வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 27, 2018

என்ன நடக்கிறது சென்னையில்.. மீண்டும் மூட்டைகளில் சிக்கிய கிழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்!



சென்னை மாதவரத்தில் மீண்டும் 25 மூட்டைகளில் பழைய ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாதவரம் ரவுண்டானாவில் இருந்து மஞ்சம்பாக்கம் செல்லும் வழியில் 20 மூட்டைகள் கத்தரிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.


மாதவரம் ரெட்டேரி அருகே ஆட்டு மந்தை உள்ளது. இங்கு நேற்று கேட்பாரற்று பழைய 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் கத்தரிக்கப்பட்ட நிலையில் மூட்டைகளில் கிடந்தன. 
 
அதாவது மறுசுழற்சிக்காக கிழிக்கப்பட்ட நோட்டுகள் என கூறப்படுகிறது. மர்ம நபர்கள் மாதவரம் புழல் கொரட்டுர் போன்ற ஏரி கரைகளில் 35 மூட்டை பழைய கிழிந்த நோட்டுகளை திட்டமிட்டு வீசியுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
 (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

 உடனே அங்கு விரைந்து சென்ற மாதவரம் காவல்துறையினர் கேட்பாரற்று கிடந்த மூட்டைகளை பிரித்துப் பார்த்தனர். அதில் கத்தரிக்கப்பட்ட நிலையில் பழைய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கத்தரிக்கப்பட்ட பண மூட்டைகளை கைப்பற்றிய மாதவரம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

இந்தநிலையில், மாதவரத்தில் இன்று மீண்டும் 25 மூட்டைகளில் பழைய ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக, பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர், பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தநிலையில், பழைய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்டுள்ளது மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



பெண்ணின் கண்ணீரைத் துடைத்து.. தலையைத் தொட்டு ஆறுதல் கூறிய ஆளுநர்!



திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒரு பெண்ணின் கண்ணீரைத் துடைத்து தலையைத் தொட்டு ஆறுதல் கூறினார்.

திருவாரூர் மாவட்டத்தில் சமீபத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஆளுநர் புரோஹித் ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் காமராஜ், மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

புயல் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஆளுநரிடம் தங்களது இழப்பைக் கூறி அழுது புலம்பினர். அப்போது ஒரு பெண் அழுதபடி ஆளுநரிடம் பேசினார். உடனே அவரது கண்ணீரை தனது இரு கரங்களால் துடைத்து விட்ட ஆளுநர் புரோஹித் அப்படியே தலையையும் தொட்டு ஆறுதல் கூறினார். தொடர்ந்து வேறு சில கிராமங்களுக்கும் சென்று பார்வையிட்டு மக்களைச் சந்தித்தார் ஆளுநர் புரோஹித்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


வீடு பிடித்து.. 30 வயது பெண்ணை வைத்து விபச்சாரம்.. ஏட்டு சஸ்பெண்ட்



30 வயசு பெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்த ஏட்டையாவை போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர். என்எஸ்கே நகரிலிருந்து போலீஸ் கன்ட்ரோல் ரூமிற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய ஒரு பெண், என் வீட்டுக்குள்ள ஒரு மர்ம ஆள் நுழைந்து பணத்தையெல்லாம் திருடிட்டார்.

ஆனால் அவரை நான் தப்பிச்சி போகாம பிடிச்சி வெச்சிருக்கேன்" என்று சொன்னார். இதனால், போலீசார் புகார் சொன்ன பெண்ணின் வீட்டுக்கு விரைந்தனர். அங்கே பெண் சொன்னதுபோலவே சம்பந்தப்பட்ட நபரையும் போலீசார் பிடித்து கைது செய்து விசாரித்தனர்.


பணம் பறித்த ஏட்டு  
அப்போது அந்த நபர் சொன்னதாவது: "இந்த பெண் விபச்சாரம் செய்பவர், இவர்தான் என்னை விபச்சாரத்துக்கு அழைத்தார். ஆனால் அதற்கான பணத்தை ஒரு ஏட்டு பறித்து கொஸ்டேஷனுக்கு ண்டு போய்விட்டார்" என்றார். ஏட்டு என்றதும் போலீசாருக்கு தூக்கி வாரிப்போட்டது. அதனால் அந்த பெண்ணை அழைத்து சென்று விசாரித்தனர். அவரது செல்போனையும் வாங்கி ஆய்வு செய்தனர்.

பெண்ணுடன் பழக்கம் 
அதில் கோயம்பேடு காவல் போலீஸ் ஸ்டேஷனில் வேலைபார்க்கும் ஏட்டையா பார்த்திபனிடம் அந்த பெண் அடிக்கடி பேசியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். அப்போது அந்த பெண் சொன்ன விஷயங்களை கேட்க கேட்க காவல்துறையே அதிர்ந்து விட்டது. ஏட்டையா பார்த்திபனுக்கு விபச்சாரம் செய்து வரும் இந்த பெண் ரொம்ப நாள் பழக்கமாம்.


தகவல் அளிப்பார் 
அதனால் ரெண்டு பேரும் சேர்ந்துதான் விபச்சார வியாபாரத்தை சூடு பறக்க சென்னையில் பரப்பி உள்ளார்கள். இதற்கென ஏட்டையா ஒரு வீட்டையே வாடகைக்கு எடுத்து அந்த பெண்ணை தங்க வைத்திருக்கிறார். வெளி இடங்களுக்கு சென்று கஸ்டமர்களை அந்த பெண் வீட்டுக்கு அழைத்து வருவாராம். அப்படி வரும்போது ஏட்டையாவுக்கு தகவலும் சொல்லி விடுவாராம்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
பணத்தை கறந்துவிடுவார் 
ஏட்டையாவும் ரெய்டுக்கு போவது போல பெண்ணின் வீட்டுக்கு போவாராம். அங்கிருக்கும் கஸ்டமர்களிடம், கைது செய்யாமல் இருக்க, பணத்தையும் அந்நபரிடம் கறந்து விடுவாராம். இப்படியே பிழைப்பு ஓடியிருக்கிறது. அதில், கஸ்டமர்கள் யாருமே இல்லையென்றால் ஏட்டையாவே அந்த பெண்ணுடன் ஜாலியாக இருப்பாராம்.


திருடன் என சித்தரிப்பு 
நேற்றிரவும் இப்படித்தான் ஒருவர் அந்த வீட்டுக்கு வந்திருக்கிறார். வழக்கம்போல் ஏட்டையா பணத்தை கஸ்டமரிடம் வாங்கி சென்றுவிட்டார். அதற்கு பிறகும் அந்த பெண் கஸ்டமரிடம் பணம் கேட்கபோய் அது தகராறாக போய்விட்டது. இதனால் அந்த பெண் வந்த கஸ்டமரை "திருடன்" போல போலீசிடம் காட்டி கொடுக்க முயன்றுள்ளார். பிறகுதான் ஏட்டையா மாட்டிக் கொண்டது. 

ஏட்டு சஸ்பெண்ட்  
இந்த விவரங்களை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை உயரதிகாரிகள், ஏட்டு பார்த்திபனை சஸ்பெண்ட் செய்தார்கள். வழிப்பறி, கொலை மிரட்டல் மற்றும் விபச்சார தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் இவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பிணமாக ஆற்றில் மிதந்த ஸ்ரீஜா.. வயிற்றில் 5 மாத சிசு.. பிபின் தந்த ஷாக் வாக்குமூலம்!



பிணமாக ஆற்றில் மிதந்த ஸ்ரீஜா, வயிற்றில் 5 மாத சிசு
நாகர்கோவில்: "5 மாசம் கர்ப்பம்.. கல்யாணம் பண்ணிக்க சொல்லி ரொம்ப தொல்லை.. வேற வழியில்லை.. கொலை செய்ய வேண்டியதா போச்சு" என்று நர்சை கொன்ற கொலையாளி வாக்குமூலம் சொல்லி உள்ளார். குமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா. 23 வயதான இவர், நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்த்து வந்தார்.

கடந்த 19-ம் தேதி வேலைக்கு ஸ்ரீஜா அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் எல்லா இடங்களிலும் அவரை தேடி வந்த நிலையில், குழித்துறை ஆற்றில் பிணமாக கிடந்தார் ஸ்ரீஜா. வேலைக்கு போன பெண் எப்படி ஆற்றில் கிடப்பார், அவரது சாவில் மர்மம் உள்ளது என்று ஸ்ரீஜாவின் சொந்தக்காரர்கள் கூறி சாலை மறியலிலும் ஈடுபட்டார்கள். இதன்பின்னர் போலீசார் இதில் இறங்கினார்கள். ஸ்ரீஜாவின் உடல் போஸ்ட்-மார்டம் செய்யப்பட்டது. 
 
அப்போதுதான் அவர் 5 மாத கர்ப்பம் என்று தெரியவந்தது. கல்யாணமாகாமல் ஸ்ரீஜா கர்ப்பமானதால் இதற்கு யார் காரணம் என கண்டறிய ஆரம்பித்தார்கள். அவரது செல்போன் நம்பர்களை வைத்து ஆராயும்போது, எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்த பிபின் என்ற வேன் டிரைவர் பெயர் அடிபட்டது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
பிபின் வாக்குமூலம் 
 இவர்தான் ஸ்ரீஜாவை லவ் பண்ணி வந்திருக்கிறார். பிறகு ஸ்ரீஜா மரணத்துக்கு பிறகு ஆள் எஸ்கேப்பாகி இருந்தார். அதனால் பிபினை போலீசார் தேட ஆரம்பித்தார்கள். பிறகு ஒருவழியாக மாட்டிக் கொண்டார் பிபின். அப்போது அவர் போலீசில் சொன்னதாவது:

கற்பழித்து விட்டேன் 
எனக்கு நர்ஸ் ஸ்ரீஜாவை ரொம்ப பிடித்துவிட்டது. பழக்கம் லவ்வாக மாறியது. கல்யாணம் பண்ணிக்கறேன் என்று சொல்லி சொல்லியே நெருங்கினேன். ஆனால் என்னை ஒரு அளவுக்கு மேல் ஸ்ரீஜா நெருங்க விடவில்லை. அதனால், ஒருநாள் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துவிட்டேன். பிறகு ஒருநாள் என்னிடம் வந்து, 5 மாத கர்ப்பம் என்று சொன்னார்.



கலைக்க முடியல 
கூடவே கல்யாணத்துக்கு தொல்லை பண்ண ஆரம்பிச்சிட்டார். இதுக்கு நான் ஒத்துக்கவே இல்லை. ஆஸ்பத்திரியில போய் கலைக்கலான்னு நெனச்சோம். ஆனால் 5 மாச கருவை கலைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. தினமும் இதை வச்சி எங்களுக்குள்ள சண்டை வந்துட்டே இருந்தது. என்னை போலீசில் புடிச்சி தரப் போவதாகவும் சொன்னார். அதனால இதுக்கு ஒரு முடிவு கட்டலாம்னு யோசிச்சேன்.

தாலி வாங்கிட்டு வா 
20 தேதி இரவு ஸ்ரீஜாவை நேரில் பார்த்து கல்யாணம் செய்துக்கலாம் வா என்று நள்ளிரவு தாமிரபரணி ஆற்று பாலத்துக்கு கூட்டிட்டு போனேன். அப்போது தாலி வாங்க ஸ்ரீஜா, காலில் போட்டிருந்த கொலுசு, பிரைஸ்லெட் எல்லாத்தையும் கழட்டி கொடுத்தார்.


காஸ்ட்லி செல்போன் 
ஆனால் அவரது செல்போன் மட்டும் என் கைக்கு வரவில்லை. அதனால, ஒரு போன் பண்ணிக்கறேன்னு சொல்லி அவரது காஸ்ட்லி செல்போனையும் வாங்கி கொண்டேன். பிறுகு பேசிக் கொண்டே இருந்தபோது, திடீரென ஸ்ரீஜாவை தூக்கி ஆற்றில் போட்டேன். தண்ணியில தத்தளித்தே ஸ்ரீஜா செத்து போய்ட்டார்" இவ்வாறு பிபின் வாக்குமூலத்தில் சொன்னார்.

பல மாணவிகள் 
இதையடுத்து விசாரணை மேலும் நடந்து வருகிறது. அப்போதுதான், தன்னுடைய வேனில் ஏறி வரும் பல ஸ்கூல், காலேஜ் மாணவிகளை இப்படியே ஆசை வார்த்தை சொல்லி சொல்லி அவர்களையும் பிபின் நாசம் செய்ததும் தெரியவந்துள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


செருப்பை கண்டுபிடித்து தாருங்கள் என்று சென்னையில் போலீஸில் புகார்! HL Police Complaint for Foot wear

செருப்பை கண்டுபிடித்து தாருங்கள் என்று சென்னையில் போலீஸில் புகார்!



தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் என்ற நபர்
நேற்று மருத்துவமனையில் தனது உடல் பரிசோதனை செய்ய சென்றுள்ளார். பரிசோதனை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது ராஜேஷ்  அனிந்து வந்த செருப்பு துலைந்தது தெரியவந்துள்ளது.




இந்நிலையில் ராஜேஷ் தண்டையார் பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்து துலைந்த தனது செருப்பை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார் மேலும் அச்செருப்பை ராஜேஷ் சமீபத்தில் தான் 800ரூபாய் கொடுத்து வாங்கிவுள்ளாராம்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


அஜித் குமார் (நடிகர்) பற்றி என்ன தெரியும் உங்களுக்கு.? - HL Thala Ajith