapuram news
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Vandavasi ramapuram news. Show all posts
Showing posts with label Vandavasi ramapuram news. Show all posts

Friday, October 04, 2019

இராமாபுரம் இந்தியன் வங்கி அருகே பட்டப்பகலில் கொள்ளை | Robbery near Indian Bank Ramapuram

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி இராமாபுரம். இந்த வங்கிகிளையில் இதே வட்டத்தினை சார்ந்த மாத்தூர் கிராமத்தைச் சார்ந்த ஆறுமுகம் என்பவர் பணம் எடுத்து வெளியே வந்துள்ளார்.



பணம் எடுத்து வெளியே வந்த ஆறுமுகம் வங்கியில் இருந்து எடுத்துவந்த ரூ.1,50,000/-னை தனது இருசக்கர வாகனத்தின் முன்புறம் பெட்ரோல் டேங்க் மேற்பகுதியில் உள்ள இருப்பில் வைத்துவிட்டு அவருக்கு தெரிந்த நபரிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த நிலையில் இருசக்கர வாகனத்தின் முன்புறம் பெட்ரோல் டேங்க் மேற்பகுதியில் வைத்திருந்த பணத்தை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச்  சென்றதாக அறியப்படுகிறது.
 

மேற்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த மேல்மருவத்தூர் காவல் உதவி ஆய்வாளர்  திரு.ரவி என்பவர் சம்மந்தப்பட்ட வங்கியில் CCTV காட்சிகளை ஆராய்ந்து பார்த்தார். மேலும் சம்பவ இடத்திற்கு காவல் ஆய்வாளர்(பொறுப்பு) அவர்களும் நேரில் வந்து பணம் பறிகொடுத்த நபரிடம் விசாரணை மேற்கொண்டார்.


பட்டப்பகலில் வங்கியின் முன்னரே இப்படிப்பட்ட சம்பவம் நேரிட்டது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த இடத்தில் கொள்ளை சம்பவம் நடந்த நேரத்தில் பணம் பறிகொடுத்த நபர் யாரிடம் பேசிக் கொண்டிருந்தார் என்பதையும், எதற்காக பணத்தினை அவ்வளவு அலட்சியமாக வைத்தார் என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் காவல்துறையினரின் முழு விசாரணைக்கு பிறகே குற்றவாளியை பிடிப்பதில் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, March 30, 2019

இராமாபுரம் சாலையில் காவு வாங்கும் வேகத்தடை (Speed Break) - விவரம் உள்ளே | Ramapuram Speed Break




காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி இராமாபுரம். இந்த பகுதியானது மேல்மருவத்தூர் to வந்தவாசி சாலையில் உள்ளது. இப்பகுதியில் 5 வேகத்தடைகள் உள்ளன. அதிக வாகனங்கள் செல்லும் இந்த முக்கிய சாலையில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.


காரணம் என்னவெனில், வேகத்தடையின் மேல் வெள்ளைபூச்சு பூசப்படாமலும்,  பிரதிபளிப்பான்கள் (Reflection) இல்லை. நெடுஞ்சாலை துறையினர் மூலம் தண்ணியான சுண்ணாம்பு நீர் போல உள்ள திரவியத்தை ஸ்பாஞ்ச் மற்றும் பெயின்ட் பிரஷ்களை கொண்டு பூசிவிட்டு கணக்கு காண்பிப்பதற்கு மட்டும் புகைப்படம் எடுத்துச்செல்லப்படும். பின்னர் மறுநாள் காலை பார்த்தால் அந்த திரவியம்கூட மிஞ்சாது. இரவில் பெய்யும் பனியிலேயே கரைந்து ஓடிவிடும். மேற்கண்ட புகைப்படத்தில் பார்த்தாலே தெரியும் இந்த வேகத்தடையின் நிலை.



சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களின் நிழல் காரணமாக அந்த தற்காலிக வெள்ளைபூச்சுகள் சுத்தமாக தெரியாத காரணத்தினால் வாகனங்கள் அந்த வேகத்தடைகள் மீது (Speed Break) வேகமாக ஏறி இறங்கி இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தவறி விழும் நிலை உள்ளது. நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் உட்புறமாக இடித்துக் கொண்டு காயமடைகின்றனர்.  ஆம்புலன்ஸ் செல்லும் போதும் உள்ளிருக்கும் நோயாளிகளும் உடன் சென்றவர்களும் கீழும் மேலும் விழுந்துகொண்டு செல்கின்றனர்.



எனவே, வாகன ஓட்டிகளின் நலன்கருதி இங்கு நிலையான வெள்ளை பூச்சு மற்றும் பிரதிபளிப்பான் (Refection) அமைக்கப்படுமா....? இந்த சாலையினை போட்ட கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா...? இதனை மேற்பார்வையிட்டு கையெழுத்திட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதே இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் ஆதங்கம்.