வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, August 08, 2019

கள்ள உறவு மோகம்.. சிதறி கிடந்த ஆணுறைகள்.. டீ கப்பில் லிப்ஸ்டிக்.. பிளான் போட்டு கொன்ற மனைவி | Run World Media


கணவனுக்கு டீ-யில் தூக்க மாத்திரை கொடுத்து, கழுத்தையும் நெறித்து கொலை செய்துள்ளார் மனைவி.. காரணம் கண்ணை மறைத்த கள்ளக்காதல்! தானே மிராரோடு கிழக்கு பகுதியில் வசித்து வந்தவர் பிரமோத் பதான்கர். இவருக்கு வயது 43. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 

இவரது மனைவி 36 வயதான தீப்தி. இந்நிலையில், பிரமோத், கடந்த மாதம் 15-ந் தேதி வீட்டில் இறந்து கிடந்தார். மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்ததால், நிறைய சந்தேகங்களும் எழுந்தன. இதனால் நவ்கர் போலீசார் விசாரணையை துரிதமாக்கினார்கள். முதல் வேலையாக, கட்டிட வளாகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த சமயத்தில்தான் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ஆஸ்பத்திரியில் இருந்து வந்தது.

கொன்றோம் அதனால்தான் கள்ளக்காதலனுடன் சேர்ந்து பிரமோத்தை தீர்த்து கட்ட திட்டம் போட்டோம். இதுக்காகவே என் மகளை, என் அம்மா வீட்டுக்கு அனுப்பி வைச்சிட்டேன். பிரமோத்துக்கு டீ போட்டு அதில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். அவரும் மயக்கமா விழுந்துட்டாரு. அதுக்கப்புறம் நானும், கள்ளக்காதலனும் சேர்ந்து அவர் கழுத்தை நெரித்து கொன்றோம்" என்றார்.

கள்ளக்காதல்
 அதில், பிரமோத் ஏராளமான தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளதும், அவரது கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை அதிகமாக்கியது. அதனால் முதல் விசாரணையே அவரது மனைவி தீப்திதான். ஆரம்பத்தில் மழுப்பலாக பேசிய தீப்தி, பிறகுதான் உண்மையை கக்கினார். கள்ளக்காதல் குட்டும் வெளிப்பட்டது. தீப்தி போலீசாரிடம் சொன்னதா

தகராறு 

"நான் கோரேகாவில் ஒரு ஸ்கூலில் வேலை பார்த்தேன். போன 2015-ம் வருஷத்தில் இருந்து புனேயை சேர்ந்த உத்தவ் பஜான்கர் என்பவருடன் எனக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விஷயம் பிரமோத்துக்கு தெரியவரவும், எங்களுக்குள் தகராறு அடிக்கடி வந்தது. இது எனக்கு எரிச்சலாக இருந்தது.
ஆணுறைகள்  
 இதில் என்ன ஒரு முக்கியமான விஷயம் என்றால், தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க பிரமோத் சாப்பிட்ட டீ கப்பில் "லிப்ஸ்டிக்" மூலம் உதடு வரைந்திருக்கிறார். இது போக, ஆணுறைகளை தலையணைக்கு கீழ் வைத்து விட்டார். அதாவது பிரமோத்துக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருப்பதுபோல செட்டப் செய்தார்.

சேர்ந்து பிரமோத்தை தீர்த்து கட்ட திட்டம் போட்டோம். இதுக்காகவே என் மகளை, என் அம்மா வீட்டுக்கு அனுப்பி வைச்சிட்டேன். பிரமோத்துக்கு டீ போட்டு அதில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். அவரும் மயக்கமா விழுந்துட்டாரு. அதுக்கப்புறம் நானும், கள்ளக்காதலனும் சேர்ந்து அவர் கழுத்தை நெரித்து கொன்றோம்" என்றார்

கைது
பிறகு அவரே போலீசுக்கும் போன் செய்து தகவலை சொல்லிவிட்டு, ஒன்னுமே நடக்காதது போல இருந்து கொண்டார். இதெல்லாம் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வெட்ட வெளியே வந்தது. இப்போது கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்

Wednesday, August 07, 2019

சம்மணமிட்டு உணவருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன...?

நாம் உண்ணும் உணவு முழுமையாகச் செரிமானமாக சம்மணமிட்டு உணவருந்தும் முறையே சிறந்தது. கீழே அமர்ந்து நமக்கு முன்னே இருக்கும் உணவைக் குனிந்து நிமிர்ந்து எடுத்துச் சாப்பிடும்போது, வயிற்றுத் தசைகளுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும்செரிமானச் சுரப்பிகளும் தூண்டப்படும்.
சம்மணமிட்டு உணவருந்துவதால் ‘பசி அடங்கிவிட்டது’ என்ற உணர்வை மூளைக்குக் கடத்தும் நரம்பின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். அதுவே நாற்காலியில் அமர்ந்து உணவருந்தினால், அந்த உணர்வு உடனடியாக மூளைக்குக் கடத்தப்படாமல், கூடுதல் நேரத்தை  எடுத்துக்கொள்ளும். இதனால் அதிக உணவு சாப்பிட நேரிடும்.

தேவைப்படும் கலோரிகளைவிட, அதிக கலோரிகள் உடலில் சேர்ந்து உடல்பருமனுக்கு வழிவகுக்கும். எனவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க ஆசைப்படுபவர்கள் சம்மணமிட்டு உணவருந்தும் பழக்கத்தை முதலில் பின்பற்ற வேண்டும்.


கால்களை மடக்கி, தொடைப் பகுதியில் வைத்துக்கொள்ளும் ஆசன வகையான ’பத்மாசனத்தில்’ கிடைக்கும் பலன்களில் பாதி, சம்மணம்  எனும் ‘சுகாசனத்தின்’ மூலம் கிடைக்கும். மேலும், உடல் உறுதிபெறுவதோடு, மூட்டு சார்ந்த நோய்கள் ஏற்படாது.
சம்மணமிடுவதால், இடுப்பைச் சுற்றியுள்ள தசைகளுக்கு வலிமை கிடைப்பதுடன் இடுப்பு இணைப்புகளில் நெகிழ்வுத் தன்மை ஏற்படும். நாற்காலியில் கூனிக் குறுகி அமர்வதைப் போல இல்லாமல், தரையில் சம்மணமிட்டு நிமிர்ந்து அமரும்போது, உடலுக்கு நிலையான தன்மை  உண்டாகும். 

களைப்பு நீங்கி சுறுசுறுப்புடன் உடல் இயங்க, சம்மணம் வழிவகுக்கும். உடலின் மேல் பகுதிக்கு ரத்தம் அதிகமாகப் பாயும். குருதியின் சுற்றோட்டத்தை அதிகரித்து, பல்வேறு நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். மனதை அமைதிப்படுத்தவும் ஒருநிலைப்படுத்தவும் சம்மணமிடும்  முறை உதவும்.


Tuesday, August 06, 2019

விசா இல்லாம சிலோன் போக முடியும்... பெர்மிட் இல்லாம காஷ்மீருக்கு போக முடியாது -நடிகை கஸ்தூரி | Run World Media

விசா இல்லாமக் கூட பக்கத்து நாடான இலங்கைக்கு போய்ட்டு வரமுடியுது. ஆனா பெர்மிட் இல்லாம காஷ்மீர் போகமுடியாது. அதனால இந்த காஷ்மீர் இணைப்பு ரொம்ப அவசியம்னு நடிகை கஸ்தூரி சொல்லி இருக்காங்க. காஷ்மீரில் மண்ணின் மைந்தர்கள் தவிர அந்நியர்களுக்கு அனுமதியில்லாமல் இருந்தது. இப்போது இந்த இணைப்பின் மூலம் இந்திய மக்கள் அனைவரும் சமம் என்றாகிவிட்டது. 

370 சட்டப்பிரிவை நீக்கப்பட்டதால் காஷ்மீருக்கான தனி அந்தஸ்து நீக்கப்பட்டதால் இந்திய சட்டம் காஷ்மீருக்கும் செல்லும். 70 வருடமாக கனன்றுகொண்டிருந்த அந்த கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டனர். ஷாமபிரசாத் முகர்ஜி காஷ்மீரில் சிறையில் உயிர் நீத்தவர். அவர்தான் ஒருநாள் இந்தியா ஒருமை அடையும் அப்படின்னு சொன்னார் அவரது கனவு நிறைவேறி விட்டது.
ஒரே இந்தியா என்றாகி காஷ்மீரும் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டது. இது முஸ்லீம்களுக்கு எதிரான நிகழ்வு அல்ல. 70 வருடமாக இருந்த தடை உடைக்கப்பட்டுவிட்டது அப்படின்னும் கஸ்தூரி சொல்லியிருக்காங்க.

கஸ்தூரி 
1990ஆவது ஆண்டுகள்ல தமிழ் சினிமாவுல முன்னணி கதாநாயகியா இருந்தவங்க நம்ம நடிகை கஸ்தூரி. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சிறந்த படிப்பாளி. கூடவே, வக்கீலுக்கு படிச்சவங்க. அதனாலதானோ என்னவோ, நெறைய விஷய ஞானம் உள்ளவங்க. உலக நடப்புகளை ஃபிங்கர் டிப்ஸுல வச்சிருக்குறவங்க.

உலக ஞானமுள்ள நடிகை 
நெறய க்வீஸ் ப்ரொக்ராம்ல கலந்துக்கிட்டு ஜெயிச்சவங்க. உலக நடப்புகளைப் பத்தி என்ன கேட்டாலும் டக்கு டக்குன்னு பதில் சொல்லுவாங்க. அந்த அளவுக்கு அதி புத்திசாலியும் கூட. மத்த நடிகைங்க மாதிரி இல்லாம, ஐநூறு வருஷத்துக்கு முந்தின விஷயத்துல இருந்து இன்னிக்கு நாட்டு நடப்பு ஒலக நடப்புன்னு எல்லாத்தையுமே கரச்சி குடிச்சவங்க. இன்னிக்கு நீங்க எந்த மேட்டரப் பத்தி நம்ம கஸ்தூரிகிட்ட கேட்டக் கூட நல்லா தீர்க்கமா சிந்திச்சி ஒடனே பதில் சொல்ற அளவுக்கு எல்லாம் தெரிஞ்சவங்க.


சோசியல் மீடியா போராளி 
அதனால தான், எங்க என்ன நல்லது கெட்டது நடந்தாலும் கூட, ஒடனே, தன்னோட கருத்த டக்குன்னு சோசியல் மீடியாவுல சொல்லிடுவாங்க. சோசியல் மீடியாவுக்கும் மென்னு திங்கிறதுக்கு அவல் கெடச்சதுன்னு, ஒடனே அவங்கள வச்சி செய்வாங்க. ஆனா நம்ம கஸ்தூரியோ, அவங்க சொன்னதுனால பின்னாடி என்ன எதிர்ப்போ அல்லது ஆதரவோ, கேலி கிண்டலோ எது வந்தாலும் அதப் பத்தி கண்டுக்காம தன்னோட வேலைய பாக்குறதுக்கு போயிடுவாங்க.

காஷ்மீர் பிரச்சினை 
இப்ப பாருங்க, காஷ்மீர் பிரச்சனையால பார்லிமெண்ட்டே ரெண்டு பட்டு கெடக்கு. நம்ம கஸ்தூரியோ வழக்கம் போல, அல்லாத்தையும் முந்திக்கொண்டு தன்னோட கருத்த சொல்லியிருக்காங்க. ஜம்மு-காஷ்மீர் ஸ்டேட்டும் மத்த ஸ்டேட்டுகள போலவே நம்ம நாட்டோட அங்கம் தான்னு சொல்லியிருக்காங்க. அதனால அந்த ஆர்டிகில் 370ங்குற சட்டப் பிரிவ தூக்குனது ரொம்ப சரி அப்பிடிங்கறாங்க.

காஷ்மீர் ஒன்றானதே 
முக்கியமா அவங்க என்ன சொல்றாங்கன்னா, இப்ப நம்ம பக்கத்து நாடான சிலோனுக்கு போகணும்னா கூட விசாவே தேவையில்ல. அதுவே பாருங்க, நம்ம நாட்டுக்குள்ளாற இருக்குற ஒரு ஸ்டேட்டுக்குள்ளாற போறதுக்கு மொதல்லயே பெர்மிஷன் வாங்கணுமாம். இதென்னங்க அநியாயமா இருக்குது. இப்போ காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதாலே ஒரே இந்தியாவாக மாறிவிட்டது.


