வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கஜா புயல் கடக்கும்போது: செய்ய வேண்டியது... செய்யக்கூடாதது...
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 15, 2018

கஜா புயல் கடக்கும்போது: செய்ய வேண்டியது... செய்யக்கூடாதது...



புயல் கரையை கடக்கும்போது பாதுகாப்பாக இருப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:


புயலுக்கு முன்பு...

* தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்; உண்மையான தகவல்களை செய்தித்தாள் இணையதளங்கள்,  தொலைக்காட்சி போன்றவை மூலம் தெரிந்து கொள்வது அவசியம்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

* வீட்டில் முக்கிய ஆவணங்கள் இருந்தால் அவை தண்ணீரில் நனைந்து விடாமல் இருக்கும்படி பாலிதீன் கவர் கொண்டு மூடி பாதுகாக்கலாம்.

* அதிகமான மழை ஏற்பட்டால் வெளியே போக முடியாத சூழல் ஏற்படும். ஒரு சில நாட்களை கழிக்க தேவையான உணவு உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

* மின் இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்பதால் வெளிச்சத்துக்காக பேட்டரி போன்ற மாற்று ஏற்பாடுகள் அவசியம்.
 

* தகவல் தொடர்பு இல்லாமல் போகும் என்பதால் டிரான்சிஸ்டர் போன்றவை பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

* மொபைல் போன் சார்ஜ் செய்ய ஏற்பாடுகள் இருக்க வேண்டும். பவர் பேக்கப் பேட்டரி போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

* பழைய வீடாக இருந்தால் அதன் பாதிக்கப்பட்ட பகுதியை அறிந்து அதற்கு ஏற்றவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. பாதிப்பு ஏற்படும் என தெரிந்தால் முன்கூட்டியே வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது நல்லது.

* வீட்டில் உள்ள மனிதர்களை போலவே நாய், பூனை போன்ற விலங்கினங்களுக்கும் தேவையான பாதுகாப்பை முன்கூட்டியே உறுதி செய்வது அவசியம்.

* மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருப்பது அவசியம்.


புயல் கரையை கடக்கும் போது...

* வீட்டுக்குள் இருப்பது முக்கியம். வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

* மின் இணைப்பை துண்டித்து வைக்க வேண்டும்.

* சமையல் காஸை அணைத்து வைக்க வேண்டும்.
 

* வீட்டின் கதவும், ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.

* புயல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வது அவசியம்.

*கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரை பருக வேண்டும்.

* புயலுக்கு பிறகு தொற்று நோய்கள் பரவும் ஆபத்து இருப்பபதால் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கை அவசியம்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts




 

No comments:

Post a Comment