வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கார் ஓட்டியபோது ஹெல்மெட் அணியவில்லை - ரூபாய் 500 அபராதம் விதித்த சின்சியர் போலீஸ்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 16, 2018

கார் ஓட்டியபோது ஹெல்மெட் அணியவில்லை - ரூபாய் 500 அபராதம் விதித்த சின்சியர் போலீஸ்!



மகாராஷ்டிர மாநிலத்தில் கார் ஓட்டிச் சென்றவர் ஹெல்மெட் அணியவில்லை என போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.


அந்தவகையில் மகாராஷ்டிர மாநில கட்சித் தலைவர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து போலீசார், இ-சலான் ஒன்றை அனுப்பி இருந்தனர். அதில் அவர்கள், சம்பந்தப்பட்ட வாகனத்தின் புகைப்படத்தை ஒட்டி, அதனை ஓட்டிச் சென்றபோது ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இதற்காக சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ. 500 அபராதம் விதிப்பதாகவும், அதனை 15 தினங்களுக்குள் கட்டத் தவறினால் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்த நோட்டீசால் சம்பந்தப்பட்ட நபர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் சம்பவத்தன்று அவர் ஓட்டிச் சென்றது இருசக்கர வாகனம் அல்ல, கார். சிசிடிவி கேமராக் காட்சிகளின் உதவியோடு போக்குவரத்து போலீசார் அனுப்பிய நோட்டீசில் இருந்த புகைப்படத்திலும் காரின் படமே இருந்தது.  இதன் மூலம், கார் ஓட்டிச் சென்ற நபர் ஹெல்மெட் அணியவில்லை என தவறுதலாக போலீசார் அபராத நோட்டீஸ் அனுப்பியது தெரிய வந்துள்ளது. இதில் மற்றொரு காமெடி என்னவென்றால், சம்பவம் நடைபெற்றது இப்போதல்ல, கடந்த ஜூலை மாதம் முதல் தேதி. ஐந்து மாதங்களுக்குப் பிறகு அதுவும் தவறுதலாக நோட்டீஸ் அனுப்பிய போக்குவரத்து ஊழியர்களின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment