வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குரங்கு மீது FIR [எப்.ஐ. ஆர்.] பதிய கோரிக்கை - முதியவர் மரணத்திற்கு காரணமாக இருந்ததால்...!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

குரங்கு மீது FIR [எப்.ஐ. ஆர்.] பதிய கோரிக்கை - முதியவர் மரணத்திற்கு காரணமாக இருந்ததால்...!



மீரட் குரங்குகள் தாக்கி 72 வயது முதியவர் பலியான சம்பவத்தில், குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய, குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியை சேர்ந்தவர் தரம்பால் சிங். 72 வயதான தரம்பால் சிங், வீட்டின் அருகிலுள்ள வனப்பகுதியில், விறகு மற்றும் சுள்ளிகளை பொறுக்கிக்கொண்டிருந்தார். (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!

 அருகிலுள்ள கட்டிமுடிக்கப்படாத கட்டடத்தில் வசித்து வரும் குரங்குகள், அங்கிருந்த செங்கற்களை கொண்டு தரம்பால் சிங்கை தாக்கின இதில் படுகாயமடைந்த தரம்பால் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.



எப்.ஐ.ஆர்., கோரிக்கை :


தரம்பால் சிங்கின் இறப்பிற்கு காரணமான குரங்குகள் மீது வழக்கு பதியும் பொருட்டு, குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, தரம்பால் சிங்கின் குடும்பத்தினர், போலீசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குரங்குகள் மீது எல்லாம் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய இயலாது என்று போலீசார் தரப்பில் தெரிவித்ததன் காரணத்தினால், குடும்பத்தினர், போலீஸ் உயர்அதிகாரிகளுக்கு கடிதம் எழுத தீர்மானித்துள்ளனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment