வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 08, 2019

காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...

நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலையில், குடிநீரைக் கொண்டு தனது லக்சூரி காரை கழுவியதாக இந்திய அணியின் புகழ்வாய்ந்த கிரிக்கெட் வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.




இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலமும் தண்ணீர் பஞ்சத்தால் வாடி வரும்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர், தனது லக்சூரி காரை குடி தண்ணீரைப் பயன்படுத்தி கழுவியுள்ளார். 

அவர் வேறுயாருமில்லை, நமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிதான். இந்த சம்பவத்திற்காக, அவருக்கு அதிகாரிகள் அபராதம் வழங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த, வீடியோவை ஏஎன்ஐ ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கோடைக்காலம் துவங்கிவிட்டாலே, அதன் கூடவே அழையா விருந்தாளியாக தண்ணீர் பிரச்னையும் ஆரம்பித்துவிடும். இந்த பிரச்னை தமிழகம் மட்டுமின்றி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கக்கூடிய முக்கிய பிரச்னையாக இருக்கின்றது.


அதிலும், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது குடிநீர் பிரச்னை, பூதகரமாக வெடித்துள்ளது. இதனால், நாட்டின் அனைத்து மாநிலங்களுமே தண்ணீருக்காக தவித்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு, தண்ணீர் பிரச்னை தற்போது இந்தியா முழுவதும் தலைவிரித்துக்கொண்டு ஆடிக்கொண்டுள்ளது.

இதற்கு அரசியல் உட்பட பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றன. அதேசமயம், நீர் நிலைகளை சரிவர தூர்வாறாமல், பாதுகாக்காமல் விட்டதும் இதற்கு முக்கியமாக காரணமாக இருக்கின்றன.

 இதனாலயே, பல நீர்நிலைகள் தற்போது, காய்ந்து குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன. ஆகையால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதி மக்கள் நிலத்தடி நீரையே தங்களின் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தி வருகின்றனர்.


சில பகுதிகளில் இதுகூட கிடைக்காமல், பிற பகுதிகளையும், தண்ணீர் லாரிகளையும் தங்களின் அன்றாட தேவைக்கான நீருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

இவ்வாறு, நாடே குடி தண்ணீர் பிர்சனையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், விராட் கோஹ்லியின் சொகுசு காரை கழுவ குடிநீர் பயன்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


விராட் கோஹ்லி ஓர் கார் பிரியர் என்பது நாம், அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில், விராட்டின் கராஜில் பல லக்சூரி மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களின் அணி வகுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்த தகவலை ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு வெளியிட்டிருந்தது. அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். அதிலும், அவரிடத்தில் ஆடி நிறுவனத்தின் கார்களே அதிகமாக இருக்கின்றன.


இரவோடு இரவாக, போஸ்ட் ஆபீஸ், பிஎஸ்என்எல் ஆபீசில் ஹிந்தி எழுத்துக்கள் அழிப்பு.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி தபால் அலுவலகம் மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஹிந்தி எழுத்துக்கள், கருப்பு மை பூசிய அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி கல்வித் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கஸ்தூரிரங்கன் கமிட்டி மத்திய அரசுக்கு சமீபத்தில் ஒரு பரிந்துரையை சமர்ப்பித்திருந்தது.




தமிழகத்தை பொறுத்த அளவில், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழி கல்வி திட்டம் அமலில் உள்ளது. ஆனால், மொழி பாடத்திட்டம் என்பது மூன்றாவது மொழியாக, ஹிந்தியையும் கட்டாயமாக படிக்கவேண்டும் என்ற பரிந்துரையை கொண்டதாகும்.


இது ஒரு வகையில் ஹிந்தி திணிப்பு என்று கூறி தமிழகம் உள்ளிட்ட, தென் மாநில அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மூன்றாவது மொழியாக ஹிந்தி மட்டுமே இன்றி, வேறு பிராந்திய மொழிகளையும் விருப்ப மொழிப் பாடமாக அறிமுகம் செய்யலாம் என்று மத்திய அரசு ஆலோசனை தெரிவித்துள்ளது.

 இருப்பினும், மும்மொழி பாடத்திட்டம் என்பது மாணவர்களுக்கு கூடுதல் சுமையை கொடுக்க கூடியது என்பதும், பிராந்திய மொழிகளை விட ஹிந்தியை தான் அதிகம் பேர் படிக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்படும் என்ற நடைமுறை விஷயமும் இந்த பரிந்துரைக்கு எதிராக தமிழக அரசியல்வாதிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

 இந்த நிலையில் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள, தபால் அலுவலகத்தின் வெளியே தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்களில், ஹிந்தி மொழி வாசகத்தை மட்டும் யாரோ நள்ளிரவில் கருப்பு மை பூசி அழித்துள்ளனர். 

 இதேபோன்று, அருகே உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தின் வெளியே இருந்த ஹிந்தி எழுத்துக்களும் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மை பூசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க இதுபோன்று கருப்பு மை பூசப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகப்படுகிறார்கள்.


வாங்குன கடன திருப்பித் தரலைங்க, அதான் அவன் பொண்ண கொன்னுட்டேன்! அரண்டு போன அலிகார்..!

பீஃப் சாப்பிட்டாலோ அல்லது பீஃப் என்கிற பெயரை உச்சரித்தால் கூட "போட்றா அவன" என ஹிந்துத்வ தீவிரவாதிகள் இருக்கும் உத்திரப் பிரதேச மாநிலத்தில், பீஃப் சாப்பிட்டார்கள் என்பதற்காக இறந்த முகம்மது அக்லஃப் இறந்த அதே மாநிலத்தில் தற்போது இன்னொரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.


 பூட்டுகளுக்கு பெயர் போன அலிகார் மாவட்டத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, தப்பல் (Tappal) கிராமத்தில் அந்தக் கொடூரம் கோரமாக நடந்திருக்கிறது. வாங்கிய 10,000 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என, கடன் வாங்கியவரின் 2.5 வயது குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்கள் கடன் கொடுத்த காட்டு மிராண்டிகள்.

என்ன பிரச்னை 
 ஒரு அழகிய குடும்பம். அந்த குடும்பத்துக்கு மேலும் அழகு சேர்க்க ஒரு குட்டி இளவரசியாக ஒரு 2.5 வயது பெண் குழந்தை. மிக அளவான சம்பாத்தியம், சின்ன வேலை, செல்லக் குழந்தை என சிறிய உலகத்தில் வாழும் குடும்பம். இந்த குடும்பத்துக்கு ஏதோ ஒரு அவசர தேவைக்காக பக்கத்து வீட்டுக் காரர்களான சஹித் மற்றும் அஸ்லாமிடம் 10,000 ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்கள்.

அப்புறம் தருகிறேன் 
 சரி ஏதோ அவசரத்தில் கேட்கிறார்கள் என்பதால் சஹித்தும் அஸ்லமும் எப்போது திருப்பிக் கொடுப்பீர்கள் எனக் கேட்காமலேயே கடனைக் கொடுத்துவிட்டார்கள். 

 சில வாரங்கள் கழிந்து விட்டது. "என்னய்யா வாங்குன 10,000 ரூபாய் கடன எப்பய்யா தருவே" என சஹித்தும் அஸ்லாமும் வேறு தொனியில் கேட்டிருக்கிறார்கள். கடன் வாங்கிய குடும்பமும் விரைவில் கொடுத்து விடுகிறேன் எனச் சொல்லி இருக்கிறார்கள்.


கொடுக்கவில்லை
இன்னும் சில வாரங்கள் கழிந்துவிட்டது. இந்த முறை இன்னும் கோபத்துடனும், மரியாதை குறைவாகவும், “ஏய்யா கடன் வாங்குறப்ப நல்லா இருந்துச்சுல்ல, இப்ப கடன எப்ப குடுப்ப” என மிரட்டல் தொனிலேயே கேட்டிருக்கிறார்கள். கொஞ்சம் போகட்டும் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என நம் அப்பாவிக் குடும்பம் வழக்கம் போல பதில் சொல்லி இருக்கிறது.

அடிதடி
ஒரு நாள் மீண்டும் சஹித்தும் அஸ்லமும் வெளிப்படையாக வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கிறாயா இல்லை உன் குழந்தையை தூக்கட்டுமா எனவும் மிரட்டி இருக்கிறார்கள். பயந்து போன அந்த ஏழைக் குடும்பம், காலில் விழாத குறையாக அடித்துப் பிடித்து சஹித்துக்கும், அஸ்லாமுக்கும் பல விதங்களில் சமாதானம் சொல்லி திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

கோபம் 
 ஆனால் சஹித்துக்கும் அஸ்லாமுக்கும் கோபம் தாளவில்லை. ஏற்கனவே அந்த அப்பாவிக் குடும்பத்தில் மிரட்டியது போலவே, மே 31, 2019 அன்று குழந்தையைக் கடத்தி இருக்கிறார்கள். கடத்திய குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றே விட்டார்கள்.

 கோபம் அடங்காமல் கண்களையும் நோண்டி எடுத்திருப்பதாகச் சில செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதன் பின் தான் அவர்கள் செய்தது கொலை என்கிற பெரிய தவறு அவர்களுக்குப் புரிய வருகிறது.

அடையாளம் தெரியக் கூடாது 
 ஆக தவறை மறைக்க அந்த 2.5 வயது பிஞ்சுக் குழந்தையை அடையாளம் தெரியாத அளவுக்கு கண்டம் துண்டமாக வெட்டி குப்பைத் தொட்டியில் வீசி இருக்கிறார்கள்.

 குழந்தையின் உடல் அங்கங்களை தெரு நாய்கள் வாயில் கவ்விக் கொண்டு எடுத்துச் செல்வதைப் பார்த்த காவல் துறையினர் சந்தேகப்பட்டு குப்பைத் தொட்டியைத் தோண்டித் துருவி இருக்கிறார்கள். குழந்தையின் சடலம் கடந்த ஜூன் 02, 2019 அன்று தான் கிடைக்கிறது.

காவல் துறை 
 விசாரணையில் கடன் பிரச்னை தெரிய வர சஹித் மற்றும் அஸ்லாமை கைது செய்து, தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து மேற்படி விசாரணைகளை நடத்தி வருவதாக அலிகார் மாவட்ட மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் ஆகாஷ் பத்திரிகையாளர்களிடம் சொல்லி இருக்கிறார். வழக்கை, விரைவு நீதிமன்றம் விசாரிக்கப் போகிறதாம்.

உண்ணாவிரதம் 
 தன் 2.5 வயது மகளின் மரணச் செய்தி கேட்ட தகப்பன் “சஹீத் மற்றும் அஸ்லாமின் மொத்த குடும்பத்தையும் சிறையில் அடைக்க வேண்டும். அவர்கள் உதவி இல்லாமல் இந்த இருவரால் மட்டும் என் குழந்தையைக் கொன்று இருக்க முடியாது.

 அப்படி கைது செய்யவில்லை என்றால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்” எனச் சொல்லிகாவல் துறைக்கு பகீர் கிளப்பி இருக்கிறார்.

நடவடிக்கை
மேற்படி எந்த பிரச்னையும் நடக்காமல் இருக்க, 2.5 வயது மகளைப் பறி கொடுத்த குடும்பத்தினருக்கும், தப்பல் கிராமம் சுற்றிலும் காவல் துறையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

 இதை ஒரு முன்னேற்பாடாக காவல் துறையினர் செய்திருப்பதாகவும் அலிகார் மாவட்டத்தின் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் சொய்திருப்பதாகவும் காவல் துறை வட்டாரங்களில் இருந்து சொல்கிறார்கள்.

இந்து - முஸ்லிம் 
 செய்திகள் ஒரு பக்கம் இப்படி வந்து கொண்டிருக்க, இறந்த 2.5 வயது செல்ல மகளின் பெயர் ட்விங்கில் ஷர்மா என்றும், அந்தச் சிறுமியை முகம்மது சஹித் பாலியல் வன் கொடுமைக்கு ஆள் ஆக்கி கொலை செய்துவிட்டான் என்றும் பல ட்விட்கள் பறந்து கொண்டிருக்கின்றன. 

இப்போது வரை இறந்த 2.5 வயது மகளின் பெயர், அவர்களின் பெற்றோர் விவரங்களை அலிகார் காவல் துறை கண்காணிப்பாளர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி


ஏர்வாடி அருகே உள்ள ஏராந்துறையைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சக்தி (வயது 45). இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.




 இதையடுத்து அவர் ஏர்வாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறச் சென்றார்.



டாக்டர்கள் இல்லாததால் செவிலியர்கள் சக்தியை பரிசோதித்து மாத்திரை வழங்கினர். வீட்டுக்கு வந்த அவர் மாத்திரையை உடைத்து சாப்பிட முயன்றார்.


 மாத்திரையில் கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாத்திரையை உடைக்காமல் சக்தி அதனை உட்கொண்டிருந்தால் அவரது நிலைமை மோசமாயிருக்கும்.


 மாத்திரையில் கம்பி இருந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


திமுக வயிறு வளர்க்க இந்தி.அரசியல் செய்ய இந்தி எதிர்பா.?? வெளுத்து வாங்கும் H.ராஜா..!!சிக்கி சின்னா பின்னமான திமுக பேச்சாளர்..!

ஒரு தனியார் தொலைகட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் திமுக சார்பில் பேராசிரியர் கான்ஸ்டண்டைன் பங்குபெற்ற இவர் அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் கேட்ட கேள்ளவிகளுக்கு பதில் கூற முடியாமல் சிக்கி கொண்டார். அந்த விவாதத்தில் நடந்தவை.

நெறியாளர்: உங்கள் கட்சி தலைவர்கள் நடத்தும் CBSC பள்ளிகளில் மாணவர்கள் விரும்பி இந்தி படிக்கும் வாய்பு இருப்பது போல் அரசு பள்ளிகளில் மாணவர்கள் விரும்பி இந்தி படித்தால் என்ன தவறு.

திமுக பேச்சாளர்:CBSC பள்ளி மாநில அரசு கட்டுபாட்டில் இல்லை இது மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ளது ஆகையால் CBSC பள்ளியில் இந்தியை கொண்டு வந்தது மத்திய அரசு தான்.
நெறியாளர்: நீங்க கொள்கையில் பிடிப்பாக இருந்தால் இந்தி படம் கற்று தற கூடிய பள்ளிகளை வணிகத்துகாக ஏன் நடத்த வேண்டும் இதை மக்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? இந்தி திணிப்பா? அல்லது வேறு ஏதாவதா?

திமுக பேச்சாளர்: நாங்கள் நடத்தும் பள்ளிகளில் யாரையும் நாங்கள் வழுகட்டாயமாக தூக்கிட்டு வந்து இந்தி கற்று தறவில்லை அவர்களே விருப்பபட்டு தான் கற்று கொள்கிறார்கள்.
நெறியாளர்: அரசு பள்ளியிலும் அதே தான நீங்கள் விருப்பபட்ட படிக்கலாம்.?

திமுக பேச்சாளர்: அரசு பள்ளிகளில் இந்தியை கற்று தறுவதால் தமிழ் மொழி மட்டும் அழியாது.தமிழ் கலாச்சாரமும் அழிந்துவிடும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நெரியாளார்: அப்படியானால் நீங்கள் நடத்தும் 40 CBSE பள்ளிகள் முலம் கொள்கை ரீதியாக பள்ளி நடத்தி தமிழ் கலாச்சரத்தை அழித்து கொண்டிருக்கிறீர்கள்.

திமுக பேச்சாளர்: வணிக ரீதியாக ஒரு பள்ளி நடத்துவது மற்றும் ஒரு நிறுவனம் நடத்துவதை நீங்கள் கொள்கை ரீதியாக பார்ப்பது தவறு என பேசினார்.
இந்த விவாத நிகழ்ச்சியை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயளாலர் ஹச்.ராஜா. திமுக தலைவர்களுக்கு வயிறு வளர்க்க காசு சம்பாதிக்க இந்தி தேவை ஆனால் அவர்கள் அரசியல் பிழைப்புக்கு இந்தி எதிர்ப்பு. ஒவ்வொரு தமிழனும் இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு எதிராக வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோர் போராடுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Friday, June 07, 2019

தூத்துக்குடியில் நடத்தையில் சந்தேகம் ;மனைவியை கொன்று கணவன் தற்கொலை

தூத்துக்குடி 2019 ஜூன் 4 ;தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி அடுத்த தஸ்நேவிஸ் நகரைச் சேர்ந்தவர் முத்தையா இவரது மகன் மதிகுமார் (45). இவரது மனைவி அமுதா (45). இவர்களுக்குத் திருமணமாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த தம்பதியருக்கு அஜித்குமார்(25), அஜிஸ்குமார்(25) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், அஜித்குமார் திருமணமாகி திருப்பூர் மாநகராட்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தூத்துக்குடி அருகே உள்ள காற்றாலை நிறுவனத்தில் அஜிஸ் குமார் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி 25 ஆண்டுகள் கடந்த பிறகு நடத்தையில் சந்தேகப்பட்டு மதிகுமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.நேற்று இரவு மகன் அஜிஸ்குமார் வேலைக்குச் சென்றுவிட்டார். அதன் பின்னர் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் மனைவியுடன் சண்டைபோட்டு ஆத்திரத்தில் மனைவி அமுதாவை கொடூரமாகத் தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததால் பயத்தில் மதிகுமார் வீட்டிலே தூக்கில் தொங்கினார். 

இந்தநிலையில், மதிகுமாரின் வீட்டின் கதவு இன்று வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது  தம்பதினர் இறந்து கிடந்தனர். இதில், அமுதா கழுத்தில் காயத்துடன் தரையில் பிணமாகக் கிடந்துள்ளார். மதிகுமார் சேலையில் தூக்கில் தொங்கினார். போலீசார் விசாரணையில் மனைவியை கொலை செய்துவிட்டு மதிகுமார் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.   போலீசார் தம்பதினர் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தத் துயர சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடியாத்தத்தில்தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இனி 24 மணிநேரமும் கடைகள் திறந்து வைக்கலாம் - நைட்ல கூட ஷாப்பிங் பண்ணலாம்

24 மணிநேரமும் கடைகள் திறந்து வைக்கலாம் ;ஒரு பணியாளரை 8 மணிநேரத்துக்கு மேல் அல்லது வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்க வைக்கக் கூடாது.


தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்.. 24 மணி நேரமும் கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 365 நாட்களும் திறந்திருக்கலாம்.அதே நேரத்தில் எந்தவொரு நாளிலும் ஒரு பணியாளரை 8 மணிநேரத்துக்கு மேல் அல்லது வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்க வைக்கக் கூடாது. அதுபோல ஓவர் டைம் பணியையும், ஒரு நாளுக்கு 10.30 மணி நேரத்துக்கு மேல் அல்லது வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற வைக்கக் கூடாது.


பெண்கள் இரவில் பணி செய்வதாக இருந்தால் அதற்கு எழுத்துப்பூர்வ அனுமதியை அவர்களிடம் நிறுவனங்கள் பெற வேண்டும். இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த புதிய நடைமுறை அமலில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.