வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 06, 2018

ஹெல்மெட் அணியாமல் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர்... நோட்டீஸ் அனுப்பிய மதுரை ஹைகோர்ட்!



ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உயர்நீதிமன்றக்கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

 
இருசக்கர வாகனத்தில் செல்வோர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருக்கும் நபரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சாலை விபத்து உயிரிழப்புகளை தவிர்க்க மாநில அரசு சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இந்தநிலையில், புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றார். இதுகுறித்து டிராபிக் ராமசாமி மதுரை ஹைகோர்ட் பென்சில் வழக்கு தொடுத்தார். அவர் தொடர்ந்த வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் டிசம்பர் 17-க்குள் பதில்தர உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் சர்ச்சையில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. ஜெ. நினைவு நாளில் நடு ரோட்டில் பின்னிப் பிணைந்த அதிமுக ஜோடி!



"ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து..." என்னா ஆட்டம்??? இறந்த நாள், பிறந்த நாள் வித்தியாசம் கூடவா சில அதிமுகவினருக்கு தெரியாமல் போய்விட்டது? நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. 

 
இதற்காக ஏராளமான அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்படித்தான் ஒரு கிராமத்திலும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இணையத்தில் ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது. எந்த ஊர் என தெரியவில்லை. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

எம்ஜிஆர்-ஜெயலலிதா 
ஆனால் அங்கு அதிமுக கொடிகள் ஆங்காங்கே பறக்கிறது. நடுத்தெருவில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வெள்ளை சேலை அணிந்து டான்ஸ் ஆடுகிறார். அவரது சேலையில் அதிமுக பேட்ஜ் குத்தப்பட்டுள்ளது. "ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து" என்ற எம்ஜிஆர்-ஜெயலலிதா ஜோடி பாடல் ஒலிக்க, இந்த பெண் டான்ஸ் ஆட ஆரம்பிக்கிறார்.


சிரித்தபடி டான்ஸ் 
தனியாக ஆடுகிறார் என்று பார்த்தால், அடுத்த சில வினாடிகளில் ஜோடி ஒருவர் இணைகிறார். அவரும் அதிமுக கரை வேட்டி கட்டியுள்ளார். அவருக்கு எப்படியும் வயது 45-க்கு மேலதான் இருக்கும். ரெண்டு பேரும் தெருவில் டூயட் ஆட, இதை அங்கிருந்தோர் சிரித்து கொண்டே வேடிக்கை பார்க்கிறார்கள். ஆடுபவர்களும் ஏதோ கல்யாணம், கச்சேரியில் ஆடுவதை போல பல்லை இளித்து கொண்டு சிரித்தமேனிக்குதான் பின்னிப் பிணைந்து ஆடினார்கள்.

கை தட்டுகிறார்கள் 
ஒரு நினைவு நாளை எப்படி அனுசரிக்க வேண்டும் என்று கூட இவர்களுக்கு தெரியாதா? இவர்களுக்குதான் தெரியவில்லை என்றால் சுற்றி நின்று ரசித்து பார்ப்பவர்களுக்கும் தெரியாதது அதிர்ச்சியாக உளள்து. சிலர் கைதட்டுகிறார்கள், சிலர் விசிலடிக்கிறார்கள்.


இதுவா அஞ்சலி?  
அதிமுகவில் இல்லாதவர்கள் கூட ஜெயலலிதாவுக்கான மரியாதையை ஒழுங்காக செலுத்தினார்கள். ஆனால் இப்படி டூயட் பாட்டை போட்டு கூத்தடித்து அஞ்சலி செலுத்தியது இணையத்தில் வீடியோவாக பரவி அனைவருக்குமே ஷாக்கை கொடுத்துள்ளது.

கரை வேட்டி - சேலை 
மறைந்த முதல்வர் ஜெயலிதாவுக்கு இதைவிட ஒரு களங்கத்தை யாராலும் ஏற்படுத்த முடியாது. இது எந்த ஊரோ, எந்த கிராமமாக இருந்தாலும் சரி, அத்தொகுதி எம்எல்ஏவோ அல்லது அதிமுக நிர்வாகிகளோ இதுபோன்ற செயலை கண்டிப்பது உடனடி அவசியமாகும். நினைவு தினத்தில் முறையான அஞ்சலியை செலுத்த தெரியாத அதிமுகவினருக்கு கரை வேட்டி, சேலை ரொம்ப அவசியம்தானா?

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ



17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் லாக் நகரை சேர்ந்தவர் சவிதா என்ற வசந்தி. இவருக்கு 28 வயதாகிறது.


கல்யாணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். முதல் புருஷனுடன் சண்டை போட்டுவிட்டு பிரிந்து வந்துவிட்டார். அதனால் 2-வது புருஷனுடன் வாழ்கிறார். அவர் பெங்களூருவில் வேலை பார்க்கிறார். அதனால் சென்னையில் 3 குழந்தைகளை வைத்து கொண்டு வசந்தி தனியாக வாழ்ந்து வந்தார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

17 வயது சிறுவன் 
ஒருநாள் சொந்தக்காரர் ஒருவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை பார்க்க சென்றார் வசந்தி. அப்போதுதான் 17 வயசு பையனை முதன்முதலாக பார்த்தார். அந்த நிமிடத்திலேயே 3 குழந்தைகளை பெற்ற வசந்திக்கு சிறுவன் மேல் லவ் வந்துவிட்டது.


புருஷனை கைவிட்டார்  
இதையடுத்து அவனிடம் நெருங்கி தவறான முறையில் பேசியும் நடந்து கொள்ள ஆரம்பித்தார். சிறுவன் கிடைத்த ஜோரில் 2-வது புருஷனையும் கைவிட்டார் வசந்தி. 3 குழந்தைகளையும் அவரிடமே ஒப்படைத்துவிட்டார்.