காஷ்மீரில் முதலீடு 
அது மட்டுமாங்க, மத்த ஸ்டேட்டுல இருக்குறவங்க துட்ட கொண்டுட்டு போயி காஷ்மீர்ல இன்வெஸ்ட் பண்ணலாமம். ஆனா, அங்க இருந்து நம்ம போட்ட இன்வெஸ்ட்மென்ட்ட வெளில எடுத்துட்டு வரமுடியாதாம். ஏங்க நாம என்ன சும்ம வச்சிட்டு இருக்குற துட்டயா எடுத்துட்டு போயி காஷ்மீர்ல கொட்றோம். இன்னோன்னும் முக்கியமா சொல்லணும்.
சொத்து வாங்க முடியாது 
காஷ்மீர்ல இருக்குறவங்க இந்தியாவுல எங்க வேணும்னாலும் சொத்து வாங்கலாம். ஆனா காஷ்மீர்ல இருந்து ஒரு செங்கல்ல கூட வெளில யாரும் கொண்டுட்டு வர முடியாதாம். ஆனா அங்க இருக்குற ஹவுஸ் போட் (House Boat) மட்டும் வாங்கிக்கலாமாம். அத வாங்கி நம்ம என்ன தலையிலய வச்சிக்க முடியும். அப்புறம் எதுக்குங்க இந்தியாவுல இருக்குற அனைவரும் சமம். இனிமே சொத்து வாங்கலாம். காஷ்மீருக்கு தனியா அந்தஸ்து கொடுக்குற அந்த சட்டப்பிரிவு 370ங்குற சட்டப்பிரிவை நீக்கியது தப்பே இல்லீங்க. எனக்கு ரொம்ப சந்தோசம்னு சொல்றாங்க கஸ்தூரி.

கலாம் கனவு காணச் சொன்னார்.. இங்கு ஒரு "குடிமகன்".. கால்வாயில் அதை கண்டு கொண்டுள்ளார்!

மதுபோதையின் உச்சத்தில் பாதாள சாக்கடையில் சொகுசாக உறங்கிய இளைஞரால் மக்கள் வேதனை அடைந்தனர். 
 

ஒரு சினிமாவில் வசனம் வரும். படிக்காதவனைக் கூட பார்க்காமல் இருக்கலாம். ஆனால் குடிக்காவனை பார்க்காமல் இருக்கவே முடியாது என்று. அந்த அளவுக்கு அரசு ஆதரவுடன் குடிப் பழக்கம் அமோகமாக மேலோங்கி வளர்ந்து தழைத்துக் கொண்டிருக்கிறது. இளைய சமுதாயம் அழிந்து நாசமாகி சின்னாபின்னமாகிக் கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வயது வித்தியாசமின்றி மது பழக்கத்திற்கு ஆளாகி பெரும்பாலானோர் அடிமையாகி வருகின்றனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சமூகத்தில் மரியாதை இழந்து நிற்கும் அவலங்களோடு எண்ணத்தகாத செயல்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

போதை அவலம் 
மதுபோதைக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற உச்சகட்ட அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆதற்கு சான்றாக தான் மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகேயுள்ள சீமான்நகர் பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள அரசு மதுபான கடை ஒன்றில் 30வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் மது அருந்தியுள்ளார்.

தள்ளாடி தள்ளாடி
போதை தலைக்கேறியது. ஏறிய போதையில் அப்படியே தள்ளாடித் தள்ளாடி நடந்தார். பின்னர் அருகில் உள்ள பாதாள சாக்கடையில் நிம்மதியாக படுத்துக் கொண்டார். சாக்கடை வாசம் சென்ட் போல மணந்ததா என்று தெரியவில்லை.. அப்படியே சுகமாக தூங்க ஆரம்பித்து விட்டார். அவர் சாக்கடையில் உறங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

சாக்கடையில் ஓய்வு 
போதையில் தடுமாறி உள்ளே விழுந்த இளைஞர் தான் எங்கே இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் சாக்கடை நீரில் மிதந்தபடி தூங்குகிறார். இதனை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர். நாட்டின் தூண்கள் என்று சொல்லக்கூடிய இளைஞர் சமுதாயம் இது போன்ற அவலநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதன் சாட்சியாக அமைந்துள்ளது இந் காட்சி.

வருங்கால இந்தியா
இதைப் பார்த்த சில இளைஞர்கள் கருமம்டா என்று தலையில் அடித்துக் கொண்டு, போதை இளைஞரை தூக்கி போதையை தெளியவைத்து அனுப்பி வைத்தனர். இளைஞர் மது போதையில் பாதாள சாக்கடையில் ஸ்டைலாக உறங்கும் காட்சி நெட்டிசன்களிடையே வேகமாக பரவி வருகிறது. வருங்கால இந்தியா.. அல்ல அல்ல.. தற்கால இந்தியாவின் இளைஞர் சமுதாயம் இப்படி குடித்துக் கெட்டுப் போய்க் கொண்டிருப்பது நிச்சயம் நாட்டுக்கு நல்லதல்ல.

Monday, August 05, 2019

லிப்ட் ஒன்றில் சிக்கி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட சகோதரனின் உயிரை காப்பாற்றிய சிறுமி

லிப்ட் ஒன்றில் சிக்கி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட சகோதரனின் உயிரை சிறுமி ஒருவர் காப்பாற்றி பாராட்டை பெற்று உள்ளார்.
 


 குடியிருப்பில் 3 சிறுவர்கள்  லிப்ட்டில் ஏறுகிறார்கள். அப்போது லிப்ட் நகர்ந்ததும் லிப்ட் கதவில் மாட்டிய கயிறு  ஐந்து வயது சிறுவன் கழுத்தில் மாட்டி மேலே தூக்கப்பட்டான். உடனடியாக சிறுவனின் சகோதரி வேகமாக செயல்பட்டு சிறுவனின் கழுத்தில் மாட்டிய கயிறை அகற்றினார். இதனால் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். இந்த சம்பவம் துருக்கியின் இஸ்தான்புல்லில் கடந்த புதன்கிழமை நடந்ததாக தி மிரர் தெரிவித்துள்ளது.

இந்த கடினமான நேரத்தில்  சகோதரி நிதானமாக  நிலைமையை கையாண்டதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
''அந்த பெண் மிக முக்கியமான சூழ்நிலையில்  மிக விரைவாக கையாண்டார்'' என்று வீடியோவுக்கு பதிலளித்த ஒருவர் கூறி உள்ளார். பதட்டமில்லாமல் நிலமையை கையாண்டது மிகவும் நல்லது  என மற்றொருவர் கூறி உள்ளார்.

உள்ளூர் தகவல்களின்படி, சிறுவன் உடல்நிலை தற்போது சரியில்லாமல் இருப்பதாகவும்,  குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Thursday, August 01, 2019

மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி : அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் நடிகர் அஜித்குமார்


மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் நடிகர் அஜித்குமார்.






கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் அஜித்குமார் இணைந்து பணியாற்றிய தக்ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.

இந்நிலையில் கோவையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித் குமார் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளார்.


கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நாற்பத்தி ஐந்தாவது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித்குமார் 314 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.


வாட்டர் பார்க்கில் இயந்திரம் உருவாக்கிய 10 அடி உயரமுள்ள சுனாமி அலை; 44 பேர் காயம்

சீனாவில் வாட்டர்பார்க் ஒன்றில் இருக்கும் அலைகள் உருவாக்கும் இயந்திரம் பழுதாகி சுனாமி போன்ற பேரலையை உருவாக்கியதில் 44 பேர் காயம் அடைந்தனர்.



 வடக்கு சீனாவில் ஷுய்யுன் வாட்டர் பார்க் என்ற பொழுதுபோக்கு பூங்கா அமைந்திருக்கிறது. இங்கு இருக்கும் ஒரு நீச்சல் குளத்தில் இயந்திரம் ஒன்றின் மூலம் செயற்கையான அலைகள் உருவாக்கப்படுகிறது.
 சமீபத்தில் அந்த நீச்சல் குளத்தில் தங்கள் குழந்தைகளுடன் பலர் விளையாடிக்கொண்டு இருந்த போது, திடீரென சுனாமி
போன்ற  10 அடி உயரமுள்ள பேரலை ஒன்று அங்கு உருவாகி உள்ளது.


இதில் அங்கு இருந்தவர்கள் பலர் நீச்சல் குளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இச்சம்பவத்தில் 44 பேர் காயம் அடைந்த நிலையில், இதன் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
 செயற்கையாக அலைகள் உருவாக்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் இவ்வாறு நடந்ததாகவும் அதனை இயக்கிய நபர் மீது தவறில்லை என்றும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் அந்த பூங்கா மூடப்பட்டு இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.