வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வெளிய போறதுக்கு முன்னாடி இதெல்லாம் செக் பண்ண மாட்டிங்களா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 03, 2018

வெளிய போறதுக்கு முன்னாடி இதெல்லாம் செக் பண்ண மாட்டிங்களா?

ஆள் பாதி ஆடை பாதி என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள். நம்மைப் பற்றிய எளிய மற்றும் துரிதமான ஓர் அறிமுகத்தை கொடுத்திடும். அதற்காகவே நாம் நம்முடைய உடைகளுக்கு அதிகப்படியான கவனத்தை செலுத்துகிறோம். முக்கியத்துவம் கொடுக்கிறோம். இன்றைக்கு பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை தங்கள் உடைகளில் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும்.   (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
 
பிறரை காட்டில் தான் சிறந்ததாக தெரியவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களைன் திருப்திபடுத்த ஏராளமான டிரஸ் டிசைனர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் டிசைனிங்கில் சொதப்பிய சில ஆடைகளைத் தான் இப்போது பார்க்கப்போகிறீர்கள் அடுத்த முறை டிரஸ் வாங்கச் செல்லும் போது சற்று ஜாக்கிறதையாக ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்து வாங்கவும்.

#1
என்ன இது.... வெட்டிங் கவுன் டிசைன் பண்ணச் சொன்னா வேற எண்ணமோ பண்ணிவச்சிருக்கான்.... ஒ க்ரியேட்டிவிட்டியா??? .அது சரி எந்த தைரியத்துல இந்தப் பொண்ணு நிக்கிதுன்னு தெர்லயே அவுந்து விழுந்திராது?
 #2 
 எப்டி எப்டி.... நம்ம இஷ்டத்துக்கு கண்டத தின்னுட்டு வெயிட்டப் போடுவோம்.... எதாவது பார்ட்டி, போட்டோ எடுக்கப்போறாங்க, இல்ல சோஷியல் மீடியால போடப்போற போட்டோனா மட்டும் ஸ்லிம்மா தெரியணும்னு நினச்சா இப்டித்தான்.

#3
 யாரும் பயப்பட வேணாம்... பாப்பாக்கு ஒண்ணும் ஆகல காலு நல்லாத்தான் இருக்கு டிரஸ் டிசைன் தான் அப்பிடி. அதெப்பெடியா அப்டியே வளஞ்ச மாதிரி நிக்க வச்சீங்க?
 

#4 
 விளையாட்டு பயிற்சி எடுக்கும் போது அதற்குரிய உடையை போட்டு செய்யும் போது தான் கம்ஃபர்டபிளாக இருக்கும் என்று சொல்வார்கள். இங்க பாருங்க ஒலிம்பிக்ல கலந்துகிட்ட பெண்கள் அணியினுடைய டிரஸ். இது வீரர்களோட கம்ஃபர்டபிளுக்காக டிசைன் பண்ண மாதிரி தெர்லயே....

#5
 டிசைனர் யாருன்னு தெர்ல... ஆனா அவரு இந்த டிரஸ்ஸ டிசைன் பண்ணப்போ என்ன நினச்சுட்டு இருந்தாருன்னு இந்த டிரஸ்ஸ பாத்தாலே தெரியுது... இந்த சட்டைய யாரு வாங்கி யாருகிட்ட அசிங்கப்படப் போறாங்களோ



#6 
எம்பா ஒரு நியா தர்மம் வேண்டாமாய்யா.... சரி டிசைனத்தான் திருடுறீங்க அத ஒழுங்கா திருட மாட்டீங்களா? போட்டோவ கொஞ்சம் உத்துப்பாருங்க ஒரு பேரு தெரியும்... டிசைனர் எங்கயிருந்த இந்த ப்ளூ ரோஸ் சுட்டார்னு ஈஸியா கண்டுபிடுச்சிடலாம்.

#7
 இது அன்னாசிப்பழமா? தர்பூசணியா??? பாவம் அவரே கன்ஃபூஸ் ஆகிட்டாரு போல . அன்னாசிப்பழம் எந்த ஊர்லடா குண்டா இருந்திருக்கு? டிசைனர் எதையோ வரைய ஆரம்பிச்சு எப்டியோ முடிச்சு என்னமோ ஒரு பேர கொடுத்துட்டாரு.
 #8 
இங்க தான் ஜீன்ஸ்னு போர்டு மாட்டியிருக்கான் ஆனா காணோமேன்னு சுத்தி சுத்தி தேடினது போதும்.... இது தான் பாஸ் இப்போதைய டிரண்ட். இத நீங்களே கூட டிசைன் பண்ணிக்கலாம். டிசைனருக்கு வேலையாவது மிச்சமாகும். இந்த ஜீன்ஸ் ரொம்ப சீப்பா கிடச்சுரும்லன்னு பகல் கனவு எல்லாம் காணக்கூடாது. இது ஜஸ்ட் 168 டாலர்ஸ் ஒன்லி.... அதாவது இந்திய ரூபாய்ல சொல்லணும்னா 11,300. ஜிஸ்டி எல்லாம் சேக்கல பாஸ்!



#9
 ஒன்.டூ. த்ரீ சொல்லுங்கன்னு எல்.கே.ஜி புள்ளைய கேட்டா கூட கரெக்டா சொல்லுமே... இது எந்த கணக்குல சேரும்னு தெர்லயேப்பா


#10
 நாட்டுப்பற்று இருக்கணும் தான் அதுக்காக இதெல்லாம் ரொம்ப ஓவர்ப்பா.... சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த வாட்டர் போலோ டீம் இவங்க.... அந்த ஜட்டி டிசைனரோட க்ரியேட்டிவிட்டின்னு நினச்சிராதீங்க. அது தான் சிங்கப்பூர் நாட்டோட தேசியக் கொடி.

#11
 இப்டி யாரா ஏமாத்த பாக்குறீங்க.... மொரட்டு தூக்கத்துல எழுப்பினா கூட அவெஞ்சர்ஸ் பத்தி புட்டு புட்டு வைக்கிறவங்கட்ட இந்த கதையெல்லாம் வேலைக்கி ஆகாது. ஏண்டா அவெஞ்சர்ஸும் அவதாரும் ஒண்ணாடா??

#12
 ஏய்... நீங்க பாட்டுக்கு எதாவது ஏடாகூடமா நினைக்காதீங்கப்பா... ஷாப்பிங் பண்றவங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டு... இதுல அந்தம்மாவோட தப்பு எதுவுமில்ல... டிசைனரோட கலர் காம்பினேஷன் அப்பிடி !
 

#13
 டிரஸ்ல தான் சொதப்பீர்ப்பாங்கன்னு பாத்தா ஷூலயும்... இது பெரிய டிசைன்னு ஷூல வேற... என்னத்த சொல்ல?
#14
 இந்த டிஷர்ட்ட மட்டும் போட்டுப் போனா.... ஏய் உண்மைய சொல்லு வீட்ல கிடந்த ரெண்டு டீ ஷர்ட் கிழிச்சு ஒண்ணா தச்சு போட்டிருக்கியான்னு கேக்க மாட்டாங்க? டிசைனர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல தான் துணிய வேஸ்ட் பண்ணாம அதையும் ஒரு ப்ராடெக்ட் ஆக்கிட்டாரு.


#15
 புது டைப் வாட்ச்சா இருக்கும் போலயே... க்ளவுஸ்ல எதுக்குமா வாட்ச்சு... ஒஹோ க்ரியேட்டிவிட்டி க்ரியேட்டிவிட்டி..
 #16 
டிரஸ் டிசைன் பண்ண துணிய எடுத்தப்ப தான் டேபிள் அழுக்கா இருக்கிறத கவனிச்சாரு... அவசரத்துகு டேபிள் துடைக்கிற துணி கிடைக்கல கையில இருக்குறதும் துணி தானான்னு இதால தொடச்சுட்டாரு... தொடச்ச துணிய தூக்கி போட முடியுமா? ட்ரெண்ட்டி பேண்ட் தயார்? இந்த பேண்ட் வேணும்னா வால்மார்ட்ல வாங்கலாம்.

#17
 ஏபிசிடி தெரிஞ்சவங்க மட்டும் இத படிக்கலாம்... சீனாவுக்கு போன பயபுள்ள இந்த சட்டைய வாங்கிட்டு வந்திருக்கு. ஏபிசிடி கரெக்டா இருக்கான்னு செக் பண்ணுங்க பாப்போம்.... உங்களுக்கே கன்ஃபூசனா இருந்தா அந்தச் சட்டையிலயே கீழே ஓரமா ஸ்மால் லெட்டர் ஏபிசிடி கொடுத்திருக்காங்க பாருங்க... அதப் பாத்து செக் பண்ணிக்கலாம்.
 

#18 
தம்பி என்ன புரியாத மொழியில என்னமோ எழுதின சட்டைய போட்டிருக்கிறாரு சார சுத்தி பொம்பளப் புள்ளைங்க வேற இருக்குதுக... பெரிய ஐட்டக்காரனா இருப்பான் போலயே என்று நினைத்துவிடாதீர்கள்... Saturdays Newyork City என்பதைத் தான் அப்படி பிச்சு கொதரி வைத்திருக்கிறார் டிரஸ் டிசைனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment