வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 30, 2018

கின்னஸ் கூந்தல்

கூந்தல் முடி நீளமாக வளர வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெண்களின் விருப்பமாக இருக்கும். நீண்ட கூந்தல் முடியை பெறுவதற்கு மெனக்கெடுவார்கள்.




கூந்தல் முடி நீளமாக வளர வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெண்களின் விருப்பமாக இருக்கும். நீண்ட கூந்தல் முடியை பெறுவதற்கு மெனக்கெடுவார்கள். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

கூந்தல் அலங்காரத்திற்கு கூடுதல் 
முக்கியத்துவமும் கொடுப்பார்கள். குஜராத்தை சேர்ந்த டீன் ஏஜ் பெண் ஒருவர் சர்வ சாதாரணமாக 5 அடி 7 அங்குலத்தில் கூந்தல் முடி வளர்த்து இருக்கிறார். அவரது கூந்தலின் நீளம் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது. 16 வயதாகும் அவருடைய பெயர் நிலான்ஷி பட்டேல். சிறுவயதில் தனக்கு தவறாக சிகை அலங்காரம் செய்யப்பட்டதே தான் நீளமாக முடி வளர்த்ததற்கு காரணம் என்கிறார்.
‘‘6 வயதில் முடி வெட்ட சென்றிருந்தபோது அசிங்கமாக ‘ேஹர் கட்டிங்’ செய்து விட்டார்கள். அதை பார்த்து மன வேதனை அடைந்தேன். இனி ஒருபோதும் முடியே வெட்டக்கூடாது என்று முடிவெடுத்தேன். அன்று முதல் முடியை வெட்டாமல் வளர்த்தது இன்று கின்னஸ் சாதனை படைக்க காரணமாக அமைந்துவிட்டது’’ என்கிறார்.

நிலான்ஷியை அவரது தோழிகள் ரபுன்ஷல் என்ற கார்ட்டூன் கதையில் வரும் சிறுமியின் கதாபாத்திரத்தின் பெயரிலேயே அழைக்கிறார்கள். ரபுன்ஷல் கதாபாத்திர சிறுமிக்கு இருப்பதுபோல் நிலான்ஷிக்கும் நீண்ட கூந்தல் இருப்பதாக கூறுகிறார்கள். நீண்ட கூந்தலை பராமரிப்பதில் தனக்கு எந்தவிதமான அசவுகரியமும் இல்லை என்கிறார், நிலான்ஷி.
‘‘நீண்ட கூந்தல் முடியால் நான் நிறைய பிரச்சினைகளை சந்திப்பதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால் எந்தவிதமான பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை. வாரம் ஒருமுறை தலை முடியை தண்ணீரில் அலசுகிறேன். எனது அம்மா சிகை அலங்காரம் செய்வதற்கு உதவி செய்கிறார். நீண்ட தலைமுடி எனக்கு தனி ஸ்டைலை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. டேபிள் டென்னிஸ் விளையாடும்போது எனக்கு வசதியாக கூந்தலை பின்னிக்கொள்கிறேன். எந்த அசவுகரியமும் எனக்கு ஏற்படுவதில்லை’’ என்கிறார்.

செண்டிவாக்கத்தில் கலக்கல் கலெக்‌ஷன் - காவல்துறையினரைக் கண்டு பீதியில் வாகன ஓட்டிகள்



காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுதான் செண்டிவாக்கம் என்னும் கிராமம். இந்த பகுதியானது மேல்மருவத்தூர் - வந்தவாசி செல்லும் சாலையில் உள்ளது. இந்தப் பகுதிகளில் காவல் துறையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதே வாகன ஓட்டிகளின் ஆதங்கம்.


தினமும் காலை 10 மணியளவில் ஆஜராகும் போலீசார் மாலை 6 மணியளவில் தான் திரும்புகின்றனர். பொதுமக்களைப் பொறுத்தவரை மேல்மருவத்தூர் காவல்நிலைய கிளை என்பது செண்டிவாக்கம் தான் என்று தோன்றும் அளவிற்கு அவர்களின் நேர செலவிடல் இங்குதான் உள்ளது. சில சமயங்களில் காலை இருவேறு போலீசாரும் மதிய உணவிற்கு பிறகு இருவேறு போலீசாரும் என சுழற்சி முறையில் கலெக்‌ஷன் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இந்தப் பகுதியில் வேகத்தடை (Speed Breaker) உள்ளதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் போலீசார்.


ரூ.500/-ல் அபராதம் வசூலிக்க ஆரம்பிக்கும் இவர்கள் அந்த நபர் (வாகன ஓட்டிகள்) ரூ.50/- தான் என்னிடம் உள்ளது என்று கூறும் அளவிற்கு வரும் வரை பொறுத்து கைக்கு கிடைத்ததை வாங்கிக் கொள்கின்றனர் என்பதே வாகன ஓட்டிகளின் ஆதங்கம். 


இப்படி ஒரு அவல நிலை இருக்கும் காரணத்தினாலேயே வாகன ஓட்டிகள் வேறு வழியில் செல்லும் எண்ணம் மேலோங்குகிறது. காரணம் என்னவெனில் அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பினும் குறைந்தபட்ச தொகையாவது கொடுத்தால் தான் விடுவிக்கிறார்கள் என்பதே. 


மேலும் பலதரப்பினர் பல்வேறு அவசர காரியங்களுக்கு செல்லும் போதும், பணிக்காக செல்லும் போதும் பொதுமக்களின் நேரத்தை வீணடிக்கின்றனர்.  தற்போது பொதுமக்களின் கேள்வி என்னவென்றால் மேல்மருவத்தூர் காவல் துறையினரின் போலீஸ் பூத் பகுதி இதுதானா..? அல்லது கிளை காவல்நியைம் இதுதானா என்பதே..?  


தற்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் இருமுடி சீசன் என்பதால் கூடுதல் போலீசார் ஆட்டோக்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பொதுமக்களை கட்டுப்படுத்துகிறார்களோ இல்லையோ..! தவறாமல் வாகன ஓட்டிகளிடம் கலக்கல் கலெக்‌ஷனில் ஈடுபடுகின்றனர். மேலும் எவ்வளவோ வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என தோன்றும் அளவிற்கு இவர்களின் செயல்பாடுகள் உள்ளது. மேலும், இவர்களால் நல்ல காவல் துறை அதிகாரிகளுக்கும் அவப்பேர் தான் ஏற்படும் என்பதில் எவ்வித மறுப்புமில்லை. 


இந்த அவல நிலையால் பல்வேறு சமூக ஆதங்கங்களுடன் காவல் துறையில் புதியதாக பணியில் சேரும் காவலர்களுக்கும் கலெக்‌ஷன் பயிற்சி அளிக்கப்படுவதால் பிற்காலத்தில் இவர்களும் நச்சுவாக மாற வாய்ப்புள்ளது. எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வளர்ந்தபோதும் வாகன ஓட்டிகளின் குறைகளை கண்டறிய காவல் துறையின் இப்படிப்பட்ட சோதனைகள் தேவையற்றதே. எனவே இந்த அவல நிலைக்கு தமிழக அரசு தரப்பில் முற்றுப்புள்ளி வைக்க ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பதே பொதுமக்களின் ஆதங்கம்.


சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? சாப்பாடுதான்.. எனக்கு பசிக்குமில்ல..

குழந்தைகள் பேசினாலே அழகுதான். அதிலும் புத்திச்சாலித்தனமாக பேசினால் கொள்ளை அழகு. 

இதுபோன்ற குழந்தைகள் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்மித்திகா என்ற குழந்தை ஏதோ தவறு செய்துவிட்டதற்கு அவரது அம்மா லேசாக அடித்தார்.
  (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

அதற்கு அந்த குழந்தையோ தப்பு செஞ்சா அதென்ன அடிக்கிறது... அடிக்காமல் வாயால் குணமா சொல்லோனும் என கூறியது வைரலானது. இதை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்களும் பிஸியாக இருந்தனர். இதை அரசியல்வாதிகளுக்கு பக்காவாக மீம்ஸ் கிரியேட் செய்தனர்.

சங்கத்துல 

அதுபோல் இன்னொரு வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசும் ஸ்டைலை பார்த்தால் மதுரை பக்கம் என தெரிகிறது. அந்த வீடியோவில் அந்த சிறுவனிடம் இளைஞர் அணி சங்கத்துல சேர்ந்துட்டே சரியா என்று யாரோ கேட்கின்றனர்.

2000 ரூபாய்  

அதற்கு அந்த சிறுவனோ ஹூம் என்கிறார். போய் உங்கம்மாகிட்ட ரூ. 2000 வாங்கிவிட்டு வா என்கிறார். ம்ம் என்று சொல்லிவிட்டு அந்த சிறுவன் செல்கிறான்.

சாப்பாடு 

அதற்கு அந்த நபரோ போய்விட்டு வருவியா இல்லையா என கேட்க சாப்பிட்டு வரேன் என்கிறான் சிறுவன். சங்கம் முக்கியமா இல்லை சாப்பாடு முக்கியமா என அவர் கேட்க அதற்கு அந்த சிறுவன் சாப்பாடு முக்கியம் என்கிறார். 

அழுதுகொண்டே 

சங்கத்தில உறுப்பினர் நீ, சாப்பாடு முக்கியம்ங்கற என அந்த நபர் கேட்க அதற்கு சிறுவனோ சாப்பாடுதான்... அப்போ எனக்கு பசிக்கும் இல்ல நான் சாப்பிட கூடாதா? என அழுது கொண்டே கேட்கிறான். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை பீச்சில் தோனி.. பக்கத்துலேயே ஸிவா.. அட அட என்ன க்யூட்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சென்னையில் விடுமுறையை கழிக்கும் வீடியோ ஒன்று பெரிய வைரலாகி உள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி ஜார்கண்ட மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும், தமிழகத்தின் செல்லப்பிள்ளை. பிற மாநில மக்களை விட தோனியை அதிகம் கொண்டாடுவது தமிழர்கள்தான். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அதேபோல் தோனிக்கு தமிழர்கள், தமிழ்நாடு என்றால் அத்தனை பிரியம். தன்னுடைய மகள் ஸிவாவிற்கும் இவர்கள் சில தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.


வருவார்

இவர் விடுமுறை என்றால் கொடைக்கானல், சென்னை என்று தமிழகத்தில் பல இடங்களில் சுற்றுவதும் வழக்கம். இந்த நிலையில் தோனி தனது குடும்பத்துடன் சென்னையில் கடற்கரையில் கொண்டாடும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.


நிகழ்ச்சி  

பிசிசிஐ அமைப்பின் முன்னாள் தலைவர் சீனிவாசன் கடந்த 28ம் தேதி சென்னையில் ''காபி டேபிள் புக்'' என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் கலந்து கொள்ளத்தான் தோனி சென்னை வந்திருந்தார். தமிழக முதல்வர் பழனிச்சாமியும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

கடற்கரை 

இது சென்னையின் எந்த கடற்கரை என்ற விவரம் வெளியாகவில்லை. இதில் தோனி தனது மகள் ஸிவா மற்றும் ஷாக்ஷியுடன் இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையம் முழுக்க பெரிய ஹிட் அடித்துள்ளது.


சூப்பர் 

ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள். இதில் ஸிவா கடலில் விளையாடுவது மிகவும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

துபாய் விமானத்தில் ஆடைகளின்றி உலாவிய பயணி..

துபாயில் இருந்து லக்னோ வந்த ஏர் இந்திய விமானத்தில் புழுக்கம் தாங்க வில்லை என்று கூறி பயணி ஒருவர் ஆடைகளின்றி உலாவியது, சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


 IX-194 என்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, 150 பயணிகளுடன் துபாயில் இருந்து லக்னோ நகரத்துக்கு புறப்பட்டது. பயணிகள் அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்க பயணி ஒருவர் நடந்து கொண்ட விதம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
(தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதில் இருந்த ஆண் பயணி ஒருவர் திடீரென எழுந்தார். தாம் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி வீசி விட்டு உலாவ ஆரம்பித்துவிட்டார். சுற்றியிருந்த மற்ற பயணிகள் அவரின் செய்கையால் ஒரு கணம் அதிர்ந்தனர்.
பயணிகளின் கூச்சல் மற்றும் களேரபரத்தை அறிந்த விமானிகள் குழு உடனடியாக அங்கு வந்தது. அந்த ஆண் பயணியை அமுக்கி பிடித்தனர். அவரின் செய்கையால் அதிர்ந்த விமானிகள் தரப்பினர் விசாரணை நடத்தினர். விமானத்தில் புழுக்கம் தாங்காததால் ஆடைகளை கழற்றி அட்டகாசம் செய்ததாக அவர் கூறியுள்ளார். பயண நேரம் முழுக்க அவரை எங்கும் நகர விடாமல் பிடித்து வைத்திருந்த விமானிகள் குழு, பிற்பாடு விமானம் தரையிறங்கிய போது லக்னோ விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமானத்தில் முறையின்றி நடந்து கொண்ட அந்த நபர் யார், பெயர் விவரங்களை தெரிவிக்க விமான நிறுவனத்தினர் மறுத்துவிட்டனர்.

2019ல் இந்தியாவில் தெரியும் 2 அரிய கிரகணங்கள்.!

வரும் 2019ம் ஆண்டில் இந்தியாவில் 2 கிரணங்கள் தென்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் உலகில் 5 கிரகணங்கள் தென்படும் என்று வானியல் கூர்நோக்கு மையம் தெரிவித்துள்ளது.




இந்தியாவில் 2 அரிய கிரணங்கள் தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், இது இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து தகவல்கள் 
(தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!


கிரகணம்:  

கிரகணம் (eclipse) என்பது வானியல் பொருள் ஒன்று வேறொரு பொருளின் நிழலினாலோ அல்லது வேறொரு பொருள் இப்பொருளுக்கும் பார்வையாளருக்கும் இடையில் செல்லுவதாலோ தற்காலிகமாக மறைக்கப்படும் போது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும். கிரகணம் என்ற சொல் பெரும்பாலும் நிலாவின் நிழல் பூமியின் மேற்பரப்பைத் தாண்டும் போது நிகழும் சூரிய கிரகணத்தையோ, அல்லது நிலா பூமியின் நிழலினுள் செல்லும் போது ஏற்படும் சந்திர கிரகணம் ஆகியவற்றை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், பூமி-சந்திரன் தவிர்ந்த வேறு தொகுதிகளுக்கும் கிரகண நிகழ்வு பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கோள் ஒன்று தனது நிலாக்களில் ஒன்றின் நிழலினுள் செல்லுவது, நிலா ஒன்று தனது கோளின் நிழலினுள் செல்லுவது போன்றவற்றைக் குறிப்பிடலாம். இரும விண்மீன் தொகுதி ஒன்றிலும் இவ்வாறான கிரகணம் ஏற்படும்.


சூரிய கிரகணம்:  

சூரியனின் மையப்பகுதி மட்டும் நிலவினால் மறைக்கப்பட்டு, விளிம்புப்பகுதி மறைக்கப்படாமல் இருக்கும் போது, ஒரு ஒளி-வளையம் போன்ற தோற்றத்துடன் சூரியன் காட்சியளிக்கும்; இதுவே சூரியனின் கங்கணகிரகணம் (annular eclipse) அல்லது வலயக்கிரகணம் அல்லது வளைய மறைப்பு என்று அழைக்கப்படுகிறது.


சந்திர கிரகணம்  

நிலவு மறைப்பு அல்லது சந்திர கிரகணம் (lunar eclipse) என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும். இது சூரியன், பூமி, நிலவு ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படும்; இது ஏற்படுவதற்கு பூமி இடையில் அமைந்திருக்க வேண்டும். இதனால் முழு நிலவில் மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். கிரகணத்தின் வகை மற்றும் நீளம், நிலவின் இடம் அதன் சுற்றுப்பாதைகளில் எங்கிருக்கிறது என்பதைச் சார்ந்து இருக்கும்.


5 கிரணங்கள்: 

2018-ம் ஆண்டு 2 முழு சந்திர கிரகணம் உள்பட 5 கிரகணங்கள் ஏற்பட்டதாக மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள ஜிவாஜி வானியல் நிகழ்வுகளின் கூர்நோக்கு மையத்தின் மேற்பார்வையாளர் ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார். அதேபோல், வரக்கூடிய 2019-ஆம் ஆண்டிலும் 5 கிரகணங்கள் ஏற்பட இருப்பதாகக் கூறியுள்ளார்.


இந்தியாவில் காண முடியும்:  

ஜூலை 16, 17-ல் ஏற்படும் பகுதி சந்திர கிரகணமும், அடுத்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி ஏற்படும் சூரிய கிரகணமும் மட்டுமே இந்தியாவில் காண முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். பிற கிரகணங்கள், பகலிரவு மாறுபாடு காரணமாக இந்தியாவில் தென்படாமல் போகும் எனவும் விளக்கமளித்துள்ளார்.

கோவிலுக்குள் காதல் ஜோடி சில்மிஷம்... பொதுமக்கள் துரத்தியதால் பைக்கில் லிப்ட் கேட்டு எஸ்கேப்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பூட்டிய கோவிலுக்குள் கும்மாளமிட்ட காதல் ஜோடியை, பொதுமக்கள் சுற்றிவளைத்ததால் சுவர் ஏறி குதித்து தப்பியோடினர். 

தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் உள்ளது மிகவும் பழமை வாய்ந்த நதிகிருஷ்ணன் கோவில். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இங்கு பூஜை செய்யபடும் நாட்களை தவிர மற்ற நாட்களில் பூட்டபட்டிருக்கும். இந்த கோவிலின் மதில்சுவர் மீது காதல் ஜோடி ஒன்று ஏறி குதித்து உள்ளே சென்று வெகுநேரமாக கும்மாளமிட்டு கொண்டிருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர். கோவில் பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர்.


கோவிலுக்குள் ரன்னிங்

உடனடியாக கோவிலுக்கு விரைந்து வந்த பூசாரி பூட்டை திறந்து கோவிலுக்குள் சென்ற போது அங்கு இளம் காதல் ஜோடி சில்மிசத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதை கண்டு சத்தம் போடவே திடுக்கிட்ட காதல் ஜோடிகள், கோவிலை சுற்றி, சுற்றி வந்தனர்.


வயலுக்குள் ஓட்டம்

இந்த நிலையில் பொதுமக்கள் சிலரும் கோவிலுக்குள் வந்து அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்ற போது அங்கும், இங்குமாக ஓடிய இருவரும் திடீரென கோவிலின் மதில் சுவரை லாவகமாக தாண்டி வயல் பகுதிக்குள் குதித்து ஓட தொடங்கினர்.


காதல் ஜோடி தப்பியது  

பொதுமக்கள் அவர்களை நிற்கும்படி சத்தம்போடவே விழுந்தடித்து ஓடிய காதல் ஜோடி மூச்சிரைக்க ரோட்டிற்கு வந்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரின் உதவியோடு அங்கிருத்து தப்பினர்.


கோவிலுக்குள் சில்மிஷம்  

அடிக்கடி வரும் காதல் ஜோடிகள், கள்ள காதலர்கள் அமராவதி ஆற்றங்கரையிலும், புதர்களிலும், லூட்டி அடித்து வந்த நிலையில், தற்போது பூட்டிய கோவிலுக்குள் புகுந்து சில்மிஷத்தில் ஈடுபடுவது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.