காதில் வாங்கவில்லை 
பையனின் நடவடிக்கைகளை கவனித்த பெற்றோர் உஷாரானார்கள். கண்டித்து அறிவுரை சொன்னார்கள். ஆனாலும் இருவருமே அதை காதில் வாங்கி கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் சிறுவனை வீட்டை விட்டுவெளியேற செய்து தன்னுடன் கூட்டிகொண்டு ஊர் ஊராக சுற்றினார் வசந்தி. அப்போதுதான் பெற்றோர் மகனை காணோம் என்றும் வசந்தி மீது நடவடிக்கை எடுக்ககோரியும் கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.


போக்சோ பாய்ந்தது  
இதையடுத்து போலீசாரும் 2 பேரையும் ஊர் ஊராக தேடி வந்து ஒருவழியாக கண்டு பிடித்துவிட்டனர். வெளியூரில் ஜாலியாக சுற்றி கொண்டிருந்தவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸ், வசந்தியை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

புழல் சிறை 
சென்னையில் பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன் தேனாம்பேட்டையில் பெற்ற மகளுக்கு தொல்லை கொடுத்த தாய்மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. 2 கணவன்கள், 3 குழந்தைகள் இருந்தும் 17 வயது சிறுவனை தனது இச்சைக்கு பயன்படுத்தி கொண்ட வசந்தி இப்போது புழல் ஜெயிலில் உள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


வினாடிக்கு 16 ஜி.பி. டேட்டா தரும் செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தம்



இன்டர்நெட் பிராட்பேண்ட் சேவைக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் ஜிசாட் -11 என்ற செயற்கைகோள் வெற்றிகரமாக இன்று விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்திப்பதன் காரணமாக அதன் சேவையை மேம்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை நிறைவு செய்வதற்காக மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் விநாடிக்கு 100 ஜி.பி. டேட்டாவை பிராசஸ் செய்வது என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் இலக்காக உள்ளது.


இதனை எட்டிப்பிடிக்கும் முயற்சியின் முதல்படியாக தற்போது ஜிசாட் 11 என்ற செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது. இந்த செயற்கைகோள் வினாடிக்கு 16 ஜி.பி. டேட்டாவை பிராசஸ் செய்வதற்கு தேவையான வேலைகளை செய்யும்.
இந்த செயற்கைகோளை தென் அமெரிக்காவில் உள்ள ஃப்ரென்ச் கயானா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி அதிகாலை 2:07 -க்கு விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தியுள்ளனர். செலுத்தப்பட்ட 33-வது நிமிடத்தில் செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது-
இஸ்ரோ அனுப்பியிருக்கும் செயற்கைகோள்களில் இதுதான் அதிக எடை கொண்டது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


சுமார் 5,854 எடையை இந்த செயற்கைகோள் கொண்டுள்ளது. அதேநேரம் இஸ்ரோ உருவாக்கியுள்ள செயற்கைகோள்களில் இதுதான் அதிக சக்தி கொண்டது. இந்தியாவின் மிகப்பெரும் சொத்தாக இது கருதப்படும். நாட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் இந்த செயற்கைகோள் கண்காணித்து விடும். விநாடிக்கு 16 ஜி.பி. டேட்டாவை இந்த செயற்கைகோள் நாட்டிற்கு அளிக்கும்.
வினாடிக்கு 100 ஜிபி டேட்டாவை அளிப்பதுதான் டிஜிட்டல் இந்தியாவின் இலக்கு. அதனை எட்டுவதற்காக ஏற்கனவே 2 செயற்கைகோள்களை அனுப்பி விட்டோம். இது 3-வது செயற்கைகோள்.
 

நாட்டில் உள்ள அனைவருக்கும் அதிவேக டேட்டாவை இந்த செயற்கைகோள் அளிக்கும். பாரத்நெட் திட்டத்தின் கீழ், அனைத்து கிராம பஞ்சாயத்துக்களை இணைப்பதற்கு இந்த செயற்கைகோள் உதவும். இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.நாட்டில் உள்ள அனைவருக்கும் அதிவேக டேட்டாவை இந்த செயற்கைகோள் அளிக்கும். பாரத்நெட் திட்டத்தின் கீழ், அனைத்து கிராம பஞ்சாயத்துக்களை இணைப்பதற்கு இந்த செயற்கைகோள் உதவும். இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பாபர் மசூதி இடிப்பு தினம் நாடு முழுவதும் பாதுகாப்பு



1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பு தினமான நாளை நாடெங்கும் எதுவும் அசம்பாவிதம் நிகழாமலிருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மடிகேரியில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் மடிகேயில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி யாரும் கூட்டம் கூடவோ பேரணி நடத்தவோ, கூட்டங்கள் நடத்தவோ கூடாது என கூறப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என போலீசார் கூறினர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் இன்று (டிச. 6) காலை காலமானார்



சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல்ஜெயராமன், 60, சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.


பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர் நெல் ஜெயராமன். 160 - க்கும் மேற்பட்ட அரியவகை நெல் விதைகளை சேகரித்தார். இ்ந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதியுற்று வந்தார். சென்னை தேனாம்பேட்டையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்த நிலையில் இன்று ( டிச. 6) காலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த, கட்டிமேடு கிராமத்தில், ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர், இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டுவந்தார். மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராக போராடி வந்தார்.பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றியமைக்காக மத்திய, மாநில அரசுகளின் விருது பெற்றார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts