வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆச்சரியம், ஆனால் உண்மை.. கஜா புயல் தோற்றத்தை உற்று பாருங்கள் ஒரு உண்மை தெரியும்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 14, 2018

ஆச்சரியம், ஆனால் உண்மை.. கஜா புயல் தோற்றத்தை உற்று பாருங்கள் ஒரு உண்மை தெரியும்



தமிழகத்தை நெருங்கும் கஜா புயல், தொடர்ந்து அதிகரிக்கும் வேகம்.

கஜா புயல் சுழற்சியை பார்க்கும்போது யானை போலவே உள்ளது தெரிய வந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நாளை மாலை, கடலூர் மற்றும் பாம்பன் நடுவே கரையைக் கடக்க உள்ளது.

இன்று காலை நிலவரப்படி, கஜா புயல், சென்னையிலிருந்து சுமார் 540 கிலோ மீட்டர் தொலைவில், மையம் கொண்டுள்ளது. இந்த புயலின் வேகம் மற்றும் அதன் பாதை உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.


இப்படி கண்காணிப்பதற்காக, லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று இப்போது வைரல் ஆகியுள்ளது. கஜா புயலால் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி என்பது ஒரு யானையின் உருவத்தை கொண்டிருப்பதாக கூறுகிறது இந்த புகைப்படம். மேலும் அதன் தும்பிக்கை, தமிழகத்தை நோக்கியதாக உள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

கஜா என்பதற்கு யானை என்று ஒரு பொருளும் உண்டு. அந்த வார்த்தையின் பொருளை நிரூபிப்பது போல யானை போல் தோற்றம் அளிப்பதாக உள்ள இந்த படம் வைரல் ஆகியுள்ளது. பொதுவாக புயலின் சுழற்சி என்பது பல்வேறு வடிவங்களை எடுக்கக்கூடியது. வேறு புயலுக்கும் கூட இது போன்ற யானை வடிவம் கிடைக்கும் என்ற போதிலும் கூட, கஜா என்ற பெயருக்கு இது பொருத்தமானதாக உள்ளது தானே.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment