தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 
வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 
அங்குள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.
இந்த
 மாணவி கடந்த 5-ந்தேதி தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தார். 
அன்று இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே உள்ள புதர்கள் அடர்ந்த 
பகுதிக்கு மாணவி சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து
 சென்ற அதே ஊரை சேர்ந்த ரமேஷ் (வயது 20), சதீஷ் (22) ஆகிய 2 வாலிபர்கள் 
மாணவியை 
வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அப்போது
 மாணவி சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து அழுத்தியதாக 
கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன்பின்
 (தொடர்ச்சி கீழே...)
தடுமாறியபடி
 எழுந்து வீட்டிற்கு வந்த மாணவி தனக்கு நடந்த கொடுமை தொடர்பாக தாயாரிடம் 
கூறி கதறி அழுதார். இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீஸ் 
நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து
 அந்த மாணவிக்கு அரூர் மற்றும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை 
அளிக்கப்பட்டது. பின்னர் அந்த மாணவி தர்மபுரி பகுதியில் உள்ள 
ஒரு
 காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவியின் உடல்நலம் 
பாதிக்கப்பட்டது. இதனால் அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் 
சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், 
 தர்மபுரியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு காயமடைந்த மாணவி உயிரிழந்த 
சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள 
திமுக தலைவர் ஸ்டாலின், 
தர்மபுரியில்
 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் 
செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் 
அடைந்து வருவது பெரும்வேதனை!  இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்! பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் 
என்பது இதுதானோ? என பதிவிட்டுள்ளார்.
தர்மபுரியில்
 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் 
செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது 
பெரும்வேதனை! இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்!
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
- 
உலகின் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு சமமாக அளிக்கப்படுவது மானபங்கமும், பாலியல் துன்புறுத்தலும் தான். கருப்போ, சிவப்போ, உயரமோ, கு...
- 
கால மாற்றத்தால் பல்வேறு நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு ஒரு வகையில் நாம் தான் காரணம், என்றாலும் அதனால் ஏற்பட கூடிய விளைவைய...
- 
காம கொடூரர்களின் அட்டகாசத்தையும், அக்கிரமத்தையும் குறைக்க ஒரு வழியும் தெரியாமல் போய்விட்டதே???? உத்திரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி...
- 
மெரினா பீச்சில் மீட்கப்பட்ட பெண் யார் என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டார்கள். மேலும் அந்த பெண் நிர்வாண நிலையில் பிணமாக ...
- 
திருவிடைமருதூர் அருகே கழுத்தை அறுத்து ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் கைது செய்தனர். காதலித்த...
- 
விபச்சார தொழிலில் ஏற்பட்ட போட்டிதான் மெரினா பீச்சில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் பாலியல் தொழிலில் ஏற்பட்ட ப...
- 
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் ...
- 
நான் வாழும் வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். மூன்று பிள்ளைகளில் நான் தான் இளையவள். நான் ஒரு அப்...
- 
இப்போதைக்கு ஹைதராபாத்தில் நிலவி வரும் வயித்தெறிச்சல் சம்பவம் இதுவாகத்தான் இருக்க முடியும். கடந்த சனிக்கிழமையன்று 4 நாய்க்குட்டிகள்...
- 
கணவன், மனைவி உறவின் நடுவே ஒளிவுமறைவு இருக்க கூடாது என்று கூறுகிறது நம் சமூகம். ஆனால், இங்கே எல்லாருடைய உறவும் இப்படி இருக்கிறதா என்...
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